கடந்த வாரம் முதலீடு செய்ய சொல்லியிருந்த பேட்டா இந்தியா பங்கை திங்கட்கிழமை சராசரி விலையில் (சுமார் ரூ.900) வாங்கி இருப்பீர்கள். 9,900 ரூபாய்க்கு 11 பங்குகளை வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்த்திருப்பீர்கள். இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு என்பதால், நன்றாக விலை ஏறும் வரை காத்திருக்கலாம்.

பங்குச் சந்தை எப்படி?

முதல் காலாண்டு முடிவுகளும் எதிர்பார்த்த மாதிரியே சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது.

குறிப்பாக, தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.), பார்மா, ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. அதேநேரத்தில், வங்கித் துறை பலவீனமாக இருக்கிறது. தற்போதைய நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கும் வங்கித் துறைக் கான பாதிப்பு தற்காலிகமானது தான். மேலும், கடந்த இரு ஆண்டு களாக முன்னணி பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்தப் பங்குகளை நிதானமாக வாங்கி வந்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி எதிர்பார்த்த மாதிரியே, வெள்ளிக்கிழமை 6000 புள்ளிகளுக்கு மேல் (6029.20) நிலை பெற்றிருக்கிறது. ஜூன் மாத உச்சவிலையை, ஜூலை 19-ம் தேதி வாக்கில் நிஃப்டி தாண்டிவிட்டது. பங்குச் சந்தை இன்னும் ஒன்றரை முதல் இரண்டு மாத காலத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு உச்சநிலையை அடைய வாய்ப்பு இருக்கிறது. அப்போது போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றிருக்கும் பல பங்குகள் நமக்கு லாபம் தரப்

போகின்றன.

இந்தியாவின் மூன்றாவது பெரிய வீட்டு வசதி நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் (எல்.ஐ.சி. ஹெச்.எஃப்.எல்), கடந்த மூன்றாண்டுகளாக பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை. அந்த வகையில், பங்கின் விலை இறங்கி கவர்ச்சிகரமாக காணப்படுகிறது. மேலும், டிவிடெண்டும் கணிசமாக வழங்கி வருகிறது (கடந்த ஆண்டில் மட்டும் 180%). பி.இ. விகிதம் 10.28-ஆக உள்ளது.

அது மட்டுமல்ல, நிதி திரட்டும் செலவை (காஸ்ட் ஆஃப் ஃபண்ட்) கணிசமாக குறைக்க, எல்.ஐ.சி. ஹெச்.எஃப்.எல். நடவடிக்கை எடுத்து வருகிறது. குறைந்த வட்டி அளிக்கும் நீண்ட கால பாண்டுகளை (என்.சி.டி.) அது வெளியிட இருக்கிறது. இரண்டு காலாண்டு முடிந்து பார்த்தால், இதன் நிகர லாப வட்டி வரம்பு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நம் போர்ட்ஃபோலியோவில் 21 பங்குகள் இருக்கின்றன. இதுவரைக்கும் 1,94,409 ரூபாய் முதலீடு செய்திருக்கிறோம். போர்ட்ஃபோலியோ மொத்த முதலீடு 2 லட்சம் ரூபாய் என நிர்ணயித்துள்ளோம். அந்த வகையில் எல்.ஐ.சி. ஹெச்.எஃப்.எல். பங்குகளை 5,000 ரூபாய்க்கு மட்டும் திங்கட்கிழமை வாங்கினால் போதும்.

இந்த வாரம் சந்தையில் இறக்கம் இருந்ததால் நம் போர்ட்ஃபோலியோவின் நஷ்டம் கூடியிருக்கிறது.

நிகர நஷ்டம் ரூ.13,209.15