Published:Updated:

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவு கள் வந்துகொண்டுள்ளன. முக்கிய நிறுவனங்களின் முடிவுகள் எப்படியுள்ளது என்பதைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank)

இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 25% அதிகரித்து, ரூ.6,194 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 23% அதிகரித்து, ரூ.12,236 கோடியாக உள்ளது. இதன் நிகர வாராக்கடன் கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவான 0.85% என்ற அளவில் உள்ளது.

பல சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பைவிட சிறந்த காலாண்டு முடிவுகளை இந்த வங்கி வெளியிட்டுள்ளது. பல வெளிநாட்டு மற்றும் இந்தியத் தரகு நிறுவனங்கள் இந்த வங்கிப் பங்கைப் பரிந்துரை செய்துள்ளன. அதன் இலக்கு விலையாக ரூ.1,000 - 1,100 என்று நிர்ணயம் செய்துள்ளன.

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)

நமது நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 224% அதிகரித்து, ரூ.3,614 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 17% அதிகரித்து, ரூ.8,653 கோடியாக உள்ளது. நிகர வாராக் கடன் அளவு 0.91 சதவிகிதமாக உள்ளது. இந்த வங்கியின் காலாண்டு முடிவுகளும் பெரும்பாலான சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக உள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர்... ரிசல்ட் எப்படி..?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)

சந்தை மதிப்பில் நமது நாட்டின் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 38% அதிகரித்து, ரூ.20,539 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 54% அதிகரித்து, ரூ.1,91,271 கோடியாக உள்ளது. சில்லறை வணிகம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் அதிகபட்ச வருமானத்தைச் சென்ற காலாண்டில் இந்த நிறுவனம் ஈட்டியுள்ளது. தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான ஜியோவின் வருமானம் 8.9% அதிகரித்து, ரூ.3,795 கோடியாக உள்ளது. 5ஜி சேவைகளை முதற்கட்டமாக ஆயிரம் பெரு நகரங்களில் கொண்டுவருவதற்கு நிறுவனம் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFC Life)

ஆயுள் காப்பீடு வழங்குவதில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் 3% அதிகரித்து, ரூ.274 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர பிரீமியம் மூலம் கிடைக்கும் வருவாய் 28% அதிகரித்து, ரூ.12,124 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் குறைந்த அளவே கொரோனா நோய்த்தொற்று காரணமாக காப்பீட்டு க்ளெய்ம் வந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel)

ஸ்டீல் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 69% அதிகரித்து, ரூ.4,516 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 60% அதிகரித்து, ரூ.3,807 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வல்லுநர்களின் கணிப்பைவிட சற்று குறை வாகவே உள்ளது. சென்ற ஆண்டில் ஸ்டீல் துறை சார்ந்த பங்குகள் மிக அதிக அளவு லாபத்தைத் தந்துள்ளது. தற்போது பல்வேறு உலகக் காரணிகள் காரணமாக லாப விகிதம் குறைந்துள்ளது. என்றாலும் வரும் காலத்தில் ஸ்டீல் துறை சிறப்பான முன்னேற்றம் தரும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)

பஜாஜ் குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22% சரிந்து, ரூ.1,214 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 2% அதிகரித்து, ரூ.9,022 கோடியாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி சற்று சரிந்து உள்ளது லாப விகிதம் குறைய முக்கியமான காரணமாக உள்ளது. என்றாலும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வது முன்னெப்போதும் இல்லாத அதிக அளவில் இருப்பது நிறுவனத்துக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever)

நமது நாட்டின் கன்ஸ்யூமர் கூட்ஸ் துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 17% அதிகரித்து, ரூ.2,243 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 10% அதிகரித்து, ரூ.13,183 கோடியாக உள்ளது. கிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக இந்த நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நோய்த் தொற்று காலங்களில் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டது முக்கியமான காரணம் ஆகும்.

ராலிஸ் இந்தியா (Rallis India)

டாடா குழுமத்தைச் சார்ந்த விவசாயத்துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13.3% அதிகரித்து, ரூ. 39.56 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 10.1% அதிகரித்து, ரூ.628 கோடியாக உள்ளது.

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance)

எஸ்.பி.ஐ குழுமத்தைச் சார்ந்த முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 56% அதிகரித்து, ரூ.364 கோடியாக உள்ளது. இது பல வல்லுநர்களின் கணிப்பைவிட அதிகமாகும். நிறுவனத்தின் நிகர காப்பீட்டு பிரீமியம் 31% அதிகரித்து, ரூ.18,025 கோடியாக உள்ளது. புதிய பாலிசி மூலம் சென்ற காலாண்டில் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பந்தன் பேங்க் (Bandhan Bank)

மேற்கு வங்காளத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் 35% அதிகரித்து, ரூ.859 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 3% அதிகரித்து, ரூ.2,125 கோடியாக உள்ளது. பழைய கடன்களை அதிக அளவில் சென்ற காலாண்டில் வசூல் செய்துள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஸிங்க் (Hindustan Zinc)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22.7% அதிகரித்து, ரூ.2,701 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஆண்டின் அளவான ரூ.6,483 கோடி என்றளவில் இருந்து கணிசமாக உயர்ந்து, ரூ.8,269 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவு உற்பத்தியை மேற் கொண்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பி.வி.ஆர் சினிமாஸ் (PVR Cinemas)

முன்னணி திரையரங்குகளைக் கொண்டுள்ள நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் கணிசமாகக் குறைந்து ரூ.10 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.49 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானம் 2.5 மடங்கு அதிகரித்து, ரூ.709 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழுக் கொள்ளளவில் திரைப்படங்களை ஒளிபரப்புவதற்கு ஒப்புதல் அளித்தது காரணமாக கடந்த 18 மாதங்களில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: பிரமேஷ் எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism