ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

##~##

வருடத்தின் கடைசி நாள் அன்று சந்தை பாசிட்டிவ்வாக முடிவடைந்தது. அதற்கு காரணம், நிதி ஆண்டு முடியும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது என்.ஏ.வி.யை உயர்த்துவதற்காகச் செய்யப் பட்டதுதான்.

அதேபோல, அடுத்த நிதி ஆண்டின் முதல்வாரத்தில் சந்தை கொஞ்சம் பாசிட்டிவ்வாகவே ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், டெக்னிக்கல்படியும் சந்தை கொஞ்சம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சந்தை 200 நாள் மூவிவ் ஆவரேஜ் புள்ளியான 5620 புள்ளிகளில் ஒரு சப்போர்ட் எடுத்துக்கொண்டு வர்த்தகமாகிறது. இந்த நிலையை உடைக்காதவரை 5800 என்பதை நோக்கிச் செல்வதற்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது.

ஏப்ரல் முதல்வாரம் என்ற சென்டிமென்ட், ஒரு டெக்னிக்கல் ரெக்கவரியைத் தந்தாலும் சந்தை சரிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. முதலாவது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. சந்தை எதிர்பார்த்தது 6.2 சதவிகிதம்தான். ஆனால், அதைவிடவும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாக வந்திருக்கிறது. தவிர, இந்தத் தகவல் வியாழனன்று சந்தை முடிவடைந்தப் பிறகுதான் வந்தது.

இரண்டாவது, ஸ்திரமற்ற அரசியல் சூழல். காங்கிரஸ் ஒரு நல்ல கூட்டாளி அல்ல, சி.பி.ஐ. மற்றும் ஐ.டி. துறையை வைத்துதான் ஆட்சி நடத்தி வருகிறது என்றும், மேலும் அக்டோபர்-நவம்பரில் பொதுத் தேர்தலை எதிர்பார்க்கலாம்  என்றும் முலாயம் சொல்லி இருப்பதைக் கவனிக்க வேண்டும். இதை எல்லாம் பார்க்கும்போது எல்லாக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருவதுபோலவே தெரிகிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

மேலும், ஐரோப்பிய பிரச்னையும் இன்னும் சரியாகவில்லை. சைப்ரஸ் நிதிச் சிக்கலில் சிக்கி இருப்பதால், இந்தியாவுக்கு வரும் முதலீடு குறைந்திருக்கிறது. இந்தியாவுக்கு வரும் முதலீடு களில் சைப்ரஸ் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

போர்ட்ஃபோலியோவின் நிலைமை:

கடந்த வாரம் இரண்டு பங்குகள் சராசரி அடைந்திருக் கிறது. இதில் ஜே.கே. சிமென்ட் பங்கு கடந்த வாரத்துக்கு முந்தைய வாரமே சராசரி ஆகிவிட்டது. கடந்த இதழில் அதைக் குறிப்பிடத் தவறிவிட்டோம். இந்த வாரம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கு சராசரி ஆகி இருக்கிறது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கில் நம்முடைய மொத்த முதலீட்டையும் செய்துவிட்டதால் இனி அந்தப் பங்கில் சராசரி செய்யத் தேவைஇல்லை.

ஜி.எஸ்.பி.எல். நிறுவனத் துக்குச் சாதகமான ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இருந்தாலும் சந்தை சென்டிமென்ட் மோசமாக இருப்பதினால் இந்தப் பங்கு மெதுவாக உயர்ந்து வருகிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

சந்தையின் சூழ்நிலை சரியாக இருந்தபோது, நம் போர்ட்ஃபோலியோவில் இருந்த பங்குகள் வேகமாக இலக்கை அடைந்து வெளியேறியது. சூழ்நிலை சாதகமாக மாறும்பட்சத்தில் நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளும் வேகமாக உயர்ந்து வெளியேறும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.