Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

##~##

க்யூ.இ.3-யை நிறுத்தப் போவதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் சொன்னதன் காரணமாக கடந்த வியாழனன்று சந்தை கடுமையாகச் சரிந்தது. சந்தை மட்டுமல்லாமல் ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்தது. சந்தையின் ஒவ்வொரு சரிவும் முதலீட்டுக்குதான் என்பதைக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன். இப்போதும் சொல்கிறேன், சந்தையின் சரிவுகள் அனைத்தும் முதலீடு செய்வதற்குதான்.

என்ன காரணம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போதைக்கு ஈக்விட்டி முதலீட்டை தவிர, வேறு எந்த முதலீடும் முதலீட்டுக்கு ஏற்றவையாக இல்லை. அனைத்து முதலீடுகளும் உச்சத்தைத் தொட்டுவிட்டது. வருங்காலத்தில் தங்கம்கூட நெகட்டிவ் வருமானத்தைத் தரவே அதிக வாய்ப்புண்டு. கடந்த வாரத்தில் தங்கம் விலை சரிந்ததற்கு

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

முக்கிய காரணம், கடந்த 25 வருடங்களுக்கு தொடர்ந்து சரிந்துவரும் ரூபாய் மதிப்புதான் என்பதை மேலே தரப்பட்டிருக்கும் சார்ட்டை பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

1983-ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால், இப்போது 60 ரூபாயைத் தொடுகிற நிலைக்கு வந்துவிட்டது. அப்போது, தங்கத்தின் மதிப்பு ஒரு அவுன்ஸ் 400 டாலர்.  இப்போது ஒரு அவுன்ஸ் சுமார் 1,300 டாலர். ரூபாய் சரிந்து, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்ததால்தான் இத்தனை வருடங்களாக அது லாபம் தந்தது.

தங்கம் உயருவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது, கரன்சி ரிஸ்க். அப்போது இருந்த சூழ்நிலையில் டாலரை அதிகம் வைத்திருக்க முடியாது. அதனால், டாலர் வாங்குவதற்குப் பதில் தங்கம் வாங்கினார்கள். இரண்டாவது, பணவீக்கத்துக்கு எதிரான ஹெட்ஜிங் ஆவணமாக  தங்கத்தைப் பார்த்தார்கள்.

ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல, ரூபாயும் இதற்கு கீழே சரிய வாய்ப்பில்லை. ஒருவேளை ரூபாய் 60-க்கு கீழே சென்றாலும், அது தற்காலிக சரிவாக இருக்குமே தவிர, தொடர்ந்து சரிய வாய்ப்பில்லை. மேலும், ரூபாய் கூடிய விரைவில் ஏதாவது ஒரு விலையில் செட்டிலாக  வாய்ப்புள்ளது. தவிர, கமாடிட்டிகளின் டிமாண்டும் குறைந்திருக்கிறது.

ஆனால், பங்குச் சந்தையை எடுத்துக்கொண்டால், இதன் மதிப்பீடுகள் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தையின் சில தகவல்களைப் பார்த்தோம். இப்போது நிஃப்டி பி.இ. மதிப்பை எடுத்துக்கொண்டால், 13.8 என்ற நிலையில் இருக்கிறது. நிஃப்டியின் பார்வேர்டு பி.இ. 11 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ரூபாய் மட்டும் ஓரளவுக்கு சீரடைந்துவிட்டால், சந்தையில் ஏற்றம் ஆரம்பித்துவிடும். இப்போதைக்கு 5538 என்பது முக்கியமான சப்போர்ட் நிலை. இந்த சப்போர்ட் நிலையை எடுத்துக்கொண்டு மேலே செல்ல ஆரம்பித்தால், 6229, 6357 என்ற நிலைகளுக்கு நிஃப்டி செல்லும். இந்த வருடம்கூட 7000 என்ற நிஃப்டி புள்ளியை எதிர்பார்க்கலாம்.

சந்தையின் ஒவ்வொரு சரிவையும் முதலீட்டுக்கான வாய்ப்பாகவே பார்க்கவேண்டும். கடந்த ஐந்து வருடங்களில் சந்தை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், குறிப்பிட்ட சில பங்குகள் 600% வருமானம் தந்திருக்கிறது. (அதேசமயம், சில பங்குகள் 80% சரியவும் செய்திருக்கிறது.) விஷயம் என்னவெனில், பங்குகளை கவனமாக தேர்வு செய்யவேண்டும். நம் தேர்வில் சில பங்குகள் கிளிக் ஆகிவிட்டால்கூட, ஒட்டுமொத்தமாக நல்ல வருமானம் கிடைக்கும். அதைத்தான் நாம் செய்து வருகிறோம்.

கடந்த வாரம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கினை பரிந்துரை செய்திருந்தேன். இந்தப் பங்கு கடந்த திங்கட்கிழமை சராசரி விலையான 260 ரூபாயில் (துல்லியமான விலை 259.75) முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பீர்கள்.  வியாழக்கிழமை சந்தை சரிந்தாலும் இந்தப் பங்கு பெரிய அளவில் சரியவில்லை.  

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் 21 பங்குகள் இருக்கிறது. சில பங்குகளை சராசரி செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டதால் 1,90,000 ரூபாய்தான் முதலீடு செய்திருக்கிறோம். சந்தை

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

செயல்பாடுகளைப் பொறுத்து நம் முதலீட்டு தொகையை அதிகப்படுத்தவும் செய்யலாம். அது பற்றி பிறகு சொல்கிறேன். மீதமிருக்கும் தொகைக்கு 'யெஸ் பேங்க்’ பங்கினை திங்கட்கிழமை சராசரி விலையில் வாங்கவும். வரும் வாரங்களில் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஒவ்வொரு பங்கு பற்றியும் சொல்கிறேன்.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் (மைனஸ்) 14,207.05

போர்ட்ஃபோலியோவின் தினசரி முடிவு நிலவரங்களை www.vikatan.com இணையதளத்தில் இலவசமாகவே பார்க்கலாம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!