நாம் அனைவரும் ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிப்பதற்கு பென்ஷன் அல்லது அதைப்போன்ற சீரான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். இம்மாதிரி பென்ஷன் திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அளிக்கின்றன. நமது ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரி இந்த பென்ஷன் ஃபண்டுகள் இருக்குமா அல்லது ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களே சிறந்ததா?, இந்த இரண்டு ஃபண்டுகளுக்கும் இடையே உள்ள சாதக - பாதகங்கள் என்ன?, இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்யலாம் என்கிற கேள்விகள் முக்கியமானவை. அந்தக் கேள்விகளுக்கான பதில்களை இனி பார்ப்போம்.

பென்ஷன் ஃபண்டுகள்:

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்தான் பென்ஷன் ஃபண்ட் திட்டங்களை அளிக்கின்றன. இந்த ஃபண்ட் திட்டங்களில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த ஃபண்டுகளுக்கு லாக்-இன் காலம் இருக்கிறது. சில ஃபண்டுகளில் லாக்-இன் காலம் கிடையாது என்றாலும், வெளியேறும் கட்டணம் அதிகமாக இருக்கும்.

இந்த ஃபண்டுகள் அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்கிறது. ஈக்விட்டி என்று சொன்னாலும்கூட பாதுகாப்புக்காக அதிகமாக லார்ஜ் கேப் பங்குகளிலே முதலீடு செய்கிறது. மீதமுள்ள தொகையைக் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறது.

இத்திட்டங்களில் ஓய்வுபெறும் காலம்வரை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய முடியும். அதேபோல, சிஸ்டமேட்டிக் முறையில் பணத்தை வெளியே எடுத்துக்கொள்ள முடியும். மாத, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு இடைவெளிகளில் முதலீட்டினை எடுத்துக்கொள்ள முடியும்.

ஃபண்ட் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளருக்கு 45 வயதுக்கு மேல் ஆகும்போது, தானாக ரிஸ்க் குறைவாக இருக்கும் திட்டங்களில் மாறிக்கொள்ளும். 60 வயதுக்கு மேல் ஆகும்போது இன்னும் ரிஸ்க் குறைவாக இருக்கும் திட்டங்களுக்கு மாறிக்கொள்ளும்.

சாதகம்;

* பென்ஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது வரி விலக்கு (80சி பிரிவு) உண்டு.

* நுழைவுக் கட்டணம் கிடையாது.

* லாக் - இன் காலம் இருக்கிறது என்பதால் முதலீட்டை நீண்டகாலத்துக்குத் தொடரும் ஒழுங்குமுறை இருக்கிறது.

* பங்கு சார்ந்தவற்றில் 40 சதவிகித முதலீடு இருப்பதால், மற்ற முதலீடுகளைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு; 58 வயது முடிந்தபிறகு (லாக்-இன் காலம் முடிந்தபிறகு மட்டுமே) முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்க முடியும்.

பாதகம்;

* திடீரென பணம் தேவைப் பட்டால் எடுக்க முடியாது. சில ஃபண்டுகளில் அதிகபட்சம் 5% வெளியேறும் கட்டணம் இருக்கிறது.

* கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் போலவே செயல் படுவதால், அந்த ஃபண்டுகள்போல வரிச் செலுத்தவேண்டி இருக்கும்.

* பி.எஃப்., பி.பி.எஃப். போல உத்தரவாத வருமானம் இதில் கிடையாது.

ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்கள்:

இந்த ஃபண்டுகளில் திரட்டப் படும் மொத்த முதலீடும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. அதேசமயம், அதிக ரிஸ்க்கும் இருக்கிறது. நீண்டகாலம் முதலீடு செய்யும்பட்சத்தில் ரிஸ்க் குறைந்து நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

சாதகம்;

* பலவகையான துறைகளிலும் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைந்து வருமானம் அதிகமாக இருக்கும்.

* குறைந்த ரிஸ்க், நடுத்தர ரிஸ்க் மற்றும் அதிக ரிஸ்க் என முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகள் இருக்கிறது.

* ஒரு ஃபண்ட் நிறுவனத்துக்குள்ளேயே, வேறு ஒரு ஃபண்டுக்கு எளிதாக, குறைந்த கட்டணத்தில் (ஸ்விட்ச்) மாற முடியும்.

* மிக எளிதாக (ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில்) பணத்தைத் திரும்ப எடுக்க முடியும்.

பாதகம்;

* வருமானம் ஃபண்ட் மேனேஜரை சார்ந்திருக்கிறது; ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களில் செலவுக்கான எக்ஸ்பென்ஸ் ரேஷியோ கொஞ்சம் அதிகம்.

* சந்தை அதிகம் சரியும்போது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி. மதிப்பு அதிகமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. சுருக்கமாக, இதில் ரிஸ்க் அதிகம்.

என்ன செய்யலாம்.?

பென்ஷன், ஓய்வுக்காலம் என என்ன பெயர் சொல்லி நாம் அழைத்தாலும், இறுதியாக நாம் எதிர்பார்ப்பது நல்ல வருமானத்தையே. அந்த வருமானம் ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களில்தான் கிடைக்கிறது.

பென்ஷன் திட்டங்களில் இருக்கும் ஒரே அம்சம் 'லாக்-இன்’ காலம்தான். அதாவது, குறிப்பிட்ட காலம் வரை இந்த ஃபண்டுகளில் கைவைக்க முடியாது. இதற்கு நாம் நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதுதான் சிறந்ததாக இருக்க முடியுமே தவிர, கட்டாயத்துக்காக பென்ஷன் திட்டங்களை எடுக்கவேண்டாம்.

மேலும், பென்ஷன் திட்டங் களில் முதலீடு செய்யும்போது வரி விலக்கு கிடைக்கும். ஆனால், பணத்தை எடுக்கும்போது, வரிச் செலுத்தவேண்டும். ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களில் முதலீட்டுக்கு வரிச் சலுகை இல்லை. ஒரு வருடத்துக்கு மேலே முதலீட்டை தொடரும்போது வருமானத்துக்கு வரிச் செலுத்த தேவை இல்லை.

ஒருவேளை முதலீட்டுக்கும் உங்களுக்கு வரி விலக்கு வேண்டுமானால் இ.எல்.எஸ்.எஸ். (இதுவும் ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டம்தான்) திட்டங்களே சிறந்ததாக இருக்கும். இதிலும்கூட, மூன்று வருடங்கள்தான் லாக்- இன் காலம்.

சிறிய வயதில் இருப்பவர்கள் ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் பங்கு சார்ந்த பேலன்ஸ்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதே நல்லதாக இருக்கும்.