Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

Published:Updated:

பங்குச் சந்தை

##~##

''ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுப்பதினால், சில பங்குகளை வாங்க முடிவதில்லை. எனவே, எலென்டாஸ் பெக் பங்கினை திங்கட்கிழமை அன்று வர்த்தகமாகும் விலையில் வாங்கிவிடுங்கள். அதன் சராசரி விலையை நம் போர்ட்ஃபோலியோவில் எடுத்துக்கொள்ளலாம்'' என்று கடந்த வாரம் சொல்லி இருந்தேன். கடந்த திங்கள் அன்று அந்தப் பங்கின் சராசரி விலை 508 ரூபாய். அந்த விலையை வாங்கிய விலையாக எடுத்துக்கொள்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதேபோல, இந்த வாரம் ஃபைசர் பங்கில் மீதமிருக்கும் 5,000 ரூபாயை திங்கட் கிழமை முதலீடு செய்யவும். திங்கட்கிழமை சராசரி விலையை நாம் எடுத்துக்கொள்வோம். இந்த வாரம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு ஓபன் ஆஃபர் கொடுத்தது. இதன் காரணமாக அந்தப் பங்கு மிகவும் வேகமாக ஏறியது. ஹெச்.யூ.எல். போல எம்.என்.சி. நிறுவனங்கள், புரமோட்டர் பங்குகளை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. லாபம் அதிகரிக்கும்போது, அதை ராயல்டியாக எடுத்துக்கொள்வது சந்தையில் சலசலப்பு ஏற்படுகிறது. அதனால் புரமோட்டர்களின் பங்கினை அதிகரித்து, அதன்மூலம் லாபத்தை, டிவிடெண்டாக எடுத்துக்கொள்வது நல்லது என்று எம்.என்.சி. நிறுவனங்கள் நினைக்கின்றன. மேலும், ஃபைசர் பங்கு ஒரு முக்கியமான சப்போர்ட் நிலையை எடுத்துக்கொண்டு வர்த்தக மாகிறது. இந்தப் பங்கும் ஓபன் ஆஃபர் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

இந்த வாரம் ஒரு புதிய முயற்சி எடுக்கலாம் என்று இருக்கிறேன். 'குயிக் பிக்’ என்ற பிரிவில் ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறேன். இது அனைத்து வாரமும் இருக்காது. எப்போது பிரமாதமான வாய்ப்புகள் இருக்கிறதோ, அப்போது மட்டும் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். இந்தப் பங்கு நமது போர்ட்ஃபோலியோவில் சில வாரங்கள் மட்டுமே இருக்கும். இந்தப் பங்குக்கு பரிந்துரை விலை, ஸ்டாப் லாஸ், இலக்கு விலையைக் கொடுக்கிறேன். இதை கவனமாக கடைப்பிடிக் கவும். குறிப்பிட்டகால இடைவெளியில் இலக்கு விலை அல்லது ஸ்டாப்லாஸ் என இரண்டில் ஒன்று 'டிரிகர்’ ஆகும். இல்லையெனில், மூன்றுவார இடைவெளியில் லாபம் அல்லது நஷ்டத்தை புக் செய்துவிடலாம். இந்த வாரம் பஜாஜ் கார்ப் பங்கினை வாங்குங்கள். காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கிறது. அதேசமயம், டெக்னிக்கலா கவும் ஏற்றம் தெரிகிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

13 வர்த்தக நாளில் சந்தை 5477 புள்ளியில் இருந்து 6019 புள்ளி வரை சென்றது. 5840-க்கு கீழே செல்லாத வரை இறக்கம் இருக்காது. அதேசமயம், 6039, 6130 புள்ளிகளைத் தாண்டாத வரை சந்தை ஏறி, செல்லிங் பிரஷர் காரணமாக இறங்குவது நடக்கும். போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் ரூ.2,215.00

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism