Published:Updated:

ஃபினோலெக்ஸ், ஓ.என்.ஜி.சி ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

காலாண்டு முடிவுகள்...
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்...

Q 4 R E S U L T S

ஃபினோலெக்ஸ், ஓ.என்.ஜி.சி ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

Q 4 R E S U L T S

Published:Updated:
காலாண்டு முடிவுகள்...
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்...

நிறைவு பெற்ற 2020-21-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள்...

ஓ.என்.ஜி.சி (ONGC)

இயற்கை எரிவாயு உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி அரசு சார்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் லாபம் வருடாந்தர அடிப்படையில் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.6,734 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.3,214 கோடியை இந்த நிறுவனம் இழப்பாகச் சந்தித்து இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படை யில், கடந்த மார்ச் காலாண்டில் 1% குறைந்து, ரூ.21,189 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊரடங்கு கால கட்டத்துக்கு முந்தைய நிலைக்குச் சென்றுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பங்குக்கு ரூ.1.85 டிவிடெண்ட் தொகையாக வழங்குகிறது. இந்தத் தொகையையும் சேர்த்து இந்த வருடத்தில் ரூ.3.6 டிவிடெண்ட் தொகையை நிறுவனம் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட் (Ashok Leyland)

வாகனத் தயாரிப்பு துறையில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ. 241 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.57 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.

நிறுவனத்தின் நிகர வருமானமும் வருடாந்தர அடிப்படை யில் கடந்த மார்ச் காலாண்டில் 82% உயர்ந்து, ரூ.7,000 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா வருடாந்தர அடிப்படையில் 7.6% உயர்ந்து ரூ.4.8 ஆக உள்ளது.

ஃபினோலெக்ஸ், ஓ.என்.ஜி.சி ரிசல்ட் எப்படி? நான்காம் காலாண்டு முடிவுகள்...

நால்கோ (NALCO)

அலுமினியம் உற்பத்தியில் உள்ள அரசு சார்பு முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் மார்ச் காலாண்டில் 840% உயர்ந்து, ரூ.1,299.50 கோடியாக உள்ளது. நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் மார்ச் காலாண்டில் 4% உயர்ந்து, ரூ.8,869.29 கோடியாக உள்ளது.

ஸ்டீல், காப்பர், அலுமினியம் உட்பட அனைத்து உலோகங்களின் விலையும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த சீனா தன் கையிருப்பில் உள்ள உலோகங்களைப் பயன்படுத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதனால் கடந்த ஒரு மாதமாக உலோகத் துறை பங்குகள் விலை குறையத் தொடங்கின.

ஆனால், நால்கோ நிறுவனம் சிறந்த முடிவுகளை வெளியிட்டதால், அந்த பங்கின் விலை முடிவுகள் வெளியிட்ட தினத்தில் 12% வரை உயர்ந்தது.

காட்பிரெய் பிலிப்ஸ் (Godfrey Philips)

சிகரெட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற காலண்டோடு ஒப்பிட்டால், மார்ச் காலாண்டில் 17.88% உயர்ந்து, ரூ.835.83 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் லாபமும் 40% உயர்ந்து, ரூ.146.19 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா இரு மடங்கு உயர்ந்து ரூ.136.5 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 24 ரூபாய் டிவிடெண்ட் வழங்குகிறது.

ஃபினோலெக்ஸ் (Finolex)

வயர்கள், மின் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் ஐந்து மடங்கு உயர்ந்து, ரூ.298.84 கோடி யாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் கடந்த மார்ச் காலாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.1,249 கோடியாக உள்ளது.

ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper)

காப்பர் உற்பத்தியில் உள்ள முன்னணி அரசு சார்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் கடந்த மார்ச் காலாண்டில் 255.65% உயர்ந்து, ரூ.522.24 கோடியாக உள்ளது.

வருடாந்தர அடிப்படையில் சென்ற ஆண்டு ரூ.514 கோடி நிகர இழப்பீடாக இந்த நிறுவனம் சந்தித்திருந்தது. இந்த ஆண்டில் அது கணிசமாகக் குறைந்து, நிகர இழப்பீடு ரூ.36.74 கோடியாக உள்ளது.

அப்போலோ ஹாஸ்பிட்டல் (Apollo Hospitals)

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருத்துவக் குழுமம். இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் சற்றுக் குறைந்து, ரூ.2,867.95 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் குறைந்து, ரூ.136.77 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனம் 24 மணி நேரமும் இயங்கும் ஆன்லைன் கிளினிக் சேவைகள் வழங்குவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஆன்லைன் கிளினிக் மூலம் சென்றடைவதற்கு இந்த நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளில் 5,000 மருந்துக் கடைகள் திறப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திரபிரஸ்தா கேஸ் (Indra Prastha Gas)

எரிவாயு உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 31% உயர்ந்து, ரூ.332 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் வருடாந்தர அடிப்படையில் சற்று உயர்ந்து, ரூ.1,700.52 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3.60 டிவிடெண்ட் தொகை வழங்குகிறது.

அபெக்ஸ் ஃபிரோசன் ஃபுட்ஸ் (Apex Frozen Foods)

இறால் உற்பத்தியில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் லாபம் வருடாந்தர அடிப்படையில் கடந்த மார்ச் காலாண்டில் 8.62% குறைந்து, ரூ.8.37 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் கடந்த மார்ச் காலாண்டில் 181.91% உயர்ந்து, ரூ.29.33 கோடியாக உள்ளது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்