Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
##~##

பொதுத் துறை மற்றும் அரசாங்கத்தின் தலையீடு இருக்கும் பங்குகளை இனிமேலும் நமது போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பது நல்லதல்ல என்பதால், கடந்த வாரம் விற்க சொன்னேன். அதன்படி இந்த மூன்று பங்குகளையும் திங்கட்கிழமை சராசரி விலையில் விற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மூன்று பங்குகளையும் விற்றதன் மூலம் நம் போர்ட்ஃபோலியோ சுமார் 8,161 ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கும். இதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏற்கெனவே நம் போர்ட்ஃபோலியோவின் மூலம் 31,523 ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்.

சென்ற வாரம் நான் முதலீடு செய்ய சொல்லி இருந்த ஹேவெல்ஸ் இந்தியா பங்கினை திங்கட்கிழமை சராசரி விலையில் (733 ரூபாயில்) வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கடந்த சில வருடங்களாகவே அனில் அம்பானி குழும நிறுவனப் பங்குகள் இறங்கிக்கொண்டே வந்தது. ஆனால், அந்த குழுமப் பங்குகள் இப்போது சிறிதளவு ஏற்றம் பெற ஆரம்பித்திருக்கிறது. அந்த குழுமத்தில் இருக்கும் பங்கான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கு நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கிறது. இந்நிறுவனம் கணக்கு வழக்குகளை மறுசீரமைப்பு செய்து மாற்றி வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் 'விஷன்’ மாறி இருப்பதாகவே தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு  ஷேர்  போர்ட்ஃபோலியோ!

மேலும், அனைத்துவிதமான நிதிச் சேவைகளிலும் (லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட) இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புதிய வங்கி ஆரம்பிக்க விண்ணப்பித்திருக்கிறது. புதிய வங்கி தொடங்குவதற்கான அனுமதி இந்த வங்கிக்கு கிடைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. (புதிய வங்கிக்கு வாய்ப்பு இருக்கும் இன்னொரு முக்கியமான பங்கு எல் அண்ட் டி ஃபைனான்ஸ். இந்த பங்கும் நம்மிடம் இருக்கிறது.) மேலும், மற்ற நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகளையும் இந்த நிறுவனம் விற்று வருகிறது. தவிர, இப்போது 20 வார உச்சபட்ச விலையில் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. வரும் காலாண்டு முடிவுகளில் நல்ல மாற்றம் தெரியலாம். அதனால் ஏற்கெனவே வைத்திருக்கும் இலக்கு விலையான 465 ரூபாய் என்பதிலிருந்து 550 ரூபாய்க்கு இலக்கு விலையை மாற்றிக்கொள்ளலாம்.

சந்தை எப்படி?

'இன்வெர்ட்டட் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் பேட்டர்ன்’ உருவாகி இருக்கிறது. இதனுடைய நெக்லைன் என்பது 5920 புள்ளிகள் என்றும், இதை கடக்கும்பட்சத்தில் 6100-6200 என்ற புள்ளிகள் என்றும் கடந்த இதழிலே சொல்லி இருந்தேன். அதுபோலவே, 'நெக்லைனை’ உடைத்துக்கொண்டே மேலே போயிருக்கிறது. அதனால், இந்த மாத எக்ஸ்பைரி முடிவதற்குள் இந்த நிலையை அடையலாம்.

உங்களுக்காகவே ஒரு  ஷேர்  போர்ட்ஃபோலியோ!

மேலும், சந்தையில் நிறைய டிரேடர்கள் நிஃப்டி மற்றும் முக்கியமான பங்குகளில் ஷார்ட் செய்திருக்கிறார்கள். அதனால் ஷார்ட் கவரிங் செய்யும்போது சந்தை உயரும். மேலும், வரும் வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் காலாண்டு முடிவு வரவிருக்கிறது. இந்த முடிவுகள் நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கி நல்ல முடிவைக் கொடுத்திருப்பதால் ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், கோட்டக் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகிய வங்கிகளும் நல்ல முடிவுகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சந்தை நல்ல ஏற்றத்தைச் சந்திக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

கடந்த வாரம் மூன்று பங்குகளை நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து நீக்கினோம். அதற்கு பதிலாக ஒரு பங்கினை கடந்த வாரத்தில் வாங்கி இருந்தோம். இந்த வாரம் பேட்டா இந்தியா பங்கினை திங்கட்கிழமை சராசரி விலையில் வாங்கவும்.

இந்த வாரம் சந்தையில் ஏற்றம் இருந்ததால் நமது போர்ட்ஃபோலியோவின் நஷ்டம் குறைந்திருக்கிறது. நிகர நஷ்டம்: ரூ.9,245.00.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு  ஷேர்  போர்ட்ஃபோலியோ!

போர்ட்ஃபோலியோவின் தினசரி முடிவு நிலவரங்களை
Www.vikatan.com இணையதளத்தில் இலவசமாகவே பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism