பால பாடம்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் முதலீட்டைத் தொடங்க என்ன செய்யவேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதுகுறித்து புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஏ.முருகனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பெரிய அளவில் ஆவணங்கள் தேவையில்லை. கே.ஒய்.சி. (Know your customer),புகைப்படம் இருந்தாலே போதும். முகவரிச் சான்று, புகைப்பட சான்று, இரண்டு புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து கார்வி, கேம்ஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் சேவை நிறுவனங்களில் கே.ஒய்.சி. படிவத்தைப் பதிவு செய்யலாம்.

நீங்கள் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டிடம் இந்த கே.ஒய்.சி. படிவத்தைப் பூர்த்தி செய்து தரலாம். மியூச்சுவல் ஃபண்டில் பான் நம்பர் இல்லாமலும் முதலீடு செய்ய முடியும். இதற்கு மைக்ரோ எஸ்.ஐ.பி. என்று பெயர். இதில் வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டைத் தொடங்கும்போது கே.ஒய்.சி. நிறைவு செய்ததற்கான ஆதாரம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் பெயரில் காசோலை - இவற்றில் ஏதாவது ஒன்றை கொடுத்து முதலீட்டைத் தொடங்கலாம். இரண்டு லட்சத்திற்குள் இருக்கும் முதலீடு களுக்கு காசோலை கொடுக்கும் தேதியன்று இருக்கும் என்.ஏ.வி. மதிப்பின் அடிப்படையில் யூனிட் களை ஒதுக்குவார்கள். இரண்டு லட்சத்திற்குமேல் இருந்தால் காசோலையை வங்கியில் டெபாசிட் செய்து பணம் கிடைத்த தேதி அன்று இருக்கும் என்.ஏ.வி.க்கு யூனிட்களை ஒதுக்குவார்கள். முதலீட்டுக்கு ஆதாரமான அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் ஒரு வாரத்தில் வீடு தேடி வந்துவிடும். இதை இ மெயில் மூலமும் அனுப்புவார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாகத்தான் முதலீடு செய்யவேண்டும் என்றில்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப மாதம் சிறிய தொகையை எஸ்.ஐ.பி. என்கிற சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் மூலம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம்.

எஸ்.ஐ.பி.யில் முதல் தவணை முதலீட்டிலிருந்து, 30 நாட்கள் அடுத்த தவணை இருக்கும். எஸ்.ஐ.பி. தேதி என்பது பெரும்பாலான நிறுவனங்களில் ஒரேமாதிரிதான் இருக்கும். 5, 10, 15, 20, 25 என்ற தேதிகளில் இருக்கும். இதில் உங்களின் வசதிக்கு ஏற்ப தேதியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இ.டி.எஃப். திட்டம்..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை.

டீமேட் கணக்கு தொடங்க பான் கார்டு நகல், முகவரி மற்றும் புகைப்பட சான்றுகள், புகைப்படம், வங்கிக் கணக்கு எண், வங்கி காசோலை ஆகியவைத் தேவைப் படும். இந்தக் கணக்கை நிர்வகிக்க கட்டணம் உண்டு.

கோல்டு இ.டி.எஃப். ஃபண்டில் லட்சக்கணக்கில் முதலீடு செய்பவர் கள் டீமேட் கணக்கு மூலம்

முதலீட்டை மேற்கொள்ளலாம். மற்றபடி தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள், கோல்டு சேவிங் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பான் நம்பர் இருந்தால்போதும்.

எல்லாம் ரெடி, எங்கே போய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? உங்களூரிலேயே பங்குச் சந்தை புரோக்கரேஜ் நிறுவனங்கள் இருக்கும். இந்த நிறுவனங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள் மூலம் எளிதாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பல்வேறு வங்கிகளும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருவதால், வங்கிகளிலும் விசாரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவர்களிடமும் விசாரித்து அறியலாம்''.

என்ன, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யக் கிளம்பிட்டீங்களா?