Published:Updated:

எல்.ஐ.சி ஹவுஸிங்... ஆயில் இந்தியா ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

Q 4 R E S U L T S

எல்.ஐ.சி ஹவுஸிங்... ஆயில் இந்தியா ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

Q 4 R E S U L T S

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறைவு பெற்ற 2020-21-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள்...

பவர் கிரிட் கார்ப்பரேஷன் (Power Grid Corporation)

அரசு துறை சார்ந்த இந்தியாவின் முன்னணி மின்சார உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2021 மார்ச் காலாண்டில் சென்ற மார்ச் 2020 காலாண்டைவிட 6% உயர்ந்து, ரூ.3,526.23 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் சற்று உயர்ந்து ரூ.10,816.33 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்குகிறது. இந்த நிறுவனம் சென்ற ஜனவரியில் ரூ.5, மார்ச்சில் ரூ.4 டிவிடெண்ட் வழங்கி இருந்தது. தற்போதய டிவிடெண்டையும் சேர்த்து ரூ.12 மொத்த டிவிடெண்டாக வழங்கி யுள்ளது. மேலும் 3 பங்குக்கு ஒரு போனஸ் பங்கு வழங்குவதற்கும் பரிந்துரைத்துள்ளது. போனஸ் பங்குகள் வழங்கப்படும் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி ஹவுஸிங்... ஆயில் இந்தியா ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance)

வீட்டுக் கடன் வழங்குவதில் எல்.ஐ.சி குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 5 சதவிகிதம் குறைந்து ரூ.398.92 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் ஒரு சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 4,967.69 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்குகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் 4.54 கோடி பங்குகளை இதன் தாய் நிறுவனமான எல்.ஐ.சி-க்கு விற்பதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி தற்போது 40.31% பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. இந்தப் பங்கு விற்பனைக்குப் பிறகு ஹவுஸிங் நிறுவனத்தில் எல்.ஐ.சி-யின் பங்கு மூலதனம் 48.49%-ஆக உயரும்.

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (National Thermal Power Corporation)

மின்சார நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு சார்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் சென்ற காலகட்டத்தைவிட 258% உயர்ந்து, ரூ.4,479 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 2.5% குறைந்து, ரூ.26,566 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3.15 டிவிடெண்ட் வழங்குகிறது. இந்த நிறுவனம் சென்ற பிப்ரவரியில் 3 ரூபாய் டிவிடெண்ட் வழங்கியிருந்தது. தற்போதைய டிவிடெண்டையும் சேர்த்து ரூ. 6.15 மொத்த டிவிடெண்ட் வழங்கியுள்ளது. சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.77 என்ற அளவில் இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அசோகா பில்டுகான் (Ashoka Buildcon)

முன்னணி சாலை கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் சென்ற டிசம்பர் காலாண்டைவிட 61% உயர்ந்து, ரூ.142.45 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 60% சதவிகிதம் உயர்ந்து ரூ.1,780.22 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் இ.பி.எஸ் சென்ற காலாண்டைவிட 5.85% உயர்ந்து ரூ.5.07-ஆக உள்ளது.

ஆயில் இந்தியா (Oil India)

பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாய்வு நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு சார்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் சென்ற டிசம்பர் காலாண்டைவிட8% குறைந்து, ரூ.848 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 7% சதவிகிதம் உயர்ந்து ரூ.3,583.72 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1.50 டிவிடெண்ட் வழங்குகிறது. இந்த நிறுவனம் சென்ற பிப்ரவரியில் 3 ரூபாய் டிவிடெண்ட் வழங்கியிருந்தது. தற்போதைய டிவிடெண்டை யும் சேர்த்து ரூ.4.5 மொத்த டிவிடெண்ட் வழங்கியுள்ளது.

நவ பாரத் வென்சர்ஸ் (Nava Bharath Ventures)

ஸ்டீல் தயாரிப்பு, பவர் மற்றும் ஹெல்த்கேர் துறை சார்ந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் சென்ற ஆண்டோடு ஒப்பிட்டால் 14% குறைந்து ரூ.159.42 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 15% சதவிகிதம் குறைந்து, ரூ.688.6 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா 66% உயர்ந்து, ரூ.112.57 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் 15 கோடிக்கும் அதிகமான பங்குளை பை-பேக் முறை மூலம் திரும்பப் பெற்றுள்ளது.

காதிம்ஸ் இந்தியா (Khadims India)

காலணி தயாரிப்பில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.11.52 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் ரூ.19.88 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானம் 70% சதவிகிதம் உயர்ந்து, ரூ.270 கோடியாக உள்ளது. சிறந்த காலாண்டு முடிவுகள் காரணமாகப் பங்கின் விலை காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 12 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தது.

நாட்கோ பார்மா (NATCO Pharma)

முன்னணி பார்மா துறை சார்ந்த நிறுவனம்.இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 43% குறைந்து, ரூ.53 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.360 கோடியாக உள்ளது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism