Published:Updated:

கிரீஸில் பொருளாதார சிக்கல்: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

மும்பை: கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது. 
 
கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் காரணமாக, நாட்டில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் தாக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தையிலும் இன்று காலை வர்த்தகம் பெரும் சரிவுடன் தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 535 புள்ளிகள் சரிந்து 27, 275 என வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 166.45 புள்ளிகள் சரிந்து 8,214.65 ல் வணிகமாகியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 ஆவது நாளாக இன்றும் சரிவை சந்தித்தது. 24 காசுகள் குறைந்து 63.88 ரூபாயாக இருந்தது.

அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக்  கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு