Published:Updated:

டி.சி.எஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

டி.சி.எஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

சென்ற நிதி ஆண்டின் (2021-22) கடைசி காலாண்டு முடிவுகள் அதாவது, மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடுவது இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. இனிவரும் மாதங்களில் பங்குகளின் விலையேற்றத்துக்கு முக்கியமான காரணியாக அந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இருக்கும் என்பதால், ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளும் வல்லுநர்களால் அதிக உன்னிப்புடன் கவனிக்கப்படுகிறது.

இந்த வாரம் வெளிவந்த முக்கிய நிறுவனங் களின் காலாண்டு முடிவுகளின் தொகுப்பு இதோ...

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services)

நமது நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 7.4% அதிகரித்து, ரூ.9,926 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 15.75% அதிகரித்து, ரூ.50,591 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய ஒப்பந்தங்களின் அளவு மட்டும் 11.3 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இது நிறுவனத்துக்கு மிக சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

சென்ற காலாண்டில் அதிக அளவு ஊழியர் கள் பணியிலிருந்து ராஜினாமா செய்த காரணத்தால் நிறுவனத்தின் லாபம் சற்றுக் குறைந்துள்ளது. சென்ற காலாண்டில் 35,000 ஊழியர்களைப் புதிதாக நிறுவனம் பணி அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அமைந்ததால், வரும் காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக ஏற்றம் அடையும் என்று பல தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், ஒரு பங்குக்கு ரூ.22 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

டி.சி.எஸ், டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

டெல்டா கார்ப் (Delta Corp)

காசினோ மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 17% குறைந்து, ரூ.48 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற காலாண்டையொட்டிய அளவில் ரூ.218 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1.5 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது. நோய்த் தொற்றுக் காலத்துக்குப் பிறகு, இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் வருங்காலத்தில் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும் என்றும் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எம் ஃப்ருவரிஸ் (GM Breweries)

மதுபானம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 103% உயர்ந்து, ரூ.40 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 16.64% உயர்ந்து, ரூ.541 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.5 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

டின் பிளேட் (Tin Plate)

தகர ஷீட்டுகள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 103% உயர்ந்து, ரூ.114 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 59% உயர்ந்து, ரூ.1,106 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.4 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism