Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

Published:Updated:
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!


சமீபகாலமாக நான் பார்க்கிறேன்... 'டெக்னிக்கல் அனாலிசிஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்கிறது. அவ்வளவு ஆர்வம் அதுகுறித்து தெரிந்து கொள்வதற்கு! யாரோ ஒரு அனலிஸ்ட் சொல்லிக் கேட்பதைவிட, நாமே டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி அறிந்துகொண்டுவிட்டால், முடிவெடுக்க வசதியாக இருக்குமே என்று நினைப்பதுதான் அதற்கு காரணம். அப்படி இருக்கும்பட்சத்தில் அது மிகச் சரியான முடிவு என்றுதான் நான் சொல்வேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

அப்படி டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இத் தொடரை மிகக் கவனமாகப் படியுங்கள். உதாரணங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் சார்ட்டுகளை நன்றாக ஊன்றிக் கவனியுங்கள். உங்கள் மனதில் நன்றாகப் பதிவதற்கு வசதியாக உங்களுக்கு மிகவும் பரிட்சயமான இந்திய பங்குகளை வைத்தே தரப்படுவதால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்... ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிப்பதற்கு முன்பாக பழைய அத்தியாயங்களை ஒரு புரட்டு புரட்டிவிட்டு அதன்பிறகு படியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு நிறைய கேள்விகள் எழும். வந்திருக்கும் அத்தியாயங்களில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை எழுதி அனுப்புங்கள். அதற்கான விளக்கங்களை அளிக்கிறேன்.

சரி, கடந்த இதழில் ஒவ்வொரு நாளும் ஓப்பன், ஹை, லோ, குளோஸை வைத்து பார் சார்ட் போட்டால் என்ன பிரயோஜனம் என்று கேட்டிருந்தோம். ஒவ்வொன்றாகப் பார்ப்பதைவிட சற்று ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் என்ன தெரிகிறது என்று பார்ப்போம்.

##~##
01-04-11 முதல் 15-04-11 வரை நடந்த டிரேடிங்கில் நிஃப்டியின் தினசரி வேல்யூக்கள் அடங்கிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையை வைத்துக்கொண்டு சந்தையின் நிலைமையை ஆராய நீண்ட நேரமாகுமல்லவா?

இந்த அட்டவணையில் உள்ள நிஃப்டியின் வேல்யூக்கள் பார் சார்ட்டின் மூலமாக  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இப்படி 15 நாட்களுக்குண்டான நிஃப்டியின் மூவ்களை சார்ட்டில் போட்டு பார்த்தால் 01-04-11க்கும் 15-04-11க்கும் இடைப்பட்ட ஒன்பது டிரேடிங் நாட்களில் இரண்டு நாட்களில் சந்தை ஓப்பனிங்கைவிட குளோஸிங் அதிகமாகவும், ஏழு நாட்களில் சந்தை குளோஸிங் ஓப்பனிங்கை விட குறைவாகவும் நடந்து முடிந்திருக்கிறது என்பது வெறும் கண்களுக்கே தெரிகின்றதல்லவா!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இதுபோல வேறு என்னென்ன விஷயங்களை பார் சார்ட்டுகள் சுலபமாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது என்று பார்ப்போம்...

ஓப்பனிங் விலை என்பது பெரும்பாலும் பலதரப்பட்ட முதலீட்டாளர்கள் சேர்ந்து முடிவு செய்வது. இந்திய சந்தைகளில் 'ஃப்ரீ ஓப்பனிங் செஷன்’  இருப்பதால் அனைத்துவிதமான முதலீட்டாளர்களும் டிரேடர்களும் சேர்ந்து போடும் ஆர்டர்களின் கலவைதான் ஓப்பனிங் விலையாக அமைகிறது. பெரும்பாலானோர் பேப்பர் படித்து, நேற்று என்னென்ன விஷயங்கள் நடந்ததென்று ஆராய்ந்து போடும் ஆர்டர்களைக் கொண்டதுதான் ஓப்பனிங் விலையை நிர்ணயிக்கிறது. 'ஃப்ரீ ஓப்பனிங்’ இல்லாவிட்டால் ஓப்பனிங் என்பது அமெச்சூர் டிரேடர்கள் நிர்ணயம் செய்யும் விலையாகிவிடும். புரொஃபஷனல் டிரேடர்களோ அல்லது முதலீட்டா ளர்களோ இதில் பெரும்பாலும் கலந்துகொள்வதைத் தவிர்க்கவே செய்வார்கள்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஓப்பனிங் மற்றும் குளோஸிங் விலைகளை வைத்து ஆராய்ந்தால் வரும் முடிவுதான் என்ன? குளோஸிங் விலை ஓப்பனிங் விலையைவிட அதிகமாக இருந்தால் புரொஃபஷனல் முத லீட்டாளர்கள் அமெச்சூர்களை விட அதிகமாக புல்லிஷ்ஷாக (காளை) இருக்கிறார்கள் என்றும், மாறாக குளோஸிங் விலை ஓப்பனிங்கைவிட குறைவாக இருந்தால் புரொஃபஷனல்கள் அமெச்சூர்களை விட பியரிஷாக (கரடி) இருக்கின்றார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?

நல்ல லாபம் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அமெச்சூர்களுடன் சேர்ந்து போவீர்களா? புரொஃபஷனல்களுடன் சேர்ந்து போவீர்களா? நிச்சயமாக புரொஃபஷனல்களுடன் சேர்ந்து தானே போக விரும்புவீர்கள்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஹை பாயின்ட் (அதிகவிலை) மற்றும் லோ பாயின்ட் (குறைந்த விலை) அன்றைய தினத்தின் டிரேடிங்கின்போது புல் மற்றும் பியர்களின் பவரை காண்பிப்பதாகவே பார் சார்ட்டில் அமைகிறது.

குளோஸிங் என்பது காளை  மற்றும் கரடிகளின் போரில் அன்றைய தேதியில் இறுதி வெற்றி யாருக்கு (எந்த லெவலில்) என்பதைக் காண்பிப் பதாக அமைகிறது. அன்றைய தினத்தின் ஹை (அதிக) விலைக்குருகே குளோஸிங் அமைந்தால் காளைகள் அன்றைய தினத்தில் வெற்றி (பலம் பெற்று) பெற்றதாகவும், அன்றைய தினத்தின் லோ (குறைந்த) விலைக்கு அருகே அமைந்தால் கரடிகள் அன்றைய தினத்தில் வெற்றி (பலம் பெற்று) பெற்றதாகவும் கொள்ளலாம்.

பார் சார்ட்டில் பாரின் உயர அளவை வைத்து சில முக்கியமான விஷயங்களை முடிவு செய்யலாம். ஹைக்கும் லோவுக்கும் இடையே உள்ள தூரம்தான் பாரின் உயரம். பாரின் உயரம் காளை, கரடிகளின் பலத்தை யும் சண்டையின் தீவிரத்தையும் காண்பிப்பதாகும். பாரின் உயரம் அதிகமாக அதிகமாக, அன்றைய தினம் காளை, கரடிகளின் சண்டையின் தீவிரம் அதிகமாக இருந்தது என்று கொள்ளலாம். பாரின் உயரம் ஆவரேஜாக இருந்தால் மார்க்கெட் கூலாக இருந்தது என்று அர்த்தமாகும். ஒரு நாளுடைய பார் ஆவரேஜ், பாரின் உயரத்தில் பாதியாக இருந்தால்  சந்தை அன்று தூங்கி வழிந்தது (சைட்வேய்ஸில் போனது) என்று அர்த்தமாகும். ஒரு நாளின் பாரின் உயரம், ஆவரேஜ் பாரின் உயரத்தை விட இரண்டு மடங்கு உயரம் அதிகமாக இருந்தால் அன்று சந்தையில் அனல் பறந்தது என்று அர்த்தமாகும். டிஸ்கஸ் செய்வதற்கு வசதிக்காக நாம் நாள் என்று குறிப்பிடுகின்றோம். ஏற்கெனவே சொல்லியிருந்தபடி

1 நிமிடம், 5 நிமிடம், 10 நிமிடம், 15, 30, 45 மற்றும் 60நிமிடம் என கால அளவு ஒவ்வொன்றிற்கும் ஓப்பன், ஹை, லோ, குளோஸிங் விலைகளை வைத்து பார்களைப் போட்டுப் பார்க்கலாம். இருப்பினும் அனைத்து சார்ட்டுகளுக்கும் பொதுவான அர்த்தம் மேலே சொன்னதுதான்.

மேலே குறிப்பிட்டுள்ள ஐடியாக்களை நீங்கள் 01-04-11 முதல் 15-04-11 வரை நடந்த நிஃப்டியின் பார் சார்ட்டில் அப்ளை செய்து பாருங்கள். உங்களுக்கு மிகச் சுலபமாக பார் சார்ட்டின் மகத்துவம் புரிந்துவிடும்.

'கரெக்ட் சார். இதை வைத்துக்

கொண்டு எதிர்காலத்தை எப்படி கணிப்பது’ என்கிறீர்களா? மேலே குறிப்பிட்டுள்ளவை சந்தை குறித்து ஒரு விரைவான கண்ணோட்டத் தினை ஏற்படுத்திக்கொள்ள உதவும். எதிர்காலத்தை கணிப்பதற்கான விஷயங்களைப் பார்ப்பதற்கு முன் மேலும் சில விஷயங் களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவை என்னவென்று,

அடுத்த வாரம் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism