Published:Updated:

பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !

பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

நிஃப்டி கடந்த 26 வர்த்தக நாட்களில் 5477 புள்ளிகளில் இருந்து 6229 புள்ளி வரை உயர்ந்து  இப்போது ஒரு ரேஞ்ச் பவுண்டில் வர்த்தகமாகி வருகிறது. ''இந்திய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளைப் பார்க்கும்போது அடுத்த ஏற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை ஏற்றம் வராவிட்டாலும் இறக்கம் என்பது பெரிய அளவில் இருக்காது'' என்பதுதான் பெரும்பாலான அனலிஸ்ட்களின் கருத்தாக இருக்கிறது.

இச்சூழ்நிலையில் சந்தை உயர்ந்தாலும், பல பங்குகளின் விலை பெரிய அளவில் உயராமலே இருக்கிறது. இச்சூழ்நிலையில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும், முதலீடு செய்யக்கூடிய பங்குகள் பற்றி சொல்ல முடியுமா என்று இந்தியா நிவேஸ் நிறுவனத்தின் அனலிஸ்ட் விக்னேஷிடம் கேட்டோம். சந்தையின் போக்கு குறித்தும், இப்போது வாங்க வேண்டிய பங்குகளையும் நமக்குச் சொன்னார்.

''நம் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பெரிய மாற்றமும் தெரிய வில்லை. இருந்தாலும் நம் சந்தை உயரக் காரணம், உலக அளவில் அதிகரித்திருக்கும் பணப்புழக்கம் தான். அதிக பணப்புழக்கம் காரணமாக சந்தை உயர்ந்து, இப்போது ஒரு ரேஞ்ச் பவுண்டில் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மேலே சந்தை செல்ல உடனடியாக எந்த காரணமும் தெரியவில்லை. இப்போதைக்கு 5500 - 6200 என்ற பெரிய ரேஞ்சில் சந்தை வர்த்தகமாகிறது.  5500 புள்ளிகளுக்கு கீழே சந்தை செல்வதற்கு வாய்ப்பு குறைவே. ஆனால், மேலே செல்ல நிறைய வாய்ப்புண்டு.  சந்தை மேலே செல்ல அடிப்படையில் நிறைய மாற்றம் நடக்கவேண்டும். பொருளாதார  சீர்திருத்தங்கள், புதிய முதலீடுகள், கடன் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு போன்றவை நடந்தால்தான் சந்தை உயரும்.

பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !
பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !

சந்தை உயரும் சமயத்தில் பங்குகளை வாங்குவதைவிட இப்போது வாங்குவதே சிறந்தது'' என்றவர், அவர் பரிந்துரை செய்த பங்குகளை எப்படி தேர்வு செய்தார் என்பதையும் சொன்னார்.

''நான் தந்திருக்கும் பங்குகள் இந்த ஏற்றத்தில் பெரிதாக கலந்துகொள்ளவில்லை. என்றாலும், அடிப்படையில் பலமான பங்குகள் இவை. இப்பங்குகள் இதற்கும் கீழே விலை சரிய வாய்ப்பு குறைவு. இப்பங்குகளை இப்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை 6 மாதம் - 1 வருடத்துக்கானது'' என்றார் மறக்கமால்.  

இனி அவர் பரிந்துரை செய்த பங்குகள் உங்களுக்காக!

பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !
பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !
பங்கு முதலீடு : உயரும் மார்க்கெட்... பலமான பங்குகள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு