Published:Updated:

எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவு கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்துப் பார்ப்போம்.

எல் & டி (L & T)

கட்டுமானத் துறையில் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10% அதிகரித்து, ரூ.3,621 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10% அதிகரித்து, ரூ.52,851 கோடியாக உள்ளது.

சென்ற ஆண்டு புதிய ஒப்பந்தங்களின் அளவானது 10% அதிகரித்து ரூ.1,92,000 கோடியாக உள்ளது. வெளி நாடுகளில் மிக அதிகபட்சமாக 46% ஒப்பந்தங்கள் வெளி நாடுகளில் கையெழுத்தாகியுள்ளன.

குறிப்பாக, அரபு நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு மிக அதிக அளவு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. மேலும், ஒரு பங்குக்கு 22 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஆர்.பி.எல் பேங்க் (RBL Bank)

தனியார் துறை சார்ந்த முன்னணி வங்கி இது. இந்த வங்கியின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.198 கோடி யாக உள்ளது. மேலும், நிகர வட்டி வருமானம் 25% அளவுக்கு உயர்ந்துள்ளது.

சென்ற ஆண்டில் இந்த வங்கியின் இயக்குநர் குழுவில் மத்திய ரிசர்வ் வங்கி நியமன அதிகாரியை நியமித்ததால், இந்த வங்கிப் பங்கு கடுமையான சரிவைச் சந்தித்தது.

சென்ற ஆண்டு 220 ரூபாய் அளவுக்கு வர்த்தகமான இந்த நிறுவனத்தின் பங்கு விலை 100 ரூபாயாகச் சரிந்தது. தற்போது சிறப்பான முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த வங்கிப் பங்கு 60% வரை விலை உயரும் என்று பல பங்கு தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ்...
ரிசல்ட் எப்படி..?

பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)

பொதுத்துறை சார்ந்த நமது நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி இது. இந்த வங்கியின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 66% சரிந்து, ரூ.201 கோடியாக உள்ளது.

இந்த வங்கியின் வட்டி வருமானம் 5% அதிகரித்து, ரூ.7,325 கோடியாக உள்ளது. சந்தையின் எதிர்பார்ப்பைவிட மிகக் குறைவாக முடிவுகள் வெளியானதால், இந்த வங்கியின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தது.

கடந்த பல வருடங்களாக இந்த வங்கியின் செயல்பாடு சந்தையின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருப்பதால், கடுமையான நஷ்டத்தை முதலீட்டாளர்களுக்கு இந்த வங்கிப் பங்கு தந்து வருகிறது. ஒரு பங்குக்கு 64 பைசா டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

எஸ்.பி.ஐ (State Bank of India)

நமது நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கி இது. இந்த வங்கியின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 41% அதிகரித்து, ரூ.9,114 கோடி யாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வருமானம் 15.26% அதிகரித்து ரூ.31,198 கோடியாக உள்ளது.

வாராக்கடன் தொடர்ந்து குறைந்து வருவதால், வாராக் கடனுக்கான வைப்புத்தொகை இந்த ஆண்டு தொடக்கத் திலிருந்து தற்போது மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. மேலும் ஒரு பங்குக்கு ரூ.7 டிவிடெண்ட் வழங்குகிறது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)

முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நஷ்டம் கணிசமாகக் குறைந்து, ரூ.1,033 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் இந்த வருட ஆரம்பத்தில் ரூ.7,605 கோடியாக இருந்தது.

என்றாலும், ஆட்டோமொபைல் துறை சார்ந்த பிரச்னை களான மைக்ரோ சிப் பற்றாக்குறை போன்றவை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள தாகவும் நிறுவனம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகக் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவன பங்குகள் 10% வரை உயர்ந்து வர்த்தக மானது.

எய்ஷர் மோட்டார்ஸ் (Eicher Motors)

கனரக வாகனங்கள் மற்றும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் தயாரிக்கும் முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண் டில் வருடாந்தர அடிப் படையில் 16% அதிகரித்து, ரூ. 610 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8.6% அதிகரித்து, ரூ.3,193 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.21 டிவிடெண்ட் வழங்குகிறது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 39% அதிகரித்து ரூ.1,506 கோடியாக உள்ளது.

இது பல சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிட அதிக மாகும். நிறுவனத்தின் நிகர வருமானமும் 24.5% அதிகரித்து ரூ.12,116 கோடியாக உள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

முன்னணி பொதுத்துறை சார்ந்த வங்கி இது. இந்த வங்கி யின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 9 மடங்கு உயர்ந்து, ரூ.7,272 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 13% அதிகரித்து, ரூ.32,621 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.1.2 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

பந்தன் பேங்க் (Bandhan Bank)

மேற்கு வங்கத்தைத் தலைமை இடமாகக் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் பன்மடங்கு உயர்ந்து, ரூ.1,902 கோடியாக உள்ளது.

சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த வங்கியின் லாபமானது, ரூ.103 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த வங்கி யின் நிகர வட்டி வருமானம் 43% அதிகரித்து ரூ.3,504 கோடியாக உள்ளது.

எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ்...
ரிசல்ட் எப்படி..?

நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி (NCC)

முன்னணி கட்டுமானம் மற்றும் சாலை அமைக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து, ரூ.243 கோடியாக உள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஆண்டின் அளவான ரூ.2,639 கோடி என்ற நிலையிலிருந்து ரூ.3,179 கோடியாக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான சாலைக் கட்டமைப்பு அமைக்கும் நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாகப் பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை. தற்போது இந்த நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது முதலீட் டாளர்களிடம் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பெட்ரோநெட் எல்.என்.ஜி (Petronet LNG)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 24% அதிகரித்து, ரூ.791 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 47% அதிகரித்து, ரூ.11,160 கோடியாக உள்ளது.

வருவாய் மற்றும் லாபம் ஆகிய இரண்டும் சென்ற காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.4.50 டிவிடெண்ட் வழங்குகிறது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 31.4% குறைந்து, ரூ.6,022 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 25.6% அதிகரித்து, ரூ. 2.06 லட்சம் கோடியாக உள்ளது.

மேலும், ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் போனஸாக வழங்குவதற்கு நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3.60 டிவிடெண்ட் வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் (Bharti Airtel)

முன்னணி தொலைத்தொடர்பு துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்றமார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து ரூ.2,008 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் நிகர வருமானம் 22% அதிகரித்து ரூ.31,500 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

தொகுப்பு: பிரமேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism