Published:Updated:

மாருதி சுஸூகி, ஹெச்.டி.எஃப்.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

மாருதி சுஸூகி, ஹெச்.டி.எஃப்.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் குறித்துப் பார்ப்போம்.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் (Hindustan Unilever)

நாட்டின் முதன்மையான எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 9% அதிகரித்து, ரூ.2,327 கோடியாக உள்ளது. நிகர வருமானம் 10.4% அதிகரித்து, ரூ.13,190 கோடியாக உள்ளது.

சென்ற நிதி ஆண்டில் மொத்தமாக 50,000 கோடி ரூபாய் வருவாயை அந்த நிறுவனம் ஈட்டியுள்ளது. இந்த முக்கிய மைல்கல்லை இதே துறை சார்ந்த வேறு நிறுவனம் இதுவரை ஈட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.19 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பான காலாண்டு முடிவு களை வெளியிட்டதால் இந்த நிறுவனத்தின் பங்கு சென்ற வாரத்தில் 5% வரை ஏற்றம் கண்டது.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10.3% அதிகரித்து, ரூ.1,469 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5% அதிகரித்து, ரூ.7,975 கோடியாக உள்ளது.

சென்ற நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு 2.5 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.140 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

மாருதி சுஸூகி, ஹெச்.டி.எஃப்.சி...
ரிசல்ட் எப்படி..?

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank)

முன்னணி தனியார் துறை வங்கியான இதன் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 54% அதிகரித்து, ரூ.4,118 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 17% அதிகரித்து, ரூ.8,819 கோடியாக உள்ளது.

சென்ற காலாண்டில் இந்த வங்கி சிட்டி வங்கியின் இந்திய வணிகத்தை கையகப்படுத்தி யுள்ளது. இதன் மூலம் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு, காப்பீடு, வெல்த் மேனேஜ் மென்ட் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் ஆக்ஸிஸ் வங்கிக்குக் கிடைப்பார்கள். இதன் மூலம் வங்கியின் வருவாய் வரும் காலத்தில் அதிகரிக்கும் என்று வங்கி தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 37% அதிகரித்து, ரூ.1,346 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 23% அதிகரித்து, ரூ.18,862 கோடியாக உள்ளது. மேலும் ஒரு பங்குக்கு ரூ.4 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி (SBI Life Insurance Company)

ஆயுள் காப்பீடு வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் நிகர லாபம் 26% அதிகரித்து, ரூ.672 கோடியாக உள்ளது. காப்பீடு மூலம் கிடைக்கப்பெற்ற பிரீமியம் தொகை 12% அதிகரித்து, ரூ.17,434 கோடியாக உள்ளது.

எல்.ஐ.சி பங்கு கிரே மார்க்கெட்டில் அதிக விலைக்கு போவதால் ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகள் விலை குறுகிய காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பல பங்கு தரகு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி (Indus Ind Bank)

ஹிந்துஜா குழுமத்தைச் சார்ந்த முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 55% அதிகரித்து, ரூ.1,361 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 6% அதிகரித்து, ரூ.7,860 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் முடிவுகள் சிறப்பாக இருந்ததால் இந்த வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு பல தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ஆயிரம் ரூபாய் அளவில் வர்த்தகமாகும் இந்த நிறுவனப் பங்கின் விலை ஒருவருட காலத்துக்குள் 30% வரை அதிகரிக்கும் என்று அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இந்த வங்கி ஒரு பங்குக்கு ரூ.8.5 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

மாருதி சுஸூகி (Maruthi Suzuki)

முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 51% அதிகரித்து, ரூ.1,875 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10% அதிகரித்து, ரூ.26,749 கோடி யாக உள்ளது. மேலும், சென்ற ஆண்டில் மிக அதிகபட்சமாக 4.88 லட்சம் வாகனங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

பயோகான் (Biocon)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 4% அதிகரித்து, ரூ.283 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் 25% அதிகரித்து, ரூ.2,408 கோடி யாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

வேதாந்தா (Vedanta)

முன்னணி மெட்டல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10% குறைந்து, ரூ.5,799 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் 41.14% அதிகரித்து, ரூ.39,342 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.31.5 முதல் தவணை டிவிடெண்டாக வழங்க இருக்கிறது. சென்ற ஆண்டு இந்த நிறுவனம் இரண்டு தவணைகளில் ரூ.45 டிவிடெண்ட் வழங்கியிருந்தது.

இந்திய நிறுவனங்களில் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனமாகத் தொடர்ந்து வேதாந்தா விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கி டெப்பாசிட் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட தொடர்ந்து அதிக டிவிடெண்ட் தொகையை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

அம்புஜா சிமென்ட்ஸ் (Ambuja Cements)

உலகின் சிமெண்ட் உற்பத்தியில் முதன்மை நிறுவனமான ஹொல்சிம் நிறுவனத்தின் துணை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 26% குறைந்து, ரூ.495 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருமானம் 7% அதிகரித்து, ரூ.3,855 கோடியாக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி (HDFC)

வீட்டுக் கடன் வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் பெரும்பாலான சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிகமாக 16% உயர்ந்து, ரூ.3,700 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம்14% அதிகரித்து, ரூ.4,601 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

மாருதி சுஸூகி, ஹெச்.டி.எஃப்.சி...
ரிசல்ட் எப்படி..?

அல்ட்ராடெக் சிமென்ட் (Ultratech Cement)

பிர்லா குழுமத்தைச் சார்ந்த முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 48% அதிகரித்து, ரூ.2,620 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 9.45% அதிகரித்து, ரூ15,767 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.38 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britannia Industries)

பிஸ்கட் தயாரிப்பில் நமது நாட்டின் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 4% அதிகரித்து, ரூ.380 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 15.5% அதிகரித்து, ரூ.3,508 கோடியாக உள்ளது.

ஒரு பங்குக்கு ரூ.15.5% டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. மேலும் தமிழகம், பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் மூன்று பசுமை தொழிற் சாலைகளை உருவாக்கி உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.

விப்ரோ (Wipro)

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 2.7% அதிகரித்து, ரூ.20,860 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 4% அதிகரித்து ரூ.3,087 கோடியாக உள்ளது.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் 47% அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம் ரூ.9,835 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.69,324 கோடியாக உள்ளது. கமாடிட்டி பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்ததால், இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் ரூ.51 டிவிடெண்ட் அறிவித்திருப்பதுடன், 10:1 என்கிற விகிதத்தில் பங்கு பிரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism