மியூச்சுவல் ஃபண்டில் சரியாக முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதிப்பது என்பது கஷ்டமான காரியம் என பல முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். மேலும், பங்குச் சந்தையின் போக்கின் அடிப்படையில் சரியான நேரத்தில் முதலீடு செய்தால் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் எனவும் எண்ணுகிறார்கள். ஆனால், உண்மையில் சரியான பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது மிகவும் எளிது. மியூச்சுவல் ஃபண்டில் நல்ல வருமானம் பெற இரண்டு முக்கிய தகுதிகளை முதலீட்டாளர்கள் பெறவேண்டும்.

எந்த ஃபண்ட்?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், பொதுவாக ஏதாவது நல்ல மற்றும் கெட்ட செய்திகளின் பிரதிபலிப்பைப் பொறுத்து வர்த்தகமாகும். இதில் நல்ல செய்திகள் பெருமளவில் தெரிய வராமல், கெட்ட செய்திகள் மட்டுமே உடனடியாகச் சந்தையை கலங்கடிக்கச் செய்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களால் நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போவதுடன் தங்களது முதலீடு தகுந்த வருமானத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். ஃபண்டைத்

தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது என்றாலும், அதனை நிதி ஆலோசகரின் துணைகொண்டு உங்களது வருங்கால பொருளாதாரத் தேவைகள், ரிஸ்க் எடுக்கும் திறன், உங்களது வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளை அலசி பார்த்து ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

பொறுமை!

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் முதலீடு என்பது முதலீட்டாளர்களின் பொறுமையை சோதிக்கும்விதமாக அமைந்திருக்கும். பல நேரங்களில் ஃபண்டின் என்.ஏ.வி. மதிப்பு குறைந்துவரும்போது முதலீட்டாளர் அந்த ஃபண்டை விற்றுவிட்டு வெளியில் வந்துவிடலாமா என யோசிக்க வைக்கும். ஆனால், எந்தளவுக்குப் பொறுமையாக இருக்கிறார்களோ, அந்தளவுக்கு அதன் பிரதிபலனை சந்தை திருப்பிக் கொடுக்கும். குறுகிய காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் வருமானம் பார்ப்பது என்பது கடினமான விஷயம். ஆனால், நீண்ட காலத்தில் முதலீடு இருக்கும்போது நல்ல வருமானம் கிடைக்கும்.

நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் கிடைக்கும் பலனை சில உதாரணங்களுடன் இங்கே விளக்குகிறேன்.

பத்து டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளைக் கொண்டு போர்ட்ஃபோலியோ அமைத்து ஒவ்வொரு ஃபண்டிலும் தலா 1,000 ரூபாயை 2005, மார்ச் ஒன்றாம் தேதி முதலீடு செய்தோம் என வைத்துக்கொள்வோம். இந்த எட்டு வருட காலத்தில் சென்செக்ஸ் எப்படி செயல்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்தது. அதன்பிறகு உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக 2008-ல் மிகப் பெரிய சரிவைக் கண்டது. அதன்பிறகு சற்று சந்தை முன்னேற துவங்கியது. 2009-க்குப் பிறகு அதிக ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்த எட்டு வருடங்களில் நமது போர்ட்ஃபோலியோ மூன்று மடங்குக்கு மேலான வருமானத்தைக் கொடுத்துள்ளது.

முதலீட்டாளர்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். மியூச்சுவல் ஃபண்டை பொறுத்தவரை, பலதரப்பட்ட துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யும்போது நீண்டகாலத்தில் ரிஸ்க் குறைந்து, நல்ல வருமானத்தைத் தரும். மேலும், மியூச்சுவல் ஃபண்டில் மட்டும்தான் ஃபண்ட் மேனேஜர் தினமும் ஃபண்டின் செயல்பாடுகளைக் கவனித்து சரியாகச் செயல்படாத துறைகளிலிருந்து பங்கை மாற்றி நன்றாகச் செயல்படும் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வார்.

கடந்த எட்டு வருடங்களாக சென்செக்ஸ் செயல்பாடுகளைத் தாண்டி நிலைத்து நின்று நல்ல வருமானம் கொடுத்தப் ஃபண்டுகள் எவை? அது எந்த வகை துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? போன்ற விவரங்களை மேலே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

கடந்த எட்டு வருடங்களாகச் சந்தையின் ஏற்ற, இறங்கங்களைச் சமாளித்து, நாம் முதலீடு செய்த பத்தாயிரம் ரூபாயை பத்து வெவ்வேறு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து, தற்போது 33,943.80 ரூபாயாக வளர்ந்து நிற்கிறது. நாம் முதலீடு செய்ததிலிருந்து தற்போது கிடைத்திருக்கும் லாபத் தொகை 23,943.80 ரூபாய். அதாவது, 16.35 சதவிகித வருமானம் கொடுத்துள்ளது. அதனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நீண்டகாலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் என்பதற்கு மேற்கண்ட போர்ட்ஃபோலியோவே சான்று.

இனியும் என்ன யோசனை! முதலீட்டில் இறங்கவேண்டியதுதானே!