முதலீடு செய்வதில் ஒவ்வொருத்தருடைய ஸ்டைலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது. சிலர் குறிப்பிட்ட ஒரே ஒரு பங்கை மட்டுமே வாங்கி வருவார்கள். சிலர் செகண்டரி மார்க்கெட்டில் மட்டுமே வாங்குவார்கள், மறந்தும்கூட ஐ.பி.ஓ. பக்கம் ஒதுங்க மாட்டார்கள். இன்னும் சிலரோ வாங்கினால் ஐ.பி.ஓ-வில்தான் வாங்குவேன் என்று சபதம் போட்டுவிட்டு வந்திருப்பார்கள்!

ஐ.பி.ஓ. வரும்போது ஒரு லாட் இரண்டு லாட் என்று முதலீடு செய்வார்கள். பிறகு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றே மொத்த பங்குகளையும் விற்று லாபம் பார்த்து விடுவார்கள். எக்காரணம் கொண்டும் அந்த

முதலீட்டை தொடர மாட்டார்கள். இப்படியான முதலீட்டாளர்களை இப்போது சந்தித்துக் கேட்டால் அவர்கள் ரத்தக் கண்ணீர் விடுவார்கள்! காரணம் சமீபத்தில் வெளிவந்த அத்தனை ஐ.பி.ஓ-களிலும் அவர்கள் முதலீடு செய்திருந்தால் அவர்களின் முதலீடு கிட்டத்தட்ட பாதிக்கு மேல் கரைந்திருக்கும்.

கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட அத்தனை ஐ.பி.ஓ-களையும் எடுத்து ஆராய்ந்தோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த மொத்த ஐ.பி.ஓ-களின் எண்ணிக்கை 81. இதில் 30 பங்குகள்தான் பட்டியலிடப்பட்ட விலையைவிட அதிகமான விலையில் வர்த்தகமாகிறது. மீதமுள்ள 51 பங்குகள் பட்டியலிடப் பட்ட விலையைவிட குறைவாகவே வர்த்தகமாகிறது. இதிலும் 17 பங்குகள் 50 சதவிகிதத்துக்கு கீழே போய்விட்டது.

. இருந்தாலும் நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சந்தை இப்போது ஓரளவு ஸ்திரமாக இருப்பதுதான்..
அதேபோல் சிறு முதலீட்டாளர் களும் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் ஏதாவது ஒரு ஐ.பி.ஓ.-விலாவது பணத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்பதுதான்!

லேட்டஸ்ட் வரவு ஃபியூச்சர் வென்ச்சர்ஸ் ஐ.பி.ஓ. சமீபகால மாகவே ஐ.பி.ஓ. வரும் அனைத்து நிறுவனங்களுமே முகமதிப்புக்கு மேலாக அதிக பிரீமியம் வைத்தே வெளியிடுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முகமதிப்பிலேயே ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ. வருகிறது என்றால் அது வித்தியாசமான ஒன்றுதானே!

பத்து ரூபாய் பங்கு பத்து ரூபாய்க்கே கிடைக்கலாம் என்பது பாராட்டத்தகுந்த விஷயம்தான் என்றாலும், இந்தப் பங்கினை வாங்குவது லாபகரமாக இருக்குமா என்பது அதைவிட முக்கியமானதல்லவா? இதுகுறித்து பேட்டர்சன் நிறுவனத்தின் துணைத் தலைவர் சத்யநாராயணனிடம் கேட்டோம். இந்த ஐ.பி.ஓ.-வை பற்றி பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துச் சொன்னார்.

''ரீடெய்ல் துறையின் முன்னோடி நிறுவனமான இதன் முக்கிய பிஸினஸ் உணவு மற்றும் ஆடைகள்(ஃபேஷன்)தான். இந்த இரண்டுக்கும் எப்போதுமே டிமாண்ட் இருக்கத்தான் செய்யும். இது சாதகமான விஷயம். இனி பாதகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த நிறுவனம் இப்போது 750 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டப்போகிறது. இதில் 150 கோடி ரூபாயை விரிவாக்கப் பணிகளுக்காகவும், மீதமுள்ள பணத்தை நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளது. அதாவது, மீதமிருக்கும் 600 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார்கள், எதில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்ற முழுமையானத் திட்டம் இவர் களிடத்தில் இல்லை.

ரீடெய்ல் துறை எப்போதுமே டிமாண்ட் உள்ள துறையாக இருந்தாலும், தற்போதைய பொருளாதாரம் மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும் போது, மக்கள் முதலில் குறைக்கும் செலவு ரீடெய்லுக்கான செலவாகத் தான் இருக்கும்.

இவை எல்லாவற்றையும்விட 2008-ம் ஆண்டு ஃபியூச்சர் கேப்பிட்டல் நிறுவனத்துக்காக 490 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டினார்கள். பட்டியலிடப் பட்ட சமயத்தில் ஒரு பங்கின் விலை 765 ரூபாய். தற்போது 164.45 ரூபாயில் வர்த்தகமாகிறது. கிட்டத் தட்ட 4.5 மடங்குக்கு மேல் குறைவு.

'ஏற்கெனவே நஷ்டமடைந்தது போல் இனிமேலும் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகத்தான் பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கினை பத்து ரூபாய்க்கே தருகிறோம்’ என்று இந்நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி சொல்லி இருக்கிறார். ஆனால், அதையும் முழுமையாக ஏற்க முடியவில்லை. இந்த பங்கினையும் பிரீமியம் விலையில் கொண்டுவந்திருந்தால் முதலீடு செய்ய யாரும் வரமாட்டார்கள். அதனால்தான் முகமதிப்பிலேயே கொண்டு வந்திருக்கிறார். மேலும் இந்த குரூப் நிறுவனங்களில் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனால் மற்ற நிறுவனங்களில் இருக்கும் நிதித்தட்டுப்பாட்டைச் சமாளிப் பதற்காக இந்த ஐ.பி.ஓ. கொண்டு வரப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்ய வேண்டாம்.

பட்டியலிடும் அன்றைக்கே விற்றுவிட்டு லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவர்களுடைய ரிஸ்க். சந்தையின் இறக்கத்தில் பெரிய பெரிய நிறுவனங்களின் பங்குகளே சரிவைச் சந்திக்கும்போது, இந்த நிறுவன பங்கும் விலை குறையவே வாய்ப்பிருக்கிறது. அதனால் பட்டியலிடப்பட்ட பின்பு மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து வாங்குவதே சரியாக இருக்கும்'' என்றார்.

-வா.கார்த்திகேயன்.