Published:Updated:

ஹெச்.டி.எஃப்.சி, டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

ஹெச்.டி.எஃப்.சி, டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

இந்த வாரம் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட முக்கிய நிறுவனங்களின் தொகுப்பை இங்கு பார்ப்போம்.

ஹெச்.டி.எஃப்.சி (HDFC)

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.44% அதிகரித்து, ரூ.3,261 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருவாயும் சென்ற ஆண்டையொட்டிய நிலையில் ரூ.11,784 கோடியாக உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில் நிறுவனத்தின் இரண்டாவது அதிகபட்ச அளவாக வீட்டுக் கடன்களை வழங்கியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.சி (ITC)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 13% அதிகரித்து, ரூ.4,156 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 31.25% அதிகரித்து, ரூ.16,634 கோடியாக உள்ளது. பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிக லாபத்தை நிறுவனம் சென்ற காலாண்டில் ஈட்டியுள்ளது. மேலும், சென்ற பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு அதிக வரி விதிக்கப்படாதது நிறுவனத்துக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஹெச்.டி.எஃப்.சி, டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ ரிசல்ட் எப்படி?

டைட்டன் (Titan)

டாடா குழுமத்தைச் சார்ந்த முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 135% அதிகரித்து, ரூ.987 கோடியாக உள்ளது. இது பல முன்னணி சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிட அதிகமாகும்.

மேலும், நிறுவனத்தின் நிகர வருமானமும் 34.8% அதிகரித்து, ரூ.9,381 கோடியாக உள்ளது. சென்ற டிசம்பர் காலாண்டில் பண்டிகை காலத்தில் மிக அதிக விற்பனை நடைபெற்றதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூபின் (Lupin)

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி பார்மாதுறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 24.45% அதிகரித்து, ரூ.546 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 4% அதிகரித்து, ரூ.4,087 கோடியாக உள்ளது.

அதானி பவர் (Adani Power)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் ரூ.218 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.546 கோடி நஷ்டத்தை ஈட்டி இருந்தது. மேலும், நிறுவனத்தின் நிகர வருமானம் 20% குறைந்து, ரூ.5,594 கோடியாக உள்ளது. நிலக்கரி விலை உயர்வு காரணமாக நிறுவனம் முழுக் கொள்ளளவில் இயக்கப் படாமல் இருந்தது வருமானம் குறைந்ததுக்குக் காரணமாக உள்ளது. அரசின் நடவடிக்கை காரணமாக இந்தப் பிரச்னைக்குத் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளதால், வரும் காலத்தில் அதிக உற்பத்தி நடைபெறும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் (Adani Transmission)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 40% குறைந்து, ரூ. 277 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஆண்டின் அளவான ரூ.2,734 கோடி என்ற நிலையி லிருந்து ரூ.3,085 கோடியாக அதிகரித்துள்ளது.

டாடா ஸ்டீல் (Tata Steel)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து, ரூ.9,572 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருமானமும் 45% அதிகரித்து, ரூ.60,783 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனம் அரசுத்துறை நிறுவனமான நீலாஞ்சல் இஸ்பாட் நிஜாம் நிறுவனத்தை வாங்கியுள்ளது இந்த நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சென்ற மத்திய பட்ஜெட்டில் புதிய வீடுகள் கட்ட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்த நிறுவனத்துக்கு மேலும் பயன் தரும் விஷயமாகும்.

எஸ்.பி.ஐ (SBI)

நமது நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 62% அதிகரித்து, ரூ.8,432 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 6.5% அதிகரித்து, ரூ.30,687 கோடியாக உள்ளது. பொதுத்துறை வங்கிகள் கடந்த ஒரு வருடமாகச் சிறப்பான நிதிநிலை முடிவுகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

மற்றொரு பொதுத்துறை வங்கியான இந்த வங்கியின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 14.4% அதிகரித்து, ரூ.8,552 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து, ரூ.2,197 கோடியாக உள்ளது.

நால்கோ (NALCO)

அலுமினியம் உற்பத்தியில் முன்னணி பொதுத்துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 246% அதிகரித்து, ரூ.831 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் 9 மாத லாப விகிதம் முன்னெப்போதும் இல்லாத அதிக அளவில் ரூ.1,926 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 35% அதிகரித்து, ரூ.3,773 கோடியாக உள்ளது. மேலும், இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் ரூ.3, முதலில் வழங்கிய ரூ.2 என சென்ற ஆண்டில் ரூ.5 மொத்த டிவி டெண்டாக வழங்க உள்ளது.

டாபர் இந்தியா (Dabur India)

இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 8% அதிகரித்து, ரூ.2,942 கோடியாக உள்ளது. நிறுவனத் தின் நிகர லாபமும் 9% அதிகரித்து, ரூ.628 கோடியாக உள்ளது.

அப்போலோ டயர்ஸ் (Apollo Tyres)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படை யில் 49.5% குறைந்து, ரூ.224 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10% அதிகரித்து, ரூ.5,707 கோடி யாக உள்ளது. சென்ற காலாண் டில் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Tata Consumer Products)

டாடா குழுமத்தைச் சார்ந்த முன்னணி கன்ஸ்யூமர் துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22% அதிகரித்து, ரூ.290 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 4.52% அதிகரித்து, ரூ.3,208 கோடி யாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்