Published:Updated:

எல் & டி, மாரிகோ, என்.டி.பி.சி ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

எல் & டி, மாரிகோ, என்.டி.பி.சி ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

இந்த வாரம் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட முக்கிய நிறுவனங்களின் தொகுப்பை இங்கு பார்ப்போம்.

இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)

இந்துஜா குழுமத்தைச் சார்ந்த முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.38% அதிகரித்து, ரூ.3,793 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 49.51% அதிகரித்து, ரூ. 1,241 கோடியாக உள்ளது. இந்த வங்கி கடந்த ஒரு வருடத்தில் நெகட்டிவ் 10.15% வருமானத்தைத் தந்துள்ளது.

தற்போதைய இந்த முடிவு பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிகமாக இருக்கிறது.

மேலும், சென்ற மாதம் ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் உரிமையாளர்கள் அதிக அளவு பங்குகளை வைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தது இந்த வங்கிக்கு மிகப் பயனுள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், வரும் காலத்தில் இந்த வங்கிப் பங்குகள் கணிசமாக உயரும் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddys Laboratory)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 8% அதிகரித்து, ரூ.5,338 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் கணிசமாக அதிகரித்து, ரூ.709 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் அளவான ரூ. 1.68 என்ற அளவில் இருந்து ரூ.4,2.75 ஆக உயர்ந்துள்ளது. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் நிறுவனம் ரூ.4,300 என்ற அளவில் வர்த்தகமாக இந்த நிறுவன பங்கு வரும் காலத்தில் ரூ.5,160 வரை உயரும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாரிகோ (Mario)

பாரசூட், சபோலா போன்ற பல முன்னணி பிராண்டுகளைக் கொண்ட கன்ஸ்யூமர் கூட்ஸ் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.28% அதிகரித்து, ரூ.1,853 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5.12% குறைந்து, ரூ.278 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 2.1% குறைந்து, ரூ.373 கோடியாக உள்ளது.

எல் & டி, மாரிகோ, என்.டி.பி.சி ரிசல்ட் எப்படி..?

எல் & டி (L&T)

நமது நாட்டின் முன்னணி கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 9.85% அதிகரித்து, ரூ.21,551 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10.78% குறைந்து, ரூ.1,671 கோடியாக உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மூலதன கேப்பிடல் செலவு 35% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனங்களுக்குப் பயனுள்ள விஷயமாகும். இதன் காரணமாக, இந்த நிறுவனப் பங்குகள் வரும் காலத்தில் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)

முன்னணித் தனியார் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.81% அதிகரித்து, ரூ.4,334 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் லாபம் 15% அதிகரித்து, ரூ.2,131 கோடியாக உள்ளது. வாராக் கடன், காசா டெபாசிட்டுகளின் வளர்ச்சி, புதிய வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை ஆகிய அனைத்துக் காரணிகளிலும் வங்கி சிறப்பாகச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries)

பிஸ்கட் தயாரிப்பில் முன்னணி கன்ஸ்யூமர் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 18.56% குறைந்து, ரூ.371 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 12.93% அதிகரித்து, ரூ.3,575 கோடியாக உள்ளது. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஷேர்கான் நிறுவனம், இந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு இலக்கு விலையாக ரூ.4,325 நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய விலையைவிட 18% அதிகமாகும்.

என்.டி.பி.சி (NTPC)

மின்சாரத் தயாரிப்பில் பொதுத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 20.95% அதிகரித்து, ரூ.33,293 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 16% அதிகரித்து, ரூ.4,499 கோடியாக உள்ளது. சென்ற வாரம் வெளியான பட்ஜெட்டில் ஹைட்ரோ மற்றும் சூரிய மின்சாரத் தயாரிப்புக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்த நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பட்ஜெட்டுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு கணிசமாக உயர்ந்து முடிவடைந்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 35% அதிகரித்து, ரூ.1,99,375 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 53% அதிகரித்து, ரூ.8,016 கோடியாக உள்ளது. மேலும், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இடைக்கால டிவிடென்ட்-ஆக ரூ.4 வழங்குவதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதானி போர்ட்ஸ் (Adani Ports)

அதானி குழுமத்தின் முன்னணி துறைமுகம் சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 6% குறைந்து, ரூ.1,472 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 1% என்ற அளவில் சற்று உயர்ந்து, ரூ.3,797 கோடியாக உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்கான வருமான இலக்கை ரூ.18,000 கோடி என்ற அளவிலிருந்து 17,000 கோடியாக நிறுவனம் தற்போது குறைத்து உள்ளது.

ஆர்.பி.எல் பேங்க் (RBL Bank)

முன்னணி தனியார் துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கி யின் நிகர வட்டி வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற டிசம்பர் காலாண்டில் 10% அதிகரித்து, ரூ.1,010 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 407% அதிகரித்து, ரூ.156 கோடியாக உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி, ஆர்.பி.எல் வங்கி யின் நிர்வாகக் குழுவில் தன் பிரதிநிதியைப் பரிந்துரை செய்த பிறகு, இந்த வங்கியின் பங்குகள் 25% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. மேலும், பேங்க் நிஃப்டி குறியீட்டில் இருந்து இந்த வங்கி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி வெளியேறி னால் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதில் இடம்பெறும். இது இந்த வங்கிக்கு மேலும் பாதகமான விஷயமே!

தொகுப்பு: பிரமேஷ் எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism