Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

சந்தையின் ஏற்றம் இந்த வாரமும் தொடர்ந்தது. வார இறுதியில் ஒரு சரிவு வந்தாலும், நமது போர்ட்ஃபோலியோவின் எந்தப் பங்கும் சராசரி ஆகவில்லை. எலென்டாஸ் பெக் இந்தியா பங்கு இந்த வாரத்தில் திடீரென சரிவடைந்ததுபோல் இருக்கலாம். ஆனால், அந்நிறுவனம் ஒரு பங்குக்கு 92 ரூபாய் டிவிடெண்ட் தந்திருக்கிறது. டிவிடெண்ட் தந்ததினால் வந்த சரிவுதான் அது. நம்மிடம் இருக்கும் எட்டு பங்குகளுக்கு 736 ரூபாய் டிவிடெண்ட் கிடைத்திருக்கும். இது நமக்கு கூடுதல் தொகைதான். இந்த டிவிடெண்டுக்கு வரி கிடையாது என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

இப்போதைக்கு இந்தப் பங்கு மிகவும் கவர்ச்சிகரமாக வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய நிலையில் இருந்து இந்தப் பங்கு 40% வரை லாபம் கொடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த வாரம் இப்பங்கில் முதலீடு செய்யலாம். ஏற்கெனவே 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்து விட்டோம். மீதமிருக்கும் 5,000 ரூபாயையும் இப்போதே முதலீடு செய்துவிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சூழ்நிலையில் நமது விதிமுறையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டுவருவது சரியாக இருக்கும் என்று நினைக் கிறேன். ஒவ்வொரு பங்கினை பரிந்துரைக்கும்போதும் மிகச் சிறிய விலை வித்தியாசம் காரணமாக அந்தப் பங்கினை நாம் வாங்க முடியாமல் போய் விடுகிறது. உதாரணத்துக்கு, டாடா காபி பங்கினை இரண்டுமுறை பரிந்துரை செய்தும் அந்தப் பங்கினை நம்மால் வாங்க முடியவில்லை. 1,000 ரூபாய்க்கு கீழே அந்தப் பங்கினை பரிந்துரை செய்தேன். ஆனால், இந்தப் பங்கு இப்போது 1,500 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. அதனால் எலென்டாஸ் பெக் பங்கினை திங்கள் அன்று வாங்குங்கள்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

அன்றைய வர்த்தகத்தின் சராசரியாக விலையை போர்ட்ஃபோலியோவில் நாம் எடுத்துக்கொள்வோம். இது சிலருக்கு சௌகர்யங்களை யும், சிலருக்கு அசௌகர்யங் களையும் தரக்கூடும். இருந்தாலும், சில ரூபாய் விலை வித்தியாசத்தில் முதலீடு செய்யாமல் இருக்கக் கூடாதே என்பதற்குதான் இந்த மாற்றம்.

ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் முடிந்துவிட்டது. மே மாத கான்ட்ராக்டில் 24 நாட்கள் வர்த்தகம் இருக்கிறது.  சந்தையில் ஒரு 'ஸ்விங்’ இருக்கக்கூடும். 5975-க்கு மேலே செல்லும்போது சந்தை புல்லிஷ் பாதையிலும், 5700 என்பது முக்கியமான சப்போர்ட் புள்ளியாகவும் இருக்கிறது. பொதுவாக, 'செல் இன் மே அன் கோ அவே’ (sell in may and go away) என்று சொல்வார்கள். ஆனால், இதுவரை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாகவே வந்திருக்கிறது. இனி வரும் முடிவுகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தே இந்தப் பழமொழி பலிக்குமா என்பது தெரியவரும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism