Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

தொடர்ந்து ஐந்து வாரங்களாக உயர்ந்து கொண்டே வந்த சந்தை இந்த வாரம் கொஞ்சம் இறங்கியது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பு காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்து, ஜப்பானின் யென் மதிப்பு சரிந்தது. இதனால், ஜப்பான் பங்குச் சந்தையான நிக்கி சுமார் 7 சதவிகிதம் சரிந்தது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சரிந்தது.

ஜப்பான் பங்குச் சந்தையின் சரிவைப் பற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை. கடந்த ஒரு வருடத்தில் 90 சதவிகித அளவுக்கு அந்த சந்தை உயர்ந்தது. அதில் ஒரு சிறிய இறக்கம் இப்போது வந்திருக்கிறது, அவ்வளவுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய சந்தையைத் தவிர, மற்ற சந்தைகள் நன்றாக ஏறி இருக்கிறது. இந்திய சந்தையும் வேகமாக உயர வாய்ப்பு இருக்கிறது. 5477 புள்ளியில் இருந்து 6229 புள்ளிகள் வரை தொடர்ந்து ஐந்து வாரங்கள் உயர்ந்தது. ஐந்து வார ஏற்றத்துக்குப் பிறகு ஓரிரு வார சரிவு என்பது இருக்கக்கூடியதுதான். ஒருவேளை, இந்த சரிவு இல்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும். இதுபோன்ற சரிவு களை முதலீட்டுக்கான நேரமாகவே பார்க்க வேண்டும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

ஏற்கெனவே சொன்னதுபோல, அமெரிக்க சந்தை 65 மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்தது. இந்திய சந்தைக்கு 65 மாதம் என்பது வரும் ஜூன் மாதம். இந்திய சந்தைகளும் வரும் ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை அடைய வாய்ப்பு இருக்கிறது. எப்போது பருவமழை மும்பையை அடைகிறதோ, அப்போது 6357 என்ற புதிய நிலையைத் தாண்டி நிஃப்டி செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 7000 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி செல்ல வாய்ப்பு இருக்கிறது.

கடந்த வாரத்தில் 'குயிக்பிக்’ பிரிவில் ஆர்.இ.சி. பங்கினை வாங்கச் சொல்லி இருந்தேன். இந்தப் பங்கு  திங்கட்கிழமை சராசரி விலை 241 ரூபாய். அதேபோல, எல் அண்ட் டி ஃபைனான்ஸ் பங்கினை நீண்டகாலத்துக்கு வாங்கச் சொன்னேன். இந்தப் பங்கின் சராசரி விலை 83.

எந்த பங்கினையும் சராசரி செய்ய வேண்டாம் என ஏற்கெனவே சொல்லிவிட்டேன். சந்தை சிறிதளவு சரிந்ததால் எந்த பங்கும் இலக்கு விலையை அடையவில்லை.

மே-12 தேதியிட்ட இதழில் குயிக்பிக் பிரிவில் பஜாஜ்கார்ப் பங்கினை பரிந்துரை செய்திருந்தேன். அந்த பங்கு நம்முடைய போர்ட்ஃபோலியோவில் மூன்று வார காலம் மட்டுமே தங்கும் என்பதால் திங்கட்கிழமை அந்தப் பங்கினை விற்றுவிடவும். அன்றைய சராசரி விலையை நாம் விற்ற விலையாக எடுத்துக்கொள்வோம்.

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, அந்தப் பங்கு 268 ரூபாயில் வர்த்தகமாகிறது. (அதாவது, நாம் வாங்கிய விலையிலிருந்து சுமார் 6 சதவிகிதம் அதிகமாக!) ஆனால், நாம் வாங்கிய பிறகு அந்தப் பங்கு 280 ரூபாய்க்கு மேலேகூட சென்றது. லாபம் இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். இந்தப் பங்கு குறுகிய காலத்தில் 320 ரூபாய்க்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், நம் விதிமுறைபடி திங்கட்கிழமை விற்றுவிடுவோம்.

பஜாஜ்கார்ப் பங்கு வெளியேறியதால், காலியாக இருக்கும் இடத்துக்கு என்ன பங்கை வாங்குவது என்பது குறித்து அடுத்த வாரம் சொல்கிறேன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism