ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் : சந்தை...ஷார்ட் டேர்மில் ஏறலாம் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : சந்தை...ஷார்ட் டேர்மில் ஏறலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

##~##

இன்ட்ரா-டே வாலட்டைலிட்டி மிகவும் அதிகமாகவே இருந்துவருவதால் இந்த வாலட்டைலிட்டி குறையும் வரை பழகுநர்களும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் டிரேடிங்கை தவிர்ப்பது நல்லது என்று கடந்த வாரத்தில் சொல்லியிருந்தோம்.

இந்த வாரத்திலிருந்த மூன்று டிரேடிங் நாட் களிலும் சந்தை நிறைய ஏற்ற, இறக்கத்துடனேயே செயல்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிலவும் உறுதியற்ற சூழ்நிலைகளுடன் சந்தை ஏப்ரல் மாதத்தில் அடியெடுத்து வைக்கப் போகின்றது. டெக்னிக்கலாக இறக்கம் தொடரலாம் என்ற நிலையே தற்போது இருக் கின்றது. பண்டமென்டல்களும் அதை உறுதி செய்வதாகவே இருக்கின்றது.

எப்போதுமே வேகமான இறக்கம் அடுத்தடுத்து வரும்போது ஒரு ரிவர்ஸல் வந்துவிடுவதற்கான வாய்ப்பு உருவாகும். அத்தகைய வாய்ப்பில்தான் வியாழனன்று நடந்த ஏற்றம் நடைபெற்றது எனலாம். எக்ஸ்பைரியின் பிரதிபலிப்பும் வியாழனன்று நடந்த ஏற்றத்திற்கு காரணமானது.

டிரேடர்ஸ் பக்கங்கள் : சந்தை...ஷார்ட் டேர்மில் ஏறலாம் !

இனி வரப்போகும் செய்தி களின் போக்கே சந்தையின் போக்கை நிர்ணயம் செய்வதாக இருக்கும். நெகட்டிவ் செய்திகள் வேகமான இறக்கத்தையும், பாசிட்டிவ் செய்திகள் மிதமான சிறிய ஏற்றத்தையும் கொண்டுவரலாம். டிரேடர்கள் செய்திகளின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டும்.

புதிதாக டிரேடிங் செய்பவர் கள் திங்களன்று டிரேடிங்கைத் தவிர்ப்பது நல்லது.

டிரேடர்ஸ் பக்கங்கள் : சந்தை...ஷார்ட் டேர்மில் ஏறலாம் !
டிரேடர்ஸ் பக்கங்கள் : சந்தை...ஷார்ட் டேர்மில் ஏறலாம் !