Published:Updated:

ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ்...ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ்...ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் குறித்துப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 59.42% அதிகரித்து, ரூ.7,019 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானமும் 21% அதிகரித்து, ரூ.6,12,605 கோடியாக உள்ளது. இந்த வங்கி யின் நிகர வாராக்கடன் சென்ற ஆண்டின் அளவான 0.85% என்ற நிலையிலிருந்து, 0.76% என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த வங்கிப் பங்கை வாங்குவதற்கு பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும், ஒரு பங்குக்கு ரூ.5 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. சென்ற வாரம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் இந்த வாரம் ஒரு பங்குக்கு ரூ.15.5 டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ்...ரிசல்ட் எப்படி..?

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFC Life)

தனியார் துறை சார்ந்த ஆயுள் காப்பீடு வழங்கும் முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் 12% அதிகரித்து, ரூ.357 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகரக் காப்பீட்டு பிரீமியம் 11.04% அதிகரித்து, ரூ.14,290 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.1.70 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் புதிய பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட இருப்பதால். ஆயுள் காப்பீடு வழங்கும் பிற நிறுவனங்களின் பங்குகளின் விலை கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்குப் பிறகு, ஆயுள் காப்பீட்டுத் துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை உயர வாய்ப்புள்ளதாகப் பல பங்குத் தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. ஆயுள் காப்பீட்டுத் துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் வரும் ஆண்டு இறுதிக்குள் 30% வரை ஏற்றம் காணும் என்று இந்த நிறுவனப் பங்குகளை வாங்க பல தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ராலிஸ் இந்தியா (Rallis India)

டாடா குழுமத்தைச் சார்ந்த விவசாயத்துறை சார்ந்த முன்னணி நிறுவனமான இது, சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் ரூ.14 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 7.7% அதிகரித்து, ரூ.508 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வல்லுநர் களின் கணிப்பைவிட குறைவாக இருந்ததன் காரணமாக இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரத்தில் 15% வரை சரிந்து வர்த்தகமானது. மூலப்பொருள் கள் விலை உயர்வு காரணமாக நஷ்டத்தைச் சந்தித்தாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc)

வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த முன்னணி மெட்டல் துறை நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண் டில் வருடாந்தர அடிப்படையில் 18% அதிகரித்து, ரூ.2,928 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 26% அதிகரித்து, ரூ.8,797 கோடியாக உள்ளது. மேலும், சென்ற ஆண்டில் முக்கியமான மைல் கல்லான ஒரு மில்லியன் டன் ஜிங்க் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ்...ரிசல்ட் எப்படி..?

ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் (ICICI Lombard General Insurance)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10% குறைந்து, ரூ.313 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காப்பீட்டு வருமானம் 27% அதிகரித்து, ரூ.3,318 கோடியாக உள்ளது. இதன் நிகர வருமானம் 33% அதிகரித்து, ரூ.4,636 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்புக்கு சற்றுக் குறைவாக வந்த காரணத்தால் இந்த நிறுவனப் பங்குகள் சென்ற வாரத்தில் 3% வரை குறைந்து வர்த்தகம் ஆகியது.

சுந்தரம் ஃபாசனர்ஸ் (Sundaram Fasteners)

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்ட ஆட்டோ மொபைல் உதிரி பாகம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 24% குறைந்து, ரூ.107 கோடியாக உள்ளது. இதன் நிகர வருமானம் 7% அதிகரித்து, ரூ.1,340 கோடியாக உள்ளது. சென்ற இரண்டு ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனங் கள் பெரிதாக லாபம் ஈட்டவில்லை. வரும் காலத்தில் ஆட்டோ மொபைல் துறை சிறப்பான எழுச்சி பெறும் என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜி.எம்.டி.சி (GMDC)

குஜராத்தைத் தலைமை யிடமாகக் கொண்ட இரும்புத் தாது தயாரிக்கும் முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் ரூ.177 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.185 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. இதன் நிகர வருமானம் 90% அதிகரித்து, ரூ.1,097 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.4.3 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் (ICICI Securities)

ஐ.சி.ஐ.சி.ஐ குழுமத்தைச் சார்ந்த முதலீட்டுத் துறை சார்ந்த நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 3% அதிகரித்து, ரூ.340 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 21% அதிகரித்து, ரூ.892 கோடியாக உள்ளது. மக்களிடம் முதலீட்டுப் பழக்கம் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில், இந்த நிறுவனத்திடம் தற்போது 76 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்ற காலாண்டில் மிக அதிக அளவில் 6.2 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 80% அதிகரித்து, ரூ.2,419 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு ரூ.7,028 கோடி லாபத்தை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானமும் 30% அதிகரித்து, ரூ.6,068 கோடியாக உள்ளது.

டாடா மெட்டாலிக்ஸ் (Tata Merlin’s)

தண்ணீர் குழாய்கள் மற்றும் பைப்புகள் தயாரிக்கும் டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 31% குறைந்து, ரூ.32 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தின் நிகர வருமானம் 20% அதிகரித்து, ரூ.818 கோடியாக உள்ளது. மூலப்பொருள்கள் விலை உயர்வு காரணமாக செலவினம் அதிகரித்ததால், லாபம் குறைந்ததாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism