Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி

பங்குச் சந்தை

##~##

நமது போர்ட்ஃபோலியோவில் மூன்று வாரங்களுக்கு மட்டுமே இந்தப் பங்கு இருக்கும் என்று சொல்லி பஜாஜ் கார்ப் பங்கினை பரிந்துரை செய்திருந்தேன். அந்தப் பங்கினை கடந்த திங்கட்கிழமை அன்று விற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய தினத்தின் சராசரி விலை 271 ரூபாய். நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பதன் மூலம் 663 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்த லாபம் நமக்குக்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கிடைத்திருக்காது. அதாவது, குயிக்பிக் பிரிவில் ஆர்.இ.சி. பங்கினை வாங்கி இருந்தோம். வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவால், அந்தப் பங்கின் ஸ்டாப்லாஸ் 'டிரிகர்’ ஆனதால் 656 ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். 225 ரூபாயில் அந்தப் பங்கினை விற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நம்முடைய போர்ட்ஃபோலியோவில் இருக்கும் தரமான பங்குகள்கூட சிற்சில காரணங்களால் உயராமல் இருக்கிறது. குஜராத் கேஸ் மற்றும் ஜி.எஸ்.பி.எல். பங்குகள் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக உயராமல் இருக்கிறது. இத்தனைக்கும் ஜி.எஸ்.பி.எல்.-ன் காலாண்டு முடிவு நன்றாகவே வந்திருக்கிறது.

பொதுவாகவே, பொதுத் துறை பங்குகள் மற்றும் பொதுத் துறை வங்கிகள் (ஓ.என்.ஜி.சி. தவிர) இந்த சீஸனில் பெரிய அளவில் உயரவில்லை. அதனால், அரசாங்கத்தின் தலையீடு இல்லாத, சரியான நிர்வாகம் தரும் பங்கினை போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

வெளியேறிய பங்குகளுக்குப் பதிலாக இந்த வாரம் கெடிலா (சிகிஞிமிலிகிபிசி) பங்கினை பரிந்துரை செய்கிறேன். திங்கட்கிழமை (ஜூன் 3) சராசரி விலை வாங்கும் விலையாக எடுத்துக்கொள்ளப்படும். சமீபத்தில் வந்த இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு நன்றாக இருக்கிறது. ஏற்கெனவே எந்த பங்கினையும் சராசரி செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இந்தப் பங்கின் மீது நம்பிக்கை இருப்பதால் ஸ்டாப்லாஸும் நான் தரப்போவதில்லை. 935 ரூபாய் என்பதை இலக்கு விலையாகக்கொண்டு இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இந்தப் பங்கின் உச்சபட்ச விலை 980 ரூபாய். இந்த விலையைத் தாண்டும்பட்சத்தில், இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைவான ஜி.டி.பி. வளர்ச்சி, கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு ரூபாயின் சரிவு, வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு குறைவு என்பது உள்ளிட்ட காரணங் களால் வெள்ளிக்கிழமை சந்தை கடுமையாகச் சரிந்தது. இப்போதைக்கு சந்தையில் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. அதனால், 5930 புள்ளிகளுக்குக் கீழே சரியும்பட்சத்தில், நிஃப்டியில் 200 புள்ளிகள் வரையும் சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, இதுதான் கடைசி சரிவாக இருக்கும். இப்போது இருக்கும் பிரச்னையை சந்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும். சந்தை ஏறுவதற்கு இருக்கும் அடிப்படை மற்றும் டெக்னிக்கல் காரணங்களைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகச் சொல்கிறேன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு