Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

Published:Updated:
##~##

நம் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்கு ஒன்றுக்கு சர்வதேச அளவில் கூடுதல் கௌரவம் கிடைத்திருக்கிறது. அந்தப் பங்கு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸ் (சுருக்கமாக எம் அண்ட் எம் ஃபைனான்ஸ்). இது எம்.எஸ்.சி.ஐ. குளோபல் ஸ்டாண்டர்டு இண்டெக்ஸ் -ல் இடம் பெற்றிருக்கிறது. இந்த மாற்றம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

சந்தை பற்றிய சென்டிமென்ட் நம் நாட்டு முதலீட்டாளர் கள் மத்தியில் தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது. முக்கிய சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டிகளின் புள்ளிகள் பெரிய அளவில் இறங்காமல் இருந்தாலும், சுமார் 50 சதவிகித பங்குகளின் விலை 2008 வீழ்ச்சி அளவுக்கு இறங்கிக் கிடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கிகள், வட்டி விகிதத்தைப் பல ஆண்டுகளாக மிகக் குறைவாகவும், நிலையானதாகவும் வைத்திருக்கின்றன. அந்தவகையில் அந்த நாடுகளின்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படத் தொடங்கி இருக்கிறது. இந்த வட்டி விகிதம் உயராத நிலை இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும். அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தலைகீழாக நம் நாட்டில் சூழ்நிலை நிலவுகிறது. இங்கு தொழில் மற்றும் பொருளாதாரம் மந்தமாக காணப்படுகிறது. ஆனால், ஆர்.பி.ஐ. பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.

கடனுக்கான வட்டியைக் குறைத்தால் தொழில் வளருமா? இல்லை தொழில் வளர்ந்த பிறகு வட்டியைக் குறைக்கலாமா என்கிற குழப்பத்தில் ஆர்.பி.ஐ. இருக்கிறது. புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவி ஏற்ற பிறகாவது இந்நிலை மாறவேண்டும். அப்போதுதான் தொழில் வளர்ச்சி மேம்படும்; சந்தையின் புள்ளிகளும் உயரும். நடக்கும் என நம்புவோம். 

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ

ஷேர் போர்ட்ஃபோலியோ நிகர நஷ்டம் ரூ.32,439.15

தொகுப்பு: சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism