Published:Updated:

மைண்ட்ட்ரீ, ஏ.சி.சி ரிசல்ட் எப்படி? 4-ம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

Q 4 R E S U L T S

மைண்ட்ட்ரீ, ஏ.சி.சி ரிசல்ட் எப்படி? 4-ம் காலாண்டு முடிவுகள்!

Q 4 R E S U L T S

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நடப்பு 2020-21-ம் நிதி யாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் இங்கே...

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (HDFC Bank)

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான இந்த வங்கியின் லாபம் நான்காம் காலாண்டில் 18.17% உயர்ந்து 8,186 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 12.6% உயர்ந்து 17,120 கோடி ரூபாயாக உள்ளது. உச்ச நீதிமன்றம் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதால், நிகர லாபத்தில் 500 கோடி ரூபாய் தனியாக செலவினமாகக் காட்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக உள்ள தால், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத் தலின்படி, இந்தக் காலாண்டில் டிவிடெண்ட் எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. வாராக்கடன் அளவு சென்ற காலாண்டுடன் ஒப்பிட்டால், 0.06% குறைந்து 1.32 சதவிகிதமாக உள்ளது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் (ICICI Prudential Life)

காப்பீட்டுச் சேவைகள் வழங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான இதன் லாபம், மார்ச் காலாண்டில் 65% குறைந்து 63 கோடி ரூபாயாக உள்ளது.

நான்காம் காலாண்டில் புதிதாக 591 கோடி ரூபாய் புதிய காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் பிரீமியம் வசூலாகி இருக்கிறது. இது கடந்த காலண்டுடன் ஒப்பிட்டால் 26% அதிகமாகும். சென்ற நிதியாண்டில் மொத்தமாக 1,621 கோடி ரூபாய் புதிய காப்பீட்டு பாலிசிகள் மூலம் பிரீமியம் கிடைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாகப் பெரும்பாலானவர்கள் காப்பீட்டை எடுத்து வருகின்றனர் என்று பல சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. அதை மெய்ப் பிக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் காப்பீட்டு வருமானம் சென்ற ஆண்டைவிட 13.4% உயர்ந்து 11,879.28 கோடியாக உள்ளது. இதன் காரணமாகக் காலாண்டு முடிவுகள் வெளிவந்த பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை உயர்ந்தது. பங்கு ஒன்றுக்கு 2 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது.

நெஸ்லே இந்தியா (Nestle India)

உணவுப் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம், மார்ச் காலாண்டில் 14.46% உயர்ந்து 602 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8.9% உயர்ந்து 3,600 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் டிவிடெண் டாக வழங்கியுள்ளது.

இ-காமர்ஸ் வாயிலாகக் கிடைத்த வருவாய் இந்த ஆண்டில் 66% உயர்ந்து உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித் துள்ளது. கொரோனா காரணமாக பல தடைகள் வந்தபோதிலும் இரட்டை இலக்கத்தில் தமது நிறுவனம் சிறப்பான லாபத்தை எட்டியுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பஜாஜ் கன்ஸ்யூமர்ஸ் (Banjaj Consumers)

சிகைப் பராமரிப்பு மற்றும் அழகு பொருள்களுக்கான நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இது, சென்ற மார்ச் காலாண்டில் மொத்த வருவாய் 42.41% உயர்ந்து ரூ.244.86 கோடியாக உள்ளது.

நிகர லாபம் இரு மடங்கு உயர்ந்து, ரூ.54.67 கோடியாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 4 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மைண்ட்ட்ரீ (Mind Tree)

முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனம், சென்ற நான்காம் காலாண்டில் மொத்த வருவாய் 3.0% உயர்ந்து, ரூ.2,109.3 கோடியாக உள்ளது.

இதன் நிகர லாபம் 53.4% உயர்ந்து ரூ.317.3 கோடியாக உள்ளது. எபிட்டா 38% உயர்ந்து 391.3 கோடியாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 17.5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு வழங்கியுள்ளது.

ஏ.சி.சி (ACC)

சிமென்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான இது, சென்ற மார்ச் காலாண்டில் மொத்த வருவாய் 20.6% உயர்ந்து ரூ.4,291 கோடியாக உள்ளது. நிகர லாபம் 74% உயர்ந்து ரூ.562 கோடியாக உள்ளது.

காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் பல முன்னணித் தரகு நிறுவனங்களான ஜெப்பிரிஸ், சிட்டிபேங்க் போன்ற பல நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பங்கை வாங்கப் பரிந்துரை செய்துள்ளன.

டின்பிளேட் கம்பெனி ஆஃப் இந்தியா (Tin Plate)

தகரத் தகடுகள் தயாரிக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இதன் நிகர லாபம், நான்காம் காலாண்டில் 107.04% உயர்ந்து 566.5 கோடியாக உள்ளது.

பங்கு ஒன்றுக்கு 2 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது.

பன்சாலி இன்ஜினீயரிங் (Bhansali Engineering - BEML)

பாலிமர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், மார்ச் காலாண்டில் காலாண்டில் 88.3% உயர்ந்துள்ளது. இதன் நிகர வருவாயும் 1998.73% உயர்ந்து 163.49 கோடி ரூபாயாக உள்ளது

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

பங்குச் சந்தையும் காலாண்டு முடிவுகளும்..!

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கொண்டு வரப்படுவதால், கடந்த இரண்டு வாரங்களாக இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பங்குச் சந்தையில் உற்று நோக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பல நிறுவனங்கள் தமது காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் நல்ல முடிவுகளை வெளியிட்டு வருவது பங்குச் சந்தையில் நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாம் அலை பிரச்னையிலிருந்து மீண்டு வரும்போது சந்தை நிறுவனங்களின் இந்தச் சிறப்பான காலாண்டு முடிவுகள் சந்தையை இறக்கத்தி லிருந்து எழுச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism