Published:Updated:

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஏ.சி.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஏ.சி.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் குறித்துப் பார்ப்போம்.

இன்ஃபோசிஸ் (Infosys)

இந்த நிறுவனத்தின் லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற மார்ச் காலாண்டில் 12% அதிகரித்து, ரூ.5,686 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 1% அதிகரித்து, ரூ.32,276 கோடியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டு அதிக வளர்ச்சியை அடைந் துள்ளது. ஆனாலும், இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிடக் குறைவாக இருந்ததால் இந்த நிறுவன பங்கு காலாண்டு முடிவுக்குப் பிறகு, 15% குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (HDFC Bank)

நம் நாட்டின் முதன்மையான தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் 23% அதிகரித்து, ரூ.10,055 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 10% அதிகரித்து, ரூ.18,873 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிதி நிலை முடிவுகளும் சந்தையின் எதிர்பார்ப்பைவிட சற்றுக் குறைந்து வந்ததால் பங்கின் விலை 7% வரை குறைந்து வர்த்தகம் ஆகிவருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இதன் பங்கு விலை பெரிய மாற்றமின்றி வர்த்தகமாகி வருவதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கிச் சேர்க்கலாம் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஏ.சி.சி...
ரிசல்ட் எப்படி..?

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் (ICICI Prudential Life)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் மூன்று மடங்கு உயர்ந்து, ரூ.185 கோடியாக உள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்களின் மூலம் கிடைக்கும் வருவாய் 31% அதிகரித்து, ரூ.775 கோடியாக உள்ளது. எல்.ஐ.சி நிறுவனத் தின் புதிய பங்கு வெளியீடு ( ஐ.பி.ஓ) விரைவில் வெளிவர இருப்பதால் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற மூன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. ஆயுள் காப்பீட்டு துறையின் வளர்ச்சி வருங்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் இந்த நிறுவனப் பங்குகளை நீண்டகால நோக்கில் வாங்கிச் சேர்க்கலாம் என்று பல பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 55 பைசா டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

மைண்ட்ட்ரீ (Mind Tree)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 49% அதிகரித்து, ரூ.473 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 37% அதிகரித்து, ரூ.2,897 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை 2019-ம் ஆண்டு எல் & டி நிறுவனம் கையகப்படுத்தியது. தற்போது எல் & டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட்ட்ரீ ஆகிய இரண்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் எல் & டி ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகள் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து உள்ளன.

ஏ.சி.சி (ACC)

முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 29.6% குறைந்து, ரூ.396.3 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் 3.1% அதிகரித்து, ரூ.4,426 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டைவிட லாப விகிதம் குறைந்தாலும் இந்த நிறுவனத்தின் லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட கணிசமாக அதிகரித்துள்ளது. மூலப் பொருள்களின் விலை உயர்வை சமாளிக்க பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக லாப விகிதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எல் அண்ட் டி இன்ஃபோடெக் (L&T Infotech)

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 17% அதிகரித்து, ரூ.637 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 32% அதிகரித்து, ரூ.4,301 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருவாய் முக்கிய மைல்கல்லான 2 பில்லியன் டாலர் என்ற அளவை தற்போது எட்டியுள்ளது. மேலும் ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism