Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

Published:Updated:

பங்குச் சந்தை

##~##

கடந்த வாரம் ஃபைசர் பங்கினை திங்கட்கிழமை விலையில் சராசரி செய்யச் சொல்லி இருந்தேன். அதனால் அன்றைய சராசரி விலையான 1,051 ரூபாயை வாங்கிய விலையாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல, கடந்த வாரம் 'குயிக் பிக்’ என்ற பிரிவில் பஜாஜ் கார்ப். பங்கினை வாங்கச் சொல்லி இருந்தேன். அந்தப் பங்கினை திங்கட்கிழமை அன்றே நீங்கள் வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்றைய வர்த்தகத்தின் சராசரி விலையான 254 ரூபாயை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் பங்கு இப்போது 7 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதனால் இப்போது ஸ்டாப்லாஸை வாங்கிய விலைக்கு, அதாவது, 254 ரூபாய்க்கு உயர்த்திக்கொள்ளலாம். 280 ரூபாயைத் தாண்டும்போது எளிதாக நம்முடைய இலக்கு விலையை அடைய வாய்ப்பு இருக்கிறது.

இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் 19 பங்கு இருக்கிறது. இன்னும் ஓர் இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தையும் இப்போது 'குயிக் பிக்’ பிரிவில் நிரப்பிவிடலாம். இந்த வாரம் நான் தரப்போகும் பங்கு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா. இந்தப் பங்கு நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் காலம் ஐந்து வாரங்கள்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இந்தப் பகுதியை வெள்ளிக்கிழமை இரவு இறுதி செய்தோம். ஆனால், சனிக்கிழமை அன்று சிறப்பு வர்த்தகம் நடக்க இருப்பதால், அன்றைய தினம் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?, இந்தப் பங்கின் விலை ஏறுமா, அல்லது இறங்குமா என்பதைக் கணிக்க முடியாது. அதனால் 980 ரூபாய்க்கு கீழே

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

வர்த்தகமானால் மட்டுமே இந்தப் பங்கை வாங்கவும். இலக்கு விலை

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

1,100.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தது, ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் சட்ட அமைச்சர் அஷ்வனி குமார் ராஜினாமா செய்தது, அமைச்சரவையில் மாற்றங்கள் வர இருப்பது ஆகிய முக்கிய நிகழ்வுகள் சந்தை இறங்குவதைத் தடுக்கலாம். 6130 என்ற நிஃப்டி புள்ளிகளை தாண்டும்பட்சத்தில் முந்தைய அதிகபட்ச புள்ளியைத் தாண்டுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்க சந்தையான டவ்ஜோன்ஸ், தன்னுடைய முந்தைய உச்சத்தை 65 மாதங் களுக்குப் பிறகு மார்ச் மாதம் தொட்டது. அதாவது, 2007 அக்டோபருக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் தாண்டியது. ஆனால், இந்தியச் சந்தை 2008 ஜனவரியில்தான் உச்சத்தைத் தொட்டது. இன்னும் 65 மாதம் முடியவில்லை. அமெரிக்க சந்தையை ஃபாலோ செய்யும் இந்திய சந்தை விரைவில் தன்னுடைய முந்தைய உச்சத்தைத் தாண்டக்கூடும். அப்படித் தாண்டும்பட்சத்தில் நான் 2009-ம் ஆண்டு என்ன சொன்னேனோ, அது நடக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை உயர்ந்துகொண்டே வருவதால் நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபமும் உயர்ந்துகொண்டே வருகிறது. போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

5,669.85.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism