Published:Updated:

கோல் இந்தியா, ஐ.ஆர்.சி.டி.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

கோல் இந்தியா, ஐ.ஆர்.சி.டி.சி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்து பார்ப்போம்.

எல்.ஐ.சி (LIC)

ஆயுள் காப்பீட்டுத் துறையில் முதன்மையான பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 17% குறைந்து, ரூ.2,409 கோடியாக உள்ளது. என்றாலும், முழு ஆண்டு அடிப்படையில் 39% அதிகரித்து, ரூ.4,043 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 11.64% அதிகரித்து, ரூ.2,11,471 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.1.5 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதன் வெளியீட்டுக்குப் பிறகு, கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

ஹிண்டால்கோ (Hindalco)

ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த காப்பர் மற்றும் அலுமினியம் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்காக உயர்ந்து, ரூ.3,851 கோடியாக உள்ளது. நிகர வருமானம் 38% அதிகரித்து ரூ.55,674 கோடியாக உள்ளது.

சீனாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், அலுமினியம் விலை கணிசமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக இதன் பங்கு விலை அதன் அதிகபட்ச விலையிலிருந்து 50% வரை சரிந்துள்ளது. தற்போது சீனாவில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அலுமினியத் தின் தேவை அதிகரிக்கும் என்றும் இதன் காரணமாக இந்த நிறுவனத் தின் பங்கு விலை கணிசமாக உயரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோல் இந்தியா, ஐ.ஆர்.சி.டி.சி... 
ரிசல்ட் எப்படி..?

கோல் இந்தியா (Coal India)

பொதுத் துறை சார்ந்த முன்னணி நிலக்கரி தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் வல்லுநர்களின் கணிப்பைவிட மிக அதிகமாக 46% அதிகரித்து, ரூ.6,693 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 22.49% அதிகரித்து ரூ.32,707 கோடியாக உள்ளது. நிலக்கரிக்கான தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்பதால், இந்த நிறுவனப் பங்கு விலை உயரும் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும், ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் (Apollo Hospitals)

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருத்துவக் குழுமம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 46% குறைந்து, ரூ.90 கோடியாக உள்ளது. கேப்பிடல் கெயின் வரிக்காக ஒருமுறை மட்டும் அதிக தொகையை ஒதுக்கீடு செய்ததன் காரணமாக லாப விகிதம் குறைந்துள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தால் நிறுவனத்தின் லாபம் 6% அதிகரித்து, ரூ.178 கோடியாக இருந்திருக்கும். நிறுவனத்தின் நிகர வருமானமும் 24% அதிகரித்து, ரூ.3,546 கோடியாக உள்ளது. சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இந்த நிறுவனம், 9.5 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஒன்றரை மில்லியன் சதுர அடியில் 150 வெளிநோயாளி சிகிச்சை அறைகள், 650 படுக்கை வசதிகள், 1,500 கார்கள் நிறுத்தும் இடம், சாலை விபத்து மற்றும் டிராமா சிகிச்சை வசதி போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட பன்னோக்கு மருத்துவமனையை இந்த நிறுவனம் நிறுவ உள்ளது.

நால்கோ (NALCO)

அலுமினியம் தயாரிப்பில் முன்னணி பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 46% அதிகரித்து, ரூ.6,693 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 22.49% அதிகரித்து, ரூ.32,707 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance)

கேரளாவைத் தலைமையிட மாகக் கொண்ட முன்னணி ஃபைனான்ஸ் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 4% குறைந்து, ரூ.960 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 5% குறைந்து, ரூ.2,678 கோடியாக உள்ளது. ஊரடங்குக் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் நிறுவனத்தின் வருமானம் சற்றுக் குறைந்து உள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலைமை சீராகி வருவதால், தங்கக் கடனுடன் சேர்த்து வீட்டு மற்றும் வாகனக் கடன்களை வழங்க இருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network)

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்ட முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 12.84% அதிகரித்து, ரூ.3,584 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 7.65% அதிகரித்து, ரூ.1,642 கோடியாக உள்ளது.

கோல்கேட் இந்தியா (Colgate India)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 3% அதிகரித்து, ரூ.324 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானமும் 1.4% அதிகரித்து, ரூ.1,293 கோடி யாக உள்ளது.

என்.எம்.டி.சி (NMDC)

இரும்புத் தாது தயாரிப்பில் முன்னணி பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 2.12% குறைந்து, ரூ.6,702 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 35.91% குறைந்து, ரூ.1,817 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் அளவான ரூ.9.64 என்ற நிலையில் இருந்து ரூ.6.20 ஆகக் குறைந்துள்ளது.

சன் பார்மா (Sun Pharma)

பார்மா துறையில் நமது நாட்டின் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனம் யாரும் எதிர்பாராத விதமாக, சென்ற காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் நிகர இழப்பாக ரூ.2,227 கோடியைச் சந்தித் துள்ளது. நிலுவையில் உள்ள சில செட்டில் மென்டு களுக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது நஷ்டத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் 11% அதிகரித்து, ரூ.9,447 கோடியாக உள்ளது.

கோல் இந்தியா, ஐ.ஆர்.சி.டி.சி... 
ரிசல்ட் எப்படி..?

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்காக அதிகரித்து, ரூ.214 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 103% அதிகரித்து, ரூ.691 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1.50 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஜே.எஸ் டபிள்யூ ஸ்டீல் (JSW Steel)

ஸ்டீல் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனம் எதிர்பாராதவிதமாகச் சென்ற மார்ச் காலாண்டில் ரூ.741 கோடி நஷ்டத்தை ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் இந்த நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அதிக நஷ்ட ஈடு வழங்கப்பட்டதால், ஒருமுறை மட்டும் இந்த நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது.

என்றாலும், இந்த நிறுவனத்தின் வருமானம் மிக அதிகபட்சமாக 74% உயர்ந்து, ரூ.46,895 கோடி யாக உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால், அனைத்து மெட்டல் நிறுவனப் பங்கு களும் கடந்த வாரத்தில் கடுமையான சரிவை சந்தித்தன. அதனுடன் சேர்த்து காலாண்டு முடிவுகள் சந்தைக் கணிப் பைவிடக் குறைவாக இருந்ததன் காரண மாக மிக அதிகமான சரிவை இந்த நிறுவனத்தின் பங்கு சென்ற வாரத்தில் சந்தித்துள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism