Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
##~##

அடுத்த இரண்டு வருடங்களுக்கு தங்கம் நெகட்டிவ் வருமானம்கூட தர வாய்ப்பு இருக்கிறது என்று கடந்த வாரமே சொல்லி இருந்தேன். சொன்னதுபோலவே, இந்த வாரமே தங்கம் ஒரு அவுன்ஸ் 1,200 டாலருக்கு கீழே சென்றுவிட்டது.

சந்தையில் 'பெசிமிஸ்டிக்’ சூழ்நிலை எப்போது அதிகமாக இருக்கிறதோ, அப்போதுதான் ஏற்றம் தொடங்கும்.  இப்போது கெட்ட செய்திகள் நம்மை சூழ்ந்து இருக்கிறது. ரூபாய் சரிவில் ஆரம்பித்து நடப்புக் கணக்கு பற்றாக்குறை வரை அனைத்தும் கெட்ட செய்திகளாகவே இருக்கிறது. 2003-ல்கூட இதே நிலைதான். ஆனால், இன்றைய நிலை அன்றிருந்ததைவிட நன்றாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக்னிக்கலாகவும் சந்தை நன்றாகவே இருக்கிறது. சந்தையின் ஒவ்வொரு சரிவும் அதற்கு முந்தைய குறைந்தபட்ச சரிவு புள்ளியை உடைத்துக்கொண்டு கீழே செல்லாமல் இருக்கிறது. 6357 என்ற நிஃப்டி புள்ளியைத் தாண்டும்போது ஒரு 'மெகா புல்ரன்’ ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை 6357 என்ற நிலையை 65 மாதங்களுக்கு முன்பு தொட்டது. இந்தப் புள்ளியை அடுத்த மாதமோ, அதற்கடுத்த மாதமோ கடக்கலாம். ஆனால், பழைய உச்சத்தைக் கடக்க எத்தனை மாதம் எடுக்கிறதோ, அதில் மூன்றில் ஒரு பங்கில் சந்தை இரு மடங்காக வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உதாரணமாக, இந்த ஜூலையில் 6357 என்ற புள்ளியைக் கடக்கிறதெனில், முந்தைய உச்சத்தைத் தாண்ட சந்தைக்கு 66 மாதமாகும்.   அதாவது, இன்னும் 22 மாதத்தில் இங்கிருந்து சந்தை இரட்டிப்பாகும் வாய்ப்பு இருக்கிறது.

வெள்ளிக்கிழமை சந்தை உயர்ந்தபோது நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் சின்டெக்ஸ், கிராம்டன் கிரீவ்ஸ், கொரமண்டல் உள்ளிட்ட சில பங்குகள் நன்றாக உயர்ந்தது. நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கு கடந்த திங்கட்கிழமை கடுமையாகச் சரிந்தது. காரணம், இந்நிறுவனம் வங்கி ஆரம்பிக்க விண்ணப்பிக்க மாட்டோம் என்று சொன்னதே. இருந்தாலும், அந்த சரிவு இரண்டு நாளைக்குகூட நிலைக்காமல், மீண்டும் உயர ஆரம்பித்தது. இந்நிறுவனத்தின் அடைப்படை பலமாக இருப்பதே இதற்கு காரணம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங் களில் முக்கியமாக கவனிக்கவேண்டியது, நிகர வட்டி வரம்புதான். மஹிந்திராவுக்கு சுமார் 7 சதவிகித அளவுக்கு நிகர வட்டி வரம்பு இருக்கிறது. வங்கிகளுக்கு சராசரியாக 3 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கும்.

மேலும், வங்கிகள் எஸ்.எல்.ஆர். விகிதம் வைத்திருக்க வேண்டும். அதை காஸாவை (current and savings account)வைத்து சரிசெய்துகொள்ளலாம். ஆனால், வங்கி ஆரம்பித்து இரண்டு, மூன்று வருடங்களில் காஸாவை அதிகரிக்க முடியாது என்பதால் வங்கிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று மஹிந்திரா முடிவு செய்துவிட்டது. அதாவது, இந்நிறுவனம் நிகர வட்டி வரம்பைக் குறைக்க விரும்பவில்லை.  

கடந்த வாரம் யெஸ் பேங்க் பங்கினை பரிந்துரை செய்திருந்தேன். அந்தப் பங்கினை திங்கட்கிழமை சராசரி விலையான 444 ரூபாயில் வாங்கி இருப்பீர்கள்.  பங்குகள் வெளியே செல்லும்போது புதிய முதலீடுகளைப் பற்றி யோசிக்கலாம். போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்: மைனஸ் 12,093 ரூபாய்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

போர்ட்ஃபோலியோவின் தினசரி முடிவு நிலவரங்களை www.vikatan.com இணையதளத்தில் இலவசமாகவே பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism