Published:Updated:

ஏசியன் பெயின்ட்ஸ், அதானி பவர்...ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

ஏசியன் பெயின்ட்ஸ், அதானி பவர்...ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் குறித்து பார்ப்போம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)

பெட்ரோகெமிக்கல், தொலைத்தொடர்பு, ரீடெயில் என்று பன்முகத்தன்மை கொண்ட நிறுவனம் இது. இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22.4% அதிகரித்து, ரூ.16,203 கோடியாக உள்ளது. நிகர வருமானம் 36% அதிகரித்து, ரூ.2,11,000 கோடியாக உள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தமாக நூறு பில்லியன் டாலர் அளவுக்கு வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தைச் சார்ந்த ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தற்போது எட்டு மாநிலங்களில் 5ஜி சேவைக்கான முயற்சிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)

முன்னணி பெயின்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் ரூ.850 கோடியாக உள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக ஒருமுறை செலவினம் ரூ.116 கோடி ஏற்பட்டதன் காரணமாக லாப விகிதம் குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 20.6% அதிகரித்து, ரூ.7,890 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.15.5 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)

முன்னணி தனியார்துறை வங்கி இது. இந்த வங்கியின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 65% உயர்ந்து, ரூ.2,767 கோடியாக உள்ளது. இந்த வங்கி யின் நிகர வட்டி வருமானம் 18% உயர்ந்து, ரூ.4,521 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் தனது ஒரு பங்குக்கு ரூ.1.1 டிவிடெண்ட் வழங்குகிறது.

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Tata Consumer Products)

முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனம் இது. இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 2.2 மடங்கு உயர்ந்து, ரூ.239 கோடியாக உள்ளது. நிகர வருமானம் 4.54% உயர்ந்து, ரூ.3,175 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் அதிக பணவீக்கம் காரணமாக நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்தபோதும் செலவினத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிறுவனம் நல்லதொரு வளர்ச்சியை அடைந்துள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்குக்கு ரூ.6.05 டிவிடெண்ட் வழங்குகிறது.

ஏசியன் பெயின்ட்ஸ், அதானி பவர்...ரிசல்ட் எப்படி..?

அஜந்தா ஃபார்மா (Ajantha Pharma)

முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனம் இது. இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 12.88% குறைந்து, ரூ.135 கோடியாக உள்ளது. நிகர வருமானம் 2.35% அதிகரித்து, ரூ.766 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் அளவான ரூ.17.89 என்ற அளவிலிருந்து ரூ. 15.79 ஆக உள்ளது. பொது வாக, சென்ற நிதி ஆண்டில் பெரும்பாலான ஃபார்மா துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளதன் காரணமாக பல ஃபார்மா துறை நிறுவனங் களின் பங்குகள் குறைந்த விலை யில் வர்த்தகமாகி வருகின்றன.

தீபக் நைட்ரேட் (Deepak Nitrate)

முன்னணி கெமிக்கல் துறை சார்ந்த நிறுவனமான இந்த நிறுவனத்தின் வருமானம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 37% அதிகரித்து, ரூ.1,067 கோடியாக உள்ளது. இதன் நிகர வருமானம் முன்னெப்போதும் இல்லாத புதிய அளவாக 56% அதிகரித்து, ரூ.6,845 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் ரூ.1,500 கோடி அளவுக்கு நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

அதானி பவர் (Adani Power)

மின்சார உற்பத்தி செய்யும் முன்னணி தனியார் துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் பன்மடங்கு உயர்ந்து, ரூ.4,645 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.13 கோடி லாபம் ஈட்டிய இந்த நிறுவனம், தற்போது 320 மடங்கு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. ராஜஸ் தான் அரசிடமிருந்து நிலுவை யிலுள்ள பணம் திரும்பக் கிடைத்தது லாபம் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானமும் 93% அதிகரித்து, ரூ.13,308 கோடியாக உள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் (Adani Transmission)

மின் தடங்களை அமைத்திடும் முன்னணி தனியார் துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 7.6% குறைந்து, ரூ.237 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10% உயர்ந்து, ரூ.3,165 கோடியாக உள்ளது. மின்தடை கட்டமைப்புகளைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாகத் தனியார் துறையில் மின் கட்டமைப்பை பேணுவதில் முதன்மை நிறுவனமாக தொடர்ந்து விளங்கும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 16% உயர்ந்து, ரூ.121 கோடியாக உள்ளது.இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 50% உயர்ந்து, ரூ.1,587 கோடியாக உள்ளது.

டாபர் இந்தியா (Dabur India)

முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனம் இது. இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22% குறைந்து, ரூ.294 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 7.7% அதிகரித்து, ரூ.2,518 கோடியாக உள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தமாக ரூ.10,888 கோடி வருமானத்தை இந்த நிறுவனம் ஈட்டியுள்ளது. ரூ.10,000 கோடி வருவாய் என்ற புதிய மைல்கல்லை இந்த நிறுவனம் முதல் முறையாக எட்டியுள்ளது. மேலும், ஒரு பங்குக்குரூ.2.70 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் (Exide Industries)

பேட்டரிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 22.8% குறைந்து, ரூ.3,552 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் 11 மடங்கு உயர்ந்து, ரூ.321 கோடியாக உள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் ரூ.3.79 என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து ரூ.46.58-ஆக அதிகரித்து இருக்கிறது.

யூ.பி.எல் (UPL)

உரத் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 29.7 அதிகரித்து, ரூ.1,379 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 24% அதிகரித்து, ரூ.15,861 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் சந்தையின் கணிப்பைவிட அதிகமாக இருந்ததன் காரணமாகப் பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனப் பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

கனரா பேங்க் (Canara Bank)

முன்னணி பொதுத்துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் 64% அதிகரித்து ரூ.1,662 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.22,323 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு இந்த வங்கி ரூ.6.50 டிவிடெண்ட் வழங்குகிறது. வாராக்கடன் பிரச்னைகளால் எஸ்.பி.ஐ வங்கியைத் தவிர்த்து பிற வங்கிகள் பல ஆண்டுகளாக டிவிடெண்ட் எதையும் வழங்குவதில்லை. தற்போது எஸ்.பி.ஐ வங்கியைத் தொடர்ந்து மற்ற பொதுத்துறை வங்கிகளும் டிவிடெண்ட் வழங்குவது முதலீட்டாளர் களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism