நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
##~## |
நிஃப்டி சற்று ஏறுவதற்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற தோற்றத்தை தந்தபோதிலும், வருகின்ற திங்களன்று ஒரு சிறு இறக்கத்திற்கு பின்னரே இது நடக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து வால்யூமுடன் ஏற்றத்தைச் சந்தித்தால் 6175 வரை மேலே சென்ற பின்னர் மட்டுமே கரெக்ஷன் வருவதற்குண்டான வாய்ப்புள்ளதைப்போல் தெரிகின்றது என்றும் சொல்லியிருந்தோம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வார இறுதியில் வாராந்திர அளவில் 150 பாயின்ட் ஏற்றத்தில் நிஃப்டி 6094.75-ல் முடிவடைந்தது. வெள்ளியன்று குளோஸிங்கையும் சென்ற வார டிரேடிங்கையும் வைத்துப் பார்த்தால், சிறியதொரு கரெக்ஷன் எந்த நிமிடமும் வந்து விடலாம் என்ற தோற்றத்தை டெக்னிக்கலாக தருகின்றது. 5950 வரையிலும் உடனடியான கரெக்ஷன் வந்து பின்னரே மேல் நோக்கியதொரு மூவ் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, திங்களன்று ஓப்பனிங்கில் வியாபாரம் செய்வதை தவிருங்கள்.
திங்களன்று இறக்கம் வந்தால் புதன்கிழமைக்கும் மேல் வேகமான ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பி ருக்கின்றது. எனவே, திங்கள் முதலே ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிருங்கள். உடனடியாக லாபங்களை புக் செய்துகொள்ளுங்கள்.
திங்களன்று இறக்கம் வால்யூமுடன் இருந்து குளோஸானால் வரும் வாரத்தில் 5835 லெவல்கள் வரை நிஃப்டி செல்லும் வாய்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

