Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

வருங்கால சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து முழுமையாக அலசவே கடந்த வாரம் இடம் போதவில்லை. அதனால் நம்முடைய போர்ட்ஃபோலியோவை பற்றி எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இந்த வாரம் நமது போர்ட்ஃபோலியோவைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

குயிக்பிக் பிரிவில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கினை சில வாரங் களுக்கு முன் தந்திருந்தேன். வரும் ஜூன் 17-ம் தேதி வரைதான் அந்தப் பங்கு நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் என்று சொல்லி இருந்தேன். ஆனால், கடந்த வாரம் சந்தையின் சரிவு கொஞ்சம் அதிகமாக இருந்ததால், நான் தந்திருந்த ஸ்டாப்லாஸ் விலை 'டிரிக்கர்’ ஆகிவிட்டது. ஆனாலும், அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் பங்கு உடனடியாக மீண்டு வந்துவிட்டது. ஸ்டாப்லாஸ் அடிப்படையில் இந்தப் பங்கினை வாங்கியதால், அதை விற்றுவிட்டதாகவே கருதுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அடுத்த 18 மாதங்களில் இந்தப் பங்கு 1,500 ரூபாய் வரைக்கும் செல்ல வாய்ப்புண்டு.  இந்த செக்டாரில் இருக்கும் இதன் போட்டி நிறுவனங்களைவிட இதன் மதிப்பு குறைவு.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

எம் அண்ட் எம் பங்கு வெளியே சென்றுவிட்டதால், அதற்கு பதிலாக எம் அண்ட் எம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கினை பரிந்துரை செய்கிறேன். இது நீண்டகால பங்கு என்பதால், ஸ்டாப்லாஸ் வேண்டாம். 360 ரூபாய் என்பதை இலக்கு விலையாகக்கொண்டு இந்தப் பங்கில் முதலீடு செய்யவும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த வாரம் சந்தை 3 சதவிகித அளவுக்கு சரிந்தாலும், பிறகு மீண்டும் உயர்ந்துவிட்டது. மேலும், இப்போது பாசிட்டிவ் ஐலேண்ட் பேட்டர்ன் சந்தையில் உருவாகி இருக்கிறது. (ஜூன் 13-ம் தேதி சரிவில் கேப் உருவானது. மீண்டும் அடுத்தநாள் உயர்ந்து ஒரு கேப் உருவானது). இந்த பேட்டர்ன் உருவாகி இருப்பதால், 6229, அடுத்து 6400 என்ற புள்ளிகள் சாத்தியமாகும். அடுத்த சில மாதங்களில் 6357 என்ற நிலையை உடைத்துக்கொண்டு மேலே செல்லும்போது நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகள் வேகமாக வெளியேறும். அது எப்போது நடக்கும் என்பதுதானே தவிர, சந்தை ஏற்றம் அடையுமா என்ற சந்தேகம் தேவையே இல்லை.

ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது என்று தோன்றலாம். ஆனால், பணவீக்கம் குறைந்திருப்பதால் திங்கட்கிழமை அன்று நடக்கும் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். ரெபோ விகிதம் 0.25 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சி.ஆர்.ஆர். குறைப்பு இல்லை என்ற பேச்சு இருக்கிறது.  ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும்பட்சத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை  முன்னணி வங்கிகளின் பங்கு விலை நன்கு உயரும்.

கடந்த வெள்ளி அன்று சந்தை உயர சர்வதேச சந்தைகள் உயர்ந்தது ஒரு காரணம். அட்வான்ஸ் டாக்ஸ் எண்கள் நன்றாக வந்ததும் இன்னொரு காரணம். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கினை திங்கட்கிழமை சராசரி விலையில் நாம் எடுத்துக்கொள்வோம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை உயருவதற்கான சூழ்நிலைகள் சேர்ந்து வந்தாலும், இன்னும் சரியான காலம் வரவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே, கவனத்தோடு காத்திருங்கள். போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் (மைனஸ்) ரூ.10,949.2

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

போர்ட்ஃபோலியோவின் தினசரி முடிவு நிலவரங்களை www.vikatan.com இணையதளத்தில் இலவசமாகவே பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism