Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!

டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!

டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!

டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!

Published:Updated:

 நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

##~##

ஃபண்டமென்டல் காரணங்களினால் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இறங்கிய நிஃப்டி, வாரத்தின் ஆரம்பத்தில் சிறியதொரு ரிவர்ஸலைச் சந்திக்கலாம் என்றும்; எக்ஸ்பைரி வாரம் என்பதால் வாலட்டைலிட்டி அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும்; எதிர்மறை மூவ்கள் எந்த நிமிடமும் வந்துவிடலாம் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த வேகத்தில் சந்தை இறங்கியதோ, அதே வேகத்தில் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. கடந்த பத்து டிரேடிங் நாட்களில் கிட்டத்தட்ட 300 பாயின்ட்கள் இறங்கி அதே அளவில் ஏற்றத்தையும் சந்தித்தது நிஃப்டி.

சென்ற வாரமே, ஏறும் சந்தைக்கு ரெசிஸ்டன்ஸ் கிடையாது, இறங்கும் சந்தைக்கு சப்போர்ட் கிடையாது என்று சொல்லியிருந்

தோம். அந்த இரண்டையுமே கடந்த வாரத்தில் பார்த்தோம். இந்தநிலை அதிகபட்சம் செவ்வாய்க்கிழமை வரை தொடரலாம்.

டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!

அதிக ஏற்ற இறக்கச் சூழலில் இருக்கின்றோம். திங்களன்றும் 5835 லெவலைத் தாண்டி வால்யூமுடன் குளோஸானால் 6025 லெவலைத் தொட வாய்ப்புள்ளது. அந்த லெவலைத் தொட்டபின் மீண்டும் பெரியதொரு சரிவு இருக்கலாம். ஓவர் நைட் பொசிஷன் எதுவும் வேண்டவே வேண்டாம்.

ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே இண்டெக்ஸ் வியாபாரம் செய்யலாம். புதியவர்களும் லோ-ரிஸ்க் டிரேடர்களும் ஸ்டாக் ஸ்பெஷிபிக் வியாபாரம் செய்வதே நல்லது. சிறியதொரு நெகட்டிவ் செய்தி வந்தால்கூட பெரிய இறக்கங்கள் வந்துவிடலாம். எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!
டிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism