Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

Published:Updated:
##~##

நம் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ள எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம், முதல் காலாண்டில் இழப்பில் இருந்து லாபத்திற்கு திரும்பி உள்ளது. அந்த வகையில், காலாண்டு முடிவுக்கு பிறகு பங்கின் விலை சுமார் 10% அதிகரித்துள்ளது.

ஆனால், நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள யெஸ் பேங்க் பங்கின் விலை இறங்கி காணப்படுகிறது. என்றாலும், இதன் நிகர லாபம் முடிந்த காலாண்டில் 38% அதிகரித்து ரூ.401 கோடியாக உயர்ந்துள்ளது. இளைய வங்கியான இதன் அடிப்படை வலிமையாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.பி.ஐ., பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த எடுத்துள்ள பல நடவடிக்கைகள் அனைத்து வங்கிகளையும் பாதித்திருக்கிறது. இது தற்காலிக நிகழ்வுதான். இதன்பிறகு யெஸ் பேங்க் உள்ளிட்டவை சிறப்பாகச் செயல்படத்  தொடங்கிவிடும்.

ஹேவெல்ஸ் இந்தியாவின் முதல் காலாண்டு முடிவுகள் பிரமாதமாக இருக்கிறது. இதன் நிகர லாபம் 18.2% அதிகரித்திருக்கிறது.

நம் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருக்கும் இ.ஐ.டி. பாரி, பாரத் ஃபோர்ஜ் போன்றவற்றின் அடிப்படையும் வலிமையாகவே உள்ளது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் உகாண்டாவில் அசெம்பிளிங் யூனிட் அமைக்க இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

அதேநேரத்தில், கவலை தரக்கூடிய ஓரிரு நிறுவனங் களின் பங்குகளும் நம் போர்ட்ஃபோலியோவில் இடம் பிடித்திருக்கிறது. உதாரணத்துக்கு, எல்கான் இன்ஜினீயரிங், சின்டெக்ஸ் போன்றவற்றின் நிலை சரியில்லை. இவற்றை நஷ்டத்தில் இருந்தாலும் விற்றுவிட்டு வேறு மாற்று பங்குகளை வாங்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.      

சந்தை எப்படி?

இந்திய பங்குச் சந்தை கடந்த 9 மாதங்களாக கிட்டத்தட்ட 400 புள்ளிகள் என்கிற ரேஞ்ச் பவுண்ட் நிலையில்தான் வர்த்தகமாகி வருகிறது. தற்போது சந்தையில் டபுள் பாட்டம் நிலை உருவாகி இருக்கிறது. அதாவது, இரு குறிப்பிட்ட தினங்களில் குறைந்தபட்ச முடிவு புள்ளிகள், கிட்டத்தட்ட

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

ஒன்றுபோல் இருப்பதை டபுள் பாட்டம் நிலை என்பார்கள். நிஃப்டி புள்ளிகளை எடுத்துக்கொண்டால், ஜூலை மாத குறைந்தபட்ச புள்ளிகள் 5675-ஆக உள்ளது. வெள்ளிக்கிழமை முடிவு நிலை 5678-ஆக உள்ளது. டபுள் பாட்டம் காணப்பட்டால், சந்தை மேலே போக வாய்ப்பு உள்ளது.

அடுத்து டெக்னிக்கல்படி பார்த்தால், நிஃப்டி புள்ளிகள் 5620-க்கு கீழே போகாத வரையில், சந்தை மேலே செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஏராளமான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தாலும் சந்தை மேலே போகும்.

இந்த வாரம் சந்தையில் அதிக இறக்கம் காணப்பட்டதால் நம் ஷேர் போர்ட்ஃபோலியோவின் நிகர நஷ்டம் ரூ.32,367.  

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

தொகுப்பு: சி.சரவணன்.