Published:Updated:

டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி பேங்க் ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி பேங்க் ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

முன்னணி நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சென்ற வார இறுதியிலிருந்து வர தொடங்கி உள்ளன. டிசம்பர் மாத இறுதி வரை சரிவை சந்தித்த பங்குச் சந்தை ஜனவரி தொடக்கத் திலிருந்து நல்ல ஏற்றம் கண்டுள்ளது. நிறுவனங்களின் லாப விகிதத்தைப் பொறுத்து சந்தையின் போக்கு வரும் காலத்தில் இருக்கும் என்பதால் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்போம்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services)

நமது நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 12.3% அதிகரித்து, ரூ.9,769 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 16.3% அதிகரித்து, ரூ.48,885 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனம் 18,000 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளைத் திரும்ப பெற உள்ளது. திரும்பப் பெறும் ஒரு பங்கின் விலையாக ரூ.4,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வார விலையோடு ஒப்பிட்டால் 16% அதிகம் ஆகும். மேலும், ஒரு பங்குக்கு ரூ.7 டிவிடெண்ட் வழங்க உள்ளது.

டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி பேங்க் ரிசல்ட் எப்படி..?

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இதன் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13.6% குறைந்து, ரூ.3,442 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 15.7% அதிகரித்து, ரூ.19,302 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்க உள்ளது.

சென்ற காலாண்டில் புதிதாக 10,000 தகவல் தொழில் நுட்ப ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 6% வரை குறைந்துள்ளது. என்றாலும், பல பங்கு தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பங்கு விலை வரும் காலத்தில் நல்ல ஏற்றம் காணும் என்று சொல்லி உயுள்ளன.

அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதன்மை யான சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 8% அதிகரித்து, ரூ.1,708 கோடியாக உள்ளது. இது சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும்.

வரி வருமானத்தில் ரூ.535 கோடி மிச்சமானது லாப விகிதம் அதிகரித்ததற்கு முக்கியமான காரணமாகும்.இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5% அதிகரித்து, ரூ.12,710 கோடியாக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (HDFC Bank)

இந்தியாவின் முதன்மையான தனியார் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் 18.1% அதிகரித்து, ரூ.10,342 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 13% அதிகரித்து, ரூ.18,444 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வாராக்கடன் 0.09% குறைந்து, 12.6% ஆக உள்ளது.

நிர்வாகக் கோளாறு காரணமாக புதிய கடன் அட்டை வழங்குவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்குத் தடை விதித்திருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்ட தால், சென்ற காலாண்டில் அதிக அளவில் புதிதாக கடன் அட்டைகளை வழங்கியுள்ளது. இது வரும் காலத்தில் வங்கியின் வருமானத்தை அதிகரிப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பங்கு தரகு நிறுவனங்கள் ஹெச்.டி.எஃப்சி வங்கி பங்குகள் 25% அதிகரித்து, 2000 ரூபாய் அளவிற்கு வர்த்தகம் ஆகும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளன.

இன்ஃபோசிஸ் (Infosys)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.7% அதிகரித்து, ரூ.3,809 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 22.9% அதிகரித்து, ரூ.31,867 கோடியாக உள்ளது. மிகப் பெரிய ஒப்பந்தங்களின் அளவு 2.53 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18% அதிகமாகும்.

மைண்ட்ட்ரீ (Mind Tree)

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 34% அதிகரித்து, ரூ. 437 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 36% அதிகரித்து, ரூ.2,750 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் எபிட்டா மார்ஜின் 21.5 சதவிகிதமாக உள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 40% அதிகரித்து, ரூ.60,000 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 85% அதிகரித்து, ரூ.2,125 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டின் முடிவில் 7.44 மில்லியன் புதிய கடன்களை வழங்கியுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 14.1% அதிகமாகும்.

புதிய கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு நிர்வாகக் குழு கூடி முடிவு எடுக்க உள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா எலெக்சி (Tata Elxsi)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 43.5% அதிகரித்து, ரூ.151 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 33.2% அதிகரித்து, ரூ.635 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism