சிறப்புப் பேட்டி

முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைக் கூட தொடவில்லையே?

''இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகே வேகமான வளர்ச்சியைக் கண்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் பங்குச் சந்தை கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருப்பதால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் தொகை பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. மேலும், அதிக வட்டி தரும் டெபாசிட்கள், லாபகரமான ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றிலும் மக்களின் முதலீடு அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தால் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சி இரு மடங்குக்கு மேல் இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு குறைந்தாலும், கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது.''

ஓராண்டு காலமாக இந்திய பங்குச் சந்தையில் எஃப்.ஐ.ஐ-களின் முதலீடு அதிகரிக்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை விற்கிறதே, என்ன காரணம்?

''இந்தியா வளர்ச்சி கண்டுவரும் நாடு என்பதில் எஃ.ப்.ஐ.ஐ-க்கள் அதிக நம்பிக்கைக் கொண்டிருக் கிறார்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் சீனா போல் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். மக்கள் தொகை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் எஃப்.ஐ.ஐ.-கள் நம் சந்தையில் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பாவில் வட்டி வருமானம் என்பது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலையில் நம் சந்தை பல மடங்கு லாபத்தைத் தருவதால் இங்கு பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிலைமை வேறு. அவை, முதலீடு செய்துள்ள பங்குகளின் வளர்ச்சி நெகட்டிவ்-ஆக இருப்பதால் பங்குகளை விற்று வருகிறார்கள்.''

இந்தியாவின் 15 பெரிய நகரங்களில் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறிப்பிடும்படி இருக்கிறது. மற்ற நகரங்களில் பெரிய அளவில் இல்லையே?

''இரண்டாம் நிலை நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்களில் வசிப்பவர்களிடமும் அதிக பணம் இருக்கிறது. அவர்களை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைக்க, கிராமப்புற ஏஜென்ட்களுக்கு அதிக கமிஷன் வழங்கும் திட்டம் இருக்கிறது. இதன்மூலம் கிராமங்களில் இருந்தும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு அதிக முதலீடு வர வாய்ப்பு உள்ளது.''

இந்தியாவில் உள்ள பல லட்சம் தபால் அலுவலகங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகம் செய்யலாமே?

''நல்ல யோசனைதான். இதன்மூலம் தபால் துறைக்கும் வருமானம் கிடைக்கும். அரசுக்கும் தேவையான நிதி, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும். தற்போது ஹெச்.டி.எஃப்.சி. வங்கி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. போன்றவை அவற்றின் கிளைகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை விநியோகம் செய்வதுபோல, தபால் அலுவலகம் மூலமும் செயல்படுத்தலாம்.''

நடப்பு 2013-ல் இந்திய பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

''மத்திய அரசின் நேரடி மானியத் திட்டம், தீவிர வரி வசூல் திட்டம் போன்றவற்றால் அரசின் நிதிப் பற்றாக்குறை குறைந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, அதன் பலன் பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கும். இது, தேர்தல் ஆண்டாக இருப்பதால் தற்போது எதுவும் சொல்ல முடியாது. 2013 முதல் 2015 வரையிலான மூன்றாண்டுகளில் இந்திய பொருளாதாரம் அதிகமாக வளர வாய்ப்பு இருக்கிறது.''

அடுத்த மூன்றாண்டுகளில் எந்தத் துறைகள் நன்றாக இருக்கும்?

''சேவைத் துறை, சாஃப்ட்வேர், ஆட்டோ மொபைல், பார்மா மற்றும் வங்கித் துறை.''

சிறு முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?

''பெரும்பாலானோர் மியூச்சுவல் ஃபண்டுகளில் குறிக்கோள் இல்லாமல் முதலீடு செய்வதால் சந்தை சிறிது சரியத் தொடங்கினாலும் யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். இது தவறு. பிள்ளைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் என குறிக்கோள் நிர்ணயித்து நிதானமாகச் செயல்பட்டால் நல்ல வருமானத்தைப் பார்க்க முடியும்.

மேலும், முதலீடு செய்யும் காலத்தில் சந்தை இறங்கி, என்.ஏ.வி. மதிப்பு குறைவாக இருந்தால்தான் அதிக யூனிட்கள் கிடைத்து, பிறகு சந்தை ஏறும்போது அதிக லாபம் கிடைக்கும் என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். ஈக்விட்டி, ஈக்விட்டி ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு (கோல்டு இ.டி.எஃப். அல்லது கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்) போன்றவற்றில் முதலீட்டை பிரித்து செய்வதன் மூலம் ரிஸ்க்கும் குறைந்து லாபமும் அதிகமாகும்''.