Published:Updated:

எம்.ஆர்.எஃப், பாரத் போர்ஜ்... ரிசல்ட் எப்படி..? 4-ம் காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

Q 4 R E S U L T S

எம்.ஆர்.எஃப், பாரத் போர்ஜ்... ரிசல்ட் எப்படி..? 4-ம் காலாண்டு முடிவுகள்

Q 4 R E S U L T S

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறைவு பெற்ற 2020-21 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள்..!

பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான இதன் நிகர வட்டி வருமானம் சென்ற காலாண்டுடன் ஒப்பிட்டால், நான்காம் காலாண்டில் 16.3% குறைந்து, ரூ.6,937 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர லாபம் 15.9% உயர்ந்து, ரூ.586 கோடியாக உள்ளது. பல சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளைவிட குறைவான லாபத்தை கடந்த காலாண்டில் வங்கி ஈட்டியுள்ளது. இதன் காரணமாகப் பங்கின் விலை காலாண்டு முடிவுகளுக்கு பிறகு 4% குறைந்து வர்த்தகமானது. என்றாலும் இந்த வங்கியின் துணை நிறுவனமான பி.என்.பி ஹவுஸிங் நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரத்தில் 60% வரை அதிகரித்தது. பி.என்.பி வங்கி, பி.என்.பி ஹவுஸிங் நிறுவனத்தின் 33% பங்குகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கியுடன் சென்ற ஆண்டு கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி இணைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால், மார்ச் காலாண்டில் 83% உயர்ந்து, ரூ.1,330 கோடியாக உள்ளது. இதன் நிகர வட்டி வருமானம் சென்ற காலாண்டுடன் ஒப்பிட்டால், நான்காம் காலாண்டில் 18% குறைந்து ரூ.5,403 கோடியாக உள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (New India Assurance Company)

அரசு சார்பு பொதுக் காப்பீட்டு நிறுவனமான இதன் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 90.6% உயர்ந்து, ரூ.241 கோடி யாக உள்ளது. இதன் நிகர வருமானம் முழு ஆண்டு அடிப்படையில் 15.9% உயர்ந்து, ரூ.7,291 கோடியாக உள்ளது. மேலும், சென்ற ஆண்டில் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 40% உயர்ந்து, ரூ.36,451 கோடியாக உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எம்.ஆர்.எஃப், பாரத் போர்ஜ்... ரிசல்ட் எப்படி..? 4-ம் காலாண்டு முடிவுகள்

பாரத் போர்ஜ் (Bharath Borge)

ஆட்டோமொபைல், பவர் துறை சார்ந்த முன்னணி நிறுவனமான இதன் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் 48.4% உயர்ந்து, ரூ.1,307 கோடியாக உள்ளது. இதன் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.205.44 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா சென்ற ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு உயர்ந்து, ரூ.359 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகள் காரண மாக பங்கின் விலை இந்த ஆண்டின் உச்ச அளவில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.

பங்குச் சந்தை தரகு நிறுவனங்களான சி.எஸ்.எல்.ஏ (இலக்கு விலை ரூ.900), ஜெப்பிரிஸ் (இலக்கு விலை ரூ.925), நோமுரா (இலக்கு விலை ரூ. 924), மார்கன் ஸ்டான்லி போன்றவை இந்த நிறுவனப் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

எம்.ஆர்.எஃப் (MRF)

டயர் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான இதன் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால் மார்ச் காலாண்டில் 51% குறைந்து, ரூ.332 கோடியாக உள்ளது.

இதன் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் 30.7% உயர்ந்து, ரூ.4,816 கோடியாக உள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக லாபம் குறைந்துள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு பங்குக்கு ரூ.94 டிவிடெண்ட் வழங்குகிறது.

குஜராத் ஸ்டேட் பெட்ரோ நெட் (Gujarath State Petro Net)

பெட்ரோல் சுத்தகரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இதன் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் 19.3% உயர்ந்து, ரூ.3,828.65 கோடியாக உள்ளது.

இதன் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 8.82% உயர்ந்து, ரூ.416.68 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகள் காரணமாக பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India)

பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான இதன் நிகர இழப்பு மார்ச் காலாண்டில் ரூ.1,349.21 கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டு வங்கி சந்தித்த நஷ்டமான ரூ.1,529.07 கோடியைவிடச் சற்று குறைவாகும். இதன் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் ரூ.5,779 கோடியாக உள்ளது.

இந்த வங்கியைத் தனியாருக்கு வழங்கவிருப்பதாக வந்துள்ள தகவலால் இந்த வங்கியின் பங்குகள் கணிசமாக உயர தொடங்கியுள்ளன.

மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் (Mrs Bectors Food Specialities)

சென்ற ஆண்டு ஐ.பி.ஓ வந்த உணவுத்துறை சார்ந்த நிறுவனம். இதன் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் 15.26% உயர்ந்து, ரூ.223.98 கோடியாக உள்ளது. இதன் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 41.10% உயர்ந்து ரூ.12.77 கோடியாக உள்ளது.

பல்ராம்பூர் சினி மில்ஸ் (Balrampur Chinni Mills)

முன்னணி சர்க்கரை துறை சார்ந்த நிறுவனம். இதன் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் 41.41% குறைந்து, ரூ.1,019.35 கோடியாக உள்ளது. இதன் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.235.50 கோடியாக உள்ளது. கடந்த சில நாள்களாக இந்தப் பங்கு விலை ஏற்றத்தில் இருக்கிறது!

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism