நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மாருதி சுஸூகி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் ரிசல்ட் எப்படி? முக்கிய நிறுவனங்களின் 4-ம் காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

Q 4 R E S U L T S

நான்காம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் இங்கே...

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)

முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 72% குறைந்து, 1,102 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வருமானம் 1.8% உயர்ந்து 19,642 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் ஊழியர்களுக்கு ஒன்டைம் போனஸ் வழங்கியதால், அதன் லாபம் சற்றுக் குறைந்துள்ளது. நிறுவனத்துக்கு சென்ற காலாண்டில் மிக அதிகமாக 3.1 பில்லியன் டாலர் அளவுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. ஒரு பங்குக்கு 16 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மாருதி சுஸூகி (Maruti Suzuki)

இந்தியாவின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான இந்த நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 10% குறைந்து 1,166 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வருமானம் 32% உயர்ந்து 24,823கோடி ரூபாயாக உள்ளது.

சென்ற காலாண்டில் மாருதி நிறுவனம் 4,92,235 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் பொது முடக்கம் போடப்பட்டிருந்ததால், மிகக் குறைவான வாகனங்களே விற்பனை செய்யப் பட்டிருந்தன. ஒரு பங்குக்கு 45 ரூபாய் டிவிடெண்டாக வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank)

முன்னணித் தனியார் வங்கியான இந்த வங்கியின் லாபம் நான்காம் காலாண்டில் 261% உயர்ந்து 4,403 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வருமானம் சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் 17% உயர்ந்துள்ளது.

இந்த வங்கியின் வாராக்கடனும் 1.26% என்கிற கடந்த கால அளவில் இருந்து 1.14% குறைந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால், வாராக்கடனுக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இது கொரோனா காலகட்டம் என்பதால், வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வங்கிகள் டிவிடெண்ட் வழங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி முன்னர் அறிவுறுத்தியிருந்தது. அதனால் கடந்த ஆண்டிலிருந்து வங்கிகள் டிவிடெண்ட் எதுவும் வழங்கவில்லை. சென்ற வாரத்தில் வங்கிகள் டிவிடெண்ட் வழங்கலாம் என்ற தளர்வை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அதை ஏற்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குநர் குழு தற்போது ஒரு பங்குக்கு இரண்டு ரூபாய் டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)

மற்றொரு முன்னணித் தனியார் வங்கியான இந்த வங்கியின் லாபம் நான்காம் காலாண்டில் 2,677 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வருமானம் சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் 11% உயர்ந்து 17,555 கோடி ரூபாயாக உள்ளது.

அனைத்து முன்னணி வங்கிகளின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தாலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இடர்ப்பாட்டைச் சந்திக்க அதிக தொகையை ஒதுக்கி வருகின்றன. அதனால் அதன் லாப விகிதம் குறைவாகவே இருந்துவருகிறது. என்றாலும், ஆக்ஸிஸ் வங்கி பல வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பான முடிவைத் தந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFC Life)

முன்னணிக் காப்பீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 2.3 % உயர்ந்து 319.06 கோடி ரூபாயாக உள்ளது. 9.8 லட்சம் புதிய பாலிசிதாரர்கள் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கிறார்கள். கொரோனா காரணமாக இறந்த 2,324 வாடிக்கையாளர் களுக்கு 145 கோடி ரூபாய் க்ளெய்ம் செட்டில் செய்துள்ளது. ஒரு பங்குக்கு 2.02 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத் தின் லாபம் நான்காம் காலாண்டில் 17.4% குறைந்து 1,081 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வருமானம் 0.9% உயர்ந்து 9,730 கோடி ரூபாயாக உள்ளது.

ஒரு பங்குக்கு 2.02 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி கடந்த காலாண்டில் அதிகளவு முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் அதன் பங்கு மூலதனத்தை 2.03 சதவிகிதத் திலிருந்து 2.64 சதவிகிதமாக உயர்த்தி யுள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries)

பிஸ்கட் தயாரிப்பில் இருக்கும் முன்னணி நிறுவனமான இதன் லாபம் நான்காம் காலாண்டில் 3.0% உயர்ந்து 360.1 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வருமானம் 8% உயர்ந்து 3,038 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த காலாண்டில் எண்ணெய் விலை, பால் பொருள் களுக்கான விலை மிக அதிக அளவு உயர்ந்ததால் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக லாப விகிதம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

பஜாஜ் குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிதி நிறுவனம். இதன் லாபம் நான்காம் காலாண்டில் 30% உயர்ந்து 1,161 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வருமானம் சென்ற ஆண்டோடு ஒப்பிட்டால் 4% குறைந்து 4,287 கோடி ரூபாயாக உள்ளது.
ஒரு பங்குக்கு 10 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட இருக்கிறது.

டாடா எலெக்ஸி (Tata Elxi)

இன்ஜினீயரிங் துறையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான இதன் லாபம் நான்காம் காலாண்டில் 40% உயர்ந்து 115.6 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வருமானம் 18.1% உயர்ந்து 518.39 கோடி ரூபாயாக உள்ளது.

ஏபிபி இந்தியா (ABB India)

ஸ்விட்சர்லாந்தைத் தலைமை யிடமாகக் கொண்ட ரோபோ டிக்ஸ், ஆட்டோமேஷன் துறையின் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த காலங்களுடன் ஒப்பிட்டால் இரு மடங்கு வளர்ச்சி பெற்று 151 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வருமானம் 1,629 கோடி ரூபாயாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்