Published:Updated:

அசோக் லேலாண்ட், என்.டி.பி.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

அசோக் லேலாண்ட், என்.டி.பி.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள் குறித்துப் பார்ப்போம்.

ஐ.டி.சி (ITC)

சிகரெட், எஃப்.எம்.சி.ஜி, தகவல் தொழில் நுட்பம், விவசாயம் மற்றும் ஹோட்டல்கள் போன்ற பல்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 12% அதிகரித்து ரூ.4,191 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 16% அதிகரித்து ரூ.16,426 கோடியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.6.25 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் தரப்பட்ட ரூ.5.25 டிவிடெண்டையும் சேர்த்து, ரூ.11.5 டிவிடெண்ட் சென்ற ஆண்டுக்கு வழங்கியதன் மூலம் தொடர்ந்து அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனமாக ஐ.டி.சி திகழ்கிறது.

கடந்த ஆறு மாதங்களாகப் பல முன்னணி நிறுவனப் பங்குகள் கணிசமாக சரிவை சந்தித்த நிலையில், இந்த நிறுவன பங்கு மட்டும் 30 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கியுள்ளது.

அசோக் லேலாண்ட், என்.டி.பி.சி...
ரிசல்ட் எப்படி..?

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance)

வீட்டுக் கடன் வழங்கும் முன்னணி பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 180% அதிகரித்து, ரூ.1,118 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 7% அதிகரித்து, ரூ.5,300 கோடியாக இருக்கிறது.

இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்கு கிறது. ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்திய காரணத்தால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைந்தபட்சம் 0.2% வரை இந்த நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மணப்புரம் ஃபைனான்ஸ் (Manapuram Finance)

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட தங்கநகைக் கடன் வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 44% குறைந்து, ரூ.261 கோடியாக உள்ளது.

இந்த றுவனத்தின் நிகர வருமானம் 10.2% குறைந்து, ரூ.986 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வாராக்கடன் அளவும் 1.6% அதிகரித்துள்ளது. பல சந்தை வல்லுநர்களின் கணிப்பை விடக் குறைவான லாபத்தை நிறுவனம் பெற்றுள்ளதால், இந்த நிறுவனப் பங்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. தற்போது இந்தப் பங்கு அதன் இரண்டு வருட குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது.

அசோக் லேலாண்ட் (Ashok Leyland)

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது.

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 274% அதிகரித்து, ரூ.901 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் 24.9% அதிகரித்து, ரூ.8,744 கோடியாக உள்ளது.

ஆட்டோமொபைல் துறை கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு காரணமாகப் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தற்போது புதிய வாகனங்களுக் கான தேவை அதிகரித்துள்ள தாகவும் அதன் காரணமாக நிறுவனத்தின் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.1 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது

என்.டி.பி.சி (NTPC)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண் டில் வருடாந்தர அடிப்படையில் 12% அதிகரித்து, ரூ.5,200 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 23% அதிகரித்து, ரூ.37,075 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்க இருக் கிறது. இதையும் சேர்த்து இந்த ஆண்டில் ரூ.7 டிவிடெண்ட் வழங்கியிருக்கிறது.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddys Laboratory)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்க்கெட்டில் வருடாந்தர அடிப்படையில் 10 மடங்குக்கு மேல் குறைந்து, ரூ.87.5 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருமானம் 15% உயர்ந்து ரூ.5,437 கோடியாக உள்ளது.

பேடிஎம் (Paytm)

இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் ரூ. 761 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத் தில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் ரூ.441 கோடியாக இருந்தது. என்றாலும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 89% அதிகரித்து ரூ.1,541 கோடியாக உள்ளது.

மாதாந்தர அடிப்படையில் பேடிஎம் சேவையைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 41% அதிகரித்து, 7 கோடியாக உள்ளது. சென்ற வருடத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பிறகு, கடுமையான விலை வீழ்ச்சியைக் கண்ட இந்த நிறுவனப் பங்குகள் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் (India Bulls Housing Finance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11.23% அதிகரித்து, ரூ.307 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10% குறைந்து, ரூ.2,189 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் அடுத்த ஆண்டு 10 சதவிதமும் 2024-ம் ஆண்டு முதல் 15 சதவிகிதமும் வளர்ச்சி அடையும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (Grasim Industries)

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஜவுளித்துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 122% அதிகரித்து, ரூ.1,068 கோடியாக இருக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 45.1% அதிகரித்து, ரூ. 6,376 கோடியாக உள்ளது. மேலும், டிவிடெண்ட் மற்றும் சிறப்பு டிவிடெண்ட் என்ற வகையில் மொத்தம் ரூ.10 டிவிடெண்டாக வழங்குகிறது.

வீல்ஸ் இந்தியா (Wheels India)

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட டிவிஎஸ் மோட்டார் குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 10% அதிகரித்து, ரூ.1,194 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற ஆண்டின் அளவான ரூ.19.37 கோடியில் இருந்து ரூ.26.75 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் ரூ.8.03 என்ற அளவில் இருந்து ரூ.11.12 ஆக அதிகரித்துள்ளது.

டிவிஸ் லேப் (Divis Lab)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகரலாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 78% அதிகரித்து, ரூ.895 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 46% அதிகரித்து,ரூ.2,546 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் தொழில் அபிவிருத்திக்காக செலவழிக்க உள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிட சிறப்பாக இருந்தாலும் பங்குசந்தையின் சரிவு காரணமாக இதன் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, 15% வரை இதன் பங்கு விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism