சூட்சுமம்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது சிறு முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்யும் முதலீட்டு முறையாக இருக்கிறது. இதிலுள்ள ரிஸ்க்கைத் தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்துவிட்டு அவதிப்படுபவர்கள் அதிகம். அதுபோன்றவர்களுக்கு உதவும்விதமாக செபி அமைப்பு 'கலர் கோடு’ (நிறக் குறியீடு) என்கிற ரிஸ்க்கை எடுத்துச் சொல்லும் குறியீட்டை நடைமுறைக்குக் கொண்டுவரப் போகிறது. இந்த நிறக் குறியீடு எந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி அமைப்பின் துணைத் தலைவர் ரமேஷிடம் கேட்டோம்.

''2013 ஜூலை மாதத் திலிருந்து செபி அறிவித்துள்ள நிறக் குறியீடு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த நிறக் குறியீடு வசதியைப் பயன்படுத்தி மியூச்சுவல் ஃபண்டுகளின் மீதான ரிஸ்க்கை முதலீட்டாளர்கள் அறிந்துகொள்ள முடியும். ஃபண்ட் முதலீட்டில் இரண்டுவகையான ரிஸ்க் உண்டு. ஒன்று, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீதான ரிஸ்க். மற்றொன்று, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும் ஆவணங்கள் மீதான ரிஸ்க். இந்த இரண்டு வகையான ரிஸ்க்கையும் செபி அறிவித்திருக்கும் நிறக் குறியீடு பிரதிபலிக்கும்'' என்றவர், செபி வகைப்படுத்தியுள்ள நிறங்களையும், எந்த நிறம் எந்தவகையான ரிஸ்கைக் குறிப்பிடுகின்றது என்பதையும் விளக்கிச் சொன்னார்.

செபி, மூன்று நிறங்களின் அடிப்படையில் ரிஸ்கை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது. புளூ நிறம், குறைவான ரிஸ்கையும், மஞ்சள் நிறம், சராசரியான ரிஸ்கையும், பிரவுன் நிறம், அதிக ரிஸ்கையும் குறிக்கும்.

புளூ - குறைவான ரிஸ்க் !

மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரத்தில் ரிஸ்க் கிரேட் புளூ நிறத்தில் குறிப்பிட்டிருந்தால் குறைவான ரிஸ்கைக்கொண்டதாக இருக்கும். உதாரணமாக, கடன் ஃபண்டுகளான ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ப்ளான்கள், லிக்விட் ஃபண்ட், இன்கம் ஃபண்ட் மற்றும் கில்ட் ஃபண்ட் போன்றவை புளூ நிறத்தில் குறிப்பிடப்படும். குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் புளூ நிறக் குறியீடு விவரத்தைத்

தெரிந்துகொண்டு அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

மஞ்சள் - சராசரி ரிஸ்க் !

சராசரி ரிஸ்க் உள்ள ஃபண்டுகளுக்கு மஞ்சள் நிறம் காண்பிக்கப்பட்டிருக்கும். மன்த்லி இன்கம் ப்ளான்கள் அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகள் சாரசரியான ரிஸ்க் கொண்டவை என்பதால், மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். அதனால் சராசரியாக ரிஸ்க் எடுக்க விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இந்தவகையான ஃபண்டுகளில் முதலீடு செய்ய முன்வரலாம்.

பிரவுன் - அதிக ரிஸ்க் !

பிரவுன் நிறம் என்பது அதிக ரிஸ்க்கொண்ட குறியீடு. உதாரணத்திற்கு, ஈக்விட்டி ஃபண்டுகள், இண்டெக்ஸ் ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட், ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் செக்டோரல் ஃபண்டுகள் இந்த நிறத்தில் வரும். இந்தவகையான ஃபண்டுகளில் முதலீடு செய்ய முன்வருபவர்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பது அவசியம்.

மேலே சொன்ன மூன்று நிறக் குறியீடுகள், ஒரு மியூச்சுவல் ஃபண்டை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அதிலிருக்கும் ரிஸ்க்கை அதன் நிறக் குறியீட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொள்ள நிச்சயம் உதவும்'' என்று முடித்தார் ரமேஷ்.

ஆனால், மும்பையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் அனலிஸ்ட் ஒருவரின் கருத்து. ''மூன்று நிறத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மியூச்சுவல் ஃபண்டுகளின் முழுத் திறனையும் முடிவு செய்துவிட முடியாது. எம்.ஐ.பி. ஃபண்டுகளில் 5 முதல் 10% வரை மட்டுமே ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 70% வரை ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், இந்த இரண்டுவகையான ஃபண்டுகளும் சராசரி ரிஸ்கைக் குறிக்கக்கூடிய மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டு உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு குழப்பத்தையே தரும். அந்தவகையில் நிறக் குறியீடு இன்னும் செழுமைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, வருமானம் மீதான ரிஸ்க் தனியாகவும், முதலீடு மீதான ரிஸ்க் தனியாகவும் குறிப்பிடுவது அவசியம்'' என்று முடித்தார்.

இந்த நல்ல விஷயத்தை இன்னும் நன்றாக செழுமைப்படுத்தலாமே!