''எங்களுடைய கஸ்டமர்கள் பிரியமுடன் பார்ட்னராக சேர்த்துக்கொள்ள தகுதியான கம்பெனியாகவும், உலக அரங்கில் நாங்கள் செய்யும் தொழிலில் உலகளாவிய அளவில் அத்தாரிட்டியாகவும் இருக்க விரும்புகிறோம்!''

இப்படி தங்களைப்பற்றி தாங்களே பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி இந்தியாவிலேயே மிகப்பெரிய வெல்டிங் மற்றும் கட்டிங்கிற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ள ஈசாப் நிறுவனத்தைப் பற்றித்தான் இந்த வாரம் அலசப்போகிறோம்.

வரலாறு:

. 1904-ம் வருடம் கப்பல் மற்றும் பாய்லர்களை சரிசெய்யும் வேலை பார்த்துக்கொண்டிருந்த என்ஜினீயர் ஒருவருக்கு தன்னிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு வேலையை நேர்த்தி யாகவும் திருப்தியாகவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்துகொண்டே இருந்தது. வேலையை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான புதிய தொழில்நுட்பத்தை அவரே கண்டுபிடித்தார். அதற்காக ஸ்வீடனில் அவர் நிறுவிய கம்பெனியின் இந்திய செயல்பாட்டுக்கான கம்பெனிதான் இந்த 'ஈசாப் இந்தியா லிமிடெட்’..
1987-ம் ஆண்டு 'பிலிப்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் எலெக்ட்ரோடு பிஸினஸை மட்டும் பிலிப்ஸிடமிருந்து பிரித்து வாங்கி தொடங்கப்பட்டது. பின்னர் 1991-ல் 'இந்தியன் ஆக்ஸிஜன் லிமிடெட்’டின் வெல்டிங் எலெக்ட்ரோட் பிஸினஸையும், 1992-ல் 'ப்ளோடெக் வெல்டிங் அண்ட் கட்டிங் லிமிடெட்’, 1994-ல் 'மாகாராஷ்ட்டிரா வெல்ட் எய்ட்ஸ் லிமிடெட்’ என அடுத்தடுத்து வாங்கியதன் மூலம் கிடுகிடுவென வளர்ந்துவிட்டது இந்த நிறுவனம்.

என்ன பொருட்களை செய்கிறார்கள்?

வெல்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் ரெக்ளமேஷன் கன்ஸ்யூமபிள்ஸ், வெல்டிங் ட்ரான்ஸ்பார்மர், வெல்டிங் ரெக்டிஃபையர், இன்வெர்டர்ஸ், ஹைடெக் மற்றும் விமானத்தில் உபயோகிக்கப்படும் டிஐஜி வெல்டிங்கிற்கான பொருட்கள், இண்டஸ்ட்ரியல் கட்டிங் எக்யூப் மென்ட்களாகிய ஃப்ளோ பைப்புகள், ரெகுலேட்டர்கள், சிறிய கட்டிங் மெஷின்கள், நாசில்கள், டியூப்புகள், சுற்றுப்புற சூழ்நிலைக்குத் தேவையான உபகரணங்கள், கட்டிங்கிற்குத் தேவையான உபகரணங்கள் - மேக்னடிக், ஆப்டிக்கல் மற்றும் சிஎன்சி ப்ரொபைல் கட்டிங் மிஷின்கள் என ஸ்டீலை உபயோகிக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் உதவும் வகையில் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

இவற்றில் எந்தப் பொருளுமே நமக்குத் தெரிந்ததாக இல்லையே என்கிறீர்களா? உண்மைதான்! ஆனால் இந்தப் பொருட்களை உபயோகிக்கும் இண்டஸ்ட்ரி கஸ்டமர்களிடம் கேட்டுப்பாருங்கள். ஈசாப் பொருட்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வேறு மாதிரி இருக்கும்! எனவே, ஈசாப் அதன் தொழிலில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

யார் யார் இதன் கஸ்டமர்கள்?

கன்ஸ்ட்ரக்ஷன், ஷிப் பில்டிங், டிரான்ஸ்போர்ட், எனர்ஜி, பெட்ரோகெமிக்கல், ரிப்பேர் மற்றும் மெயின்டெனென்ஸ் என அத்தனை துறைகளிலும் ஈசாப்பின் தயாரிப்புகள் உபயோகிக்கப்படுகிறது.

உபயோகிக்கும் இண்டஸ்ட்ரிகள் எப்படி?

இந்தியாவில் வெல்டிங் இண்டஸ்ட்ரி இன்றுவரை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரை

மனிதனின் கைகளால் செய்யப் படுகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஏனென்றால், நிறைய தொழில்களுக்கு தேவையான பொருட்கள் ஒரு ஸ்டாண்டர் டைஸ்ட் ஸ்பெசிபிகேஷனுடன் இல்லாததால், ஒவ்வொன்றும் தனித்தனியாக வடிவமைக்கப்பட வேண்டியுள்ளது. எனவே,

மேனுவலாகவே அத்தனை பொருட்களும் வடிவமைக்கப்பட்டு கட்டிங் மற்றும் வெல்டிங் செய்யப் படுகின்றது. ஆர்கனைஸ்ட் செக்டாரில் மட்டுமே ஆட்டோமேட்டிக் வெல்டிங் என்பது நடைபெறுகிறது.

ஸ்டீல் விலையில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பெரிய அளவில் பாதிப்படைகிற துறை இது. இதுபோன்ற இடையூறுகளை எல்லாம் தாண்டி வெல்டிங் இண்டஸ்ட்ரி ஸ்டெடியாக வளர்ந்துகொண்டே வருகிறது என்பதுதான் ஈசாப்பிற்கு மிகவும் சாதகமான விஷயம். ஆயில், கேஸ், ஆஃப் ஷோர் ட்ரில்லிங், சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கட்டுமானத் துறையின் வளர்ச்சி மீது அரசாங்கம் காண்பிக்கும் கரிசனமும் ஈசாப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.

ஏன் இதில் முதலீடு செய்ய வேண்டும்?

கடந்த ஆறு வருடங்களில் நிகர விற்பனையில் 18 சதவிகிதமும் (சிஏஜிஆர்), லாபத்தில் 19 சதவிகிதமும் (சிஏஜிஆர்) வளர்ச்சியைக் கண்டுள்ளது ஈசாப் இந்தியா. கடைசி வருடத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்வையும், புதிய பல பெரிய கம்பெனிகள் போட்டியாளர் களாக வந்ததன் மூலமும் சோதனைகள் பலவற்றைச் சந்தித்தாலும் சீரானதொரு வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஈசாப்பின் தயாரிப்புகள்தான் அதன் போட்டியாளர்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இன்னோவேஷன் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வெல்டிங் புராடெக்ட்கள் தயாரிப்பதில் நிறைய சிறிய சிறிய நிறுவனங்கள் இருப்பதால் விலை ரீதியான போட்டிகள் மிக அதிகமாக நிலவுகின்ற சூழ்நிலை யிலும் நல்ல வளர்ச்சியை காண்பிக்கின்ற கம்பெனி என்பதால் முதலீடு செய்வது சரியானதாக இருக்கும். மேலும் இந்த கம்பெனிக்கு கடன் என்பது அறவே கிடையாது. அது சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை ரீ-இன்வெஸ்ட் செய்வதன் மூலமே தன் வளர்ச்சிக்குத் தேவையான கெப்பாசிட்டி எக்ஸ்பான்ஷனை சுலபமாகச் செய்துகொள்கிறது. முதலீட்டாளர்களுக்கு கணிசமான ரிட்டர்னை தருவதிலும் முன்னணி வகிக்கிறது.

கடந்த ஆறு வருடத்தில் ஆவரேஜாக கிட்டத்தட்ட 45 சதவிகிதம்வரை டிவிடெண்ட் கொடுத்துள்ளது. இதையெல்லாம் தாண்டி அதன் முதன்மை நிறுவனத்திடமிருந்து கிடைத்துவரும் டெக்னிக்கல் சப்போர்ட் ஈசாப் இந்தியாவை எப்போதுமே மிக நன்றாக வைத்திருக்கும் என்று நம்பலாம். புரமோட்டர்கள் 55 சதவிகிதத்திற்கும் மேலான பங்குகளை கைவசம் வைத்திருப்பது இதன் தனிச்சிறப்பு. எப்.ஐ.ஐ.-கள் கிட்டத்தட்ட 11 சதவிகிதம் வரை ஈசாப்பில் முதலீடு செய்துள்ளது.

எதற்கு பயப்பட வேண்டும்?

ஏற்கெனவே சொன்னபடி விலை ரீதியான போட்டிகள் நிறைந்த இண்டஸ்ட்ரி. ஈசாப்பின் தயாரிப்புகளை உபயோகிக்கும் இண்டஸ்ட்ரிகளின் வளர்ச்சிதான் ஈசாப்பின் வளர்ச்சியை நிர்ணயம் செய்யும். பொருளாதாரச் சூழ்நிலை சிறிது மந்தமாக ஆனாலும் கூட லாபம் குறைய வாய்ப்புள்ளது. பொருளாதார ஏற்ற இறக்கங்களால் அதிகம் பாதிப்படையக்கூடிய தொழில்களுக்குத்தான் ஈசாப்பின் பொருட்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும், இரும்பு மற்றும் மற்ற மெட்டல்களின் விலை ஏறினாலும் மந்த நிலைக்கு வந்துவிட வாய்ப்பு அதிகம். இதையெல்லாம் தாண்டி இது சிறிய கேப்பிட்டலைக்கொண்ட (ஸ்மால் கேப்) கம்பெனி இது என்பதையும் கவனிக்க வேண்டும். பொருளாதார சூழ்நிலை நெகட்டிவாக மாறும்போது ஸ்மால் கேப் கம்பெனிகள் சற்று அதிகமாகவே பாதிப்படையும் என்பதையும் மனதில் கொள்ளவும். இந்த கம்பெனியின் ஷேர்கள் பெரும்பாலும் குறைந்த அளவிலேயே சந்தையில் வியாபாரம் ஆகிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது வாசகர்கள் ஈசாப் இந்தியாவின் ஷேர்களை 500 ரூபாய் லெவலில் மூன்று முதல் ஐந்தாண்டு காலத்தில் 80 முதல் 100 சதவிகிதம் வரை விலை ஏறும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்.

ஸ்மால் கேப் ஷேர்களின் ரிஸ்க்கை மனதில் கொள்ளும்போது உங்களுடைய மொத்த முதலீட்டில் குறைந்த அளவே இருக்க வேண்டும். எனவே வாசகர்கள் குறைந்த அளவில் ஈசாபின் ஷேர்களை வாங்கிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-நாணயம் டீம்