டிவிடெண்ட் யீல்டு

கடந்த இரண்டு வாரங்களாக குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முக்கியமான விஷயங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மேலும் சில முக்கியமான அளவுகோல்கள் குறித்துப் பார்ப்போம்...

டிவிடெண்ட் யீல்ட்: எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கொஞ்சமாவது கேஷ் ஃப்ளோவை கொடுத்து வரவேண்டும். நீங்கள் எக்ஸ்ட்ராவாக ஒரு வீடு வைத்துள்ளீர்கள் - அதிலிருந்து மாதாமாதம் வாடகை வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சந்தோஷம்தானே? அதைப் போலவே பங்கு முதலீட்டிலிருந்து வருவது டிவிடெண்ட் ஆகும். நாம் நீண்ட நாட்களுக்கு ஒரு நிறுவனப் பங்கில் முதலீட்டாளராக இருக்கும்போது, நமக்கு

டிவிடெண்ட் ஒன்றுதான் கேஷ் ஃப்ளோவாகக் கிடைக்கக்கூடியது. டிவிடெண்ட் என்பது நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர் களுக்கு பிரித்துக் கொடுப்பது. இதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாமா?

. ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு என்று ஒன்று இருக்கிறது. நம் நாட்டில் இந்த முகமதிப்பின் அடிப்படையில் டிவிடெண்டை அறிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்தியன் வங்கி, மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் 25% டிவிடெண்ட் ஒருமுறையும், 40% டிவிடெண்ட் மற்றொருமுறையும், ஆக மொத்தம் 65% (.6.50) டிவிடெண்ட் அந்த ஆண்டு கொடுத்தது..
இந்த டிவிடெண்ட் சதவிகிதத்தை முகமதிப்பை அடிப்படையாக வைத்து சொல்கிறார்கள். ஆனால், தற்போதைய விலையின் மீது வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பது அல்லது நீங்கள் வாங்கிய விலையை வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பதுதான் சரியானது. அதைத்தான் டிவிடெண்ட் யீல்ட் என்று கூறுகிறோம். உதாரணமாக, இந்தியன் வங்கியையே எடுத்துக் கொள்வோமே!

இந்த பங்கின் தற்போதைய விலையை வைத்துப் பார்த்தால், இந்தியன் வங்கியின் மார்ச் 2010-ம் ஆண்டின் டிவிடெண்ட் யீல்ட் 2.78% (6.50/234) ஆகும். இந்தியன் வங்கி தனது பங்கை முதன் முதலில் 2007-ம் ஆண்டு மக்களுக்கு விற்றபோது நீங்கள் அப்பங்கை 91 ரூபாயில் வாங்கியிருந்தால், உங்களின் யீல்ட் 7.14% (6.50/91) ஆகும். நீங்கள் பங்குகளை வாங்கப் போகுமுன் பார்க்க வேண்டிய அளவுகோல்களில் டிவிடெண்ட் யீல்ட் ஒரு முக்கியமான அளவுகோல் ஆகும். அது அதிகமாக இருப்பது நல்லது. சில சமயங்களில் பங்கு விலை, நிறுவனத்தில் இருக்கும் பெரிய பிரச்னையால், திடீரென்று சரிந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக தென்படும். ஆகவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தியப் பொருளாதாரமும், நிறுவனங்களும் இன்று வளர்ச்சிப் பாதையில் இருப்பதால், டிவிடெண்ட் யீல்ட் பொதுவாகவே குறைவாக உள்ளது. காரணம், நிறுவனங்கள் தங்களது லாபத்தை தொழில்களிலேயே திருப்பி முதலீடு செய்துவிடுவது தான். நமது நிஃப்டி குறியீட்டின் டிவிடெண்ட் யீல்ட் வெறும் 1.07 சதவிகிதம்தான். வங்கி போன்ற சில துறை சார்ந்த பங்குகளின் டிவிடெண்ட் யீல்ட் சற்று அதிகமாக இருக்கும். பொதுவாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் டிவிடெண்ட் யீல்ட் பெரிய நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புகிறவர்கள் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக உள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். பொதுவாக பழைய பொருளாதார நிறுவனங்களின் (புதிய பொருளாதார நிறுவனங்களைவிட) டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக இருக்கும்.

உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை

பொதுவாக பங்குகளை வாங்க பல அளவுகோல்களை அலசும்போது அப்பங்கின் அதுவரையிலான உச்சபட்ச விலை/குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார அதிகம்/குறைவு போன்றவற்றையும் பாருங்கள். இது பங்கு காளையின் பிடியில் உள்ளதா அல்லது கரடியின் பிடியில் உள்ளதா என்பதைக் காண்பிக்கும். பங்குகள் தங்களது உச்சபட்ச விலையை ஒட்டி வர்த்தகம் ஆகும்போது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் பங்குகள் கரடியின் பிடியில் இருக்கும்போது வாங்குவது நல்லது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு சில ஆண்டுகள் நிகழ்ந்ததைப் போல ஏதேனும் பெரிய பிரச்னைகள் ஒரு நிறுவனத்திற்கு நிகழலாம். அதுபோன்ற சமயங்களில் எச்சரிக்கை தேவை. சந்தை மொத்தமாக அடிபட்டிருக்கும் போது அல்லது சில துறைகள் அடிபட்டிருக்கும்போது பங்குகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோன்ற சமயங்களில் மற்ற அளவுகோல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஷேர்ஹோல்டிங்

நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் பங்குகளை வேறு யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். நன்றாக செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஐ.எஃப்.சி (இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்கள் ஷேர்ஹோல்டராக இருப்பது பாஸிட்டிவ்-ஆன விஷயம். அதை நீங்கள் ஒரு ஃபில்ட்டராக வைத்துக் கொள்ளலாம். ஓரளவு ஆராயாமல் அவர்கள் அந்நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்க மாட்டார்கள். எஃப்.ஐ.ஐ. என்று கூறப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஷேர்ஹோல் டர்களாக இருப்பது ஒரு வகையில் நன்மை - பங்கின் விலை உயரும்; மற்றொரு வகையில் தீமை - வெளிநாடுகளில் அவர்களுக்கு போட்ட பணம் தேவைப்பட்டால் இங்கிருந்து உடன் எடுத்துச் செல்லும்போது, அப்பங்கின் விலை சடாரென்று குறைய வாய்ப்புண்டு. ஆகவே, சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெரிய நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் பிரச்னை இல்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் அவ்வாறு அடிபட்டால் எழுந்து வர நாளாகும்.

மொத்தக் கடன்

பல நிறுவனங்கள் மூலைக்கு தள்ளப்படுவதற்குக் காரணம் சக்திக்கு மீறிய கடன். கடன் என்பது இருதலைக் கொள்ளி போன்றது. சமயம் சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தை அளவிற்கு அதிகமாகத் தூக்கிவிடும். கஷ்டம் என்று வருகையில் அதலபாதாளத் திற்கு தள்ளிவிடும். இதுபோல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. கடனே இல்லாமல் செயல்படும் நிறுவனங் கள் மிக மிகச் சிறந்தவை. சில நேரங்களில் நிறுவனத்துக்கு ஓரளவு கடன் இருந்தால், மேனேஜ்மென்ட் சற்று துரிதமாக வேலை பார்க்கும். மேலும், நிறுவனத்தில் சற்று வேகம் இருக்கும். அதுபோக, பங்கின் மீதான வருமானம் சற்று அதிகமாக இருக்கும். நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும். வங்கிகள் கடன் (டெபாசிட்) வாங்காமல் தொழில் செய்ய முடியாது. அதுபோல் சர்வீஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தேவைப்படாது. நீங்கள் வாங்கப்போகும் பங்கை அத் துறையில் உள்ள சிறந்த நிறுவனப் பங்குடன் ஒப்பிடுங்கள். அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.

(படி ஏறுவோம்)