Published:Updated:

கம்பெனி அலசல்

கம்பெனி அலசல்

கம்பெனி அலசல்

கம்பெனி அலசல்

Published:Updated:
கம்பெனி அலசல்


அனைவரையும் சுறுசுறுப்பாக்க உதவும் ஒரு பொருளை 1869-ம் வருடத்திலிருந்தே தயாரிக்கும் கம்பெனியைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம். அப்படி என்ன சுறுசுறுப்பான பொருள் என்கிறீர்களா? நாம் அடிக்கடி குடிக்கும் டீயை தயாரிக்கும் கம்பெனிதான். கிட்டத்தட்ட 38,000 ஹெக்டேர் தேயிலைத் தோட்டத்தை 47 எஸ்டேட்களாக தன்வசம் வைத்திருக்கிறது இந்த கம்பெனி.

ந்திய டீ தயாரிப்பில் சுமார் எட்டு சதவிகிதத்தையும் உலக தயாரிப்பில் சுமார் இரண்டு சதவிகிதத்தையும் இந்த கம்பெனி உற்பத்தி செய்கிறது. வியட்நாம், உகாண்டா, ருவாண்டா என பல நாடுகளிலும் டீ தோட்டங்களை வாங்கிப் போட்டிருக்கிற கம்பெனி இது. மெக்லியோட்-ரஸ்ஸல் (இந்தியா) லிட் எனும் கம்பெனிதான் இவ்வளவு பெருமைகளுக்கு உரியதாக திகழ்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இண்டஸ்ட்ரி எப்படி?

##~##
உலகளாவிய அளவில் சீனா, இந்தியா, கென்யா மற்றும் இலங்கை என்ற நான்கு நாடுகள்தான் பெரிய அளவில் தேயிலையை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் சீனா கிரீன் டீ-யையும், கென்யா மற்றும் இந்தியா சிடிசி டீ-யையும், இலங்கை ஆர்த்தடாக்ஸ் வெரைட்டி டீ-யையும் உற்பத்தி செய்கின்றன. இந்தியா பெரும்பான்மையாக சிடிசி டீ-யையும், கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் வரை ஆர்த்தடாக்ஸ் டீ-யையும் உற்பத்தி செய்கிறது. டீ உற்பத்தி செய்யும் நாடுகள் எல்லாம் அதன் உற்பத்தியில் 55 முதல் 60 சதவிகிதம் வரை சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு மீதியைத்தான் ஏற்றுமதி செய்கின்றன.

டீ உற்பத்தியில் கென்யாதான் இந்தியாவிற்கு முக்கிய போட்டியாளராகும். 2010-ல் சூப்பராக உற்பத்தி செய்த கென்யா, 2011-ல் மோசமான வானிலை காரணமாக உற்பத்தி குறைந்து பாதிப்பை அடையலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த துறையில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தேயிலையின் விலை ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுவதால் சிறிதளவு டிமாண்ட் அதிகமானாலும் சப்ளை குறைந்தாலும் விலை வேகமான ஏற்றத்தை அடைந்து உற்பத்தியாளர்களுக்கு லாபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கம்பெனி அலசல்

கம்பெனி எப்படி?

• மெக்லியோட்-ரஸ்ஸல்  தரத்தில் சிறந்த தேயிலையை உற்பத்தி செய்து விற்பதால், ஒவ்வொரு வருடமும் தேயிலை துறையின் ஆவரேஜ் விலையைவிட அதிகமாக, அதாவது கிட்டத்தட்ட கிலோவுக்கு 30 முதல் 45 ரூபாய் வரை அதிகமான விலையில் விற்பனை செய்து, விற்பனை விலையில் சாதனை படைத்து வருகிறது. கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தியாவின் தேயிலை உற்பத்தி பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. ஆனாலும், டிமாண்ட் கடந்த 10 வருடங்களாக 2.5 சதவிகித அளவில் (சிஏஜிஆர்) வளர்ந்துகொண்டே வருகிறது.  மேலும் இந்திய தேயிலைத் தோட்டங்கள் பலவற்றில் ஆவரேஜ் தேயிலை உற்பத்தியின் அளவு குறைந்துகொண்டே வருகிறது.

பல தேயிலைத் தோட்டங்களில் உள்ள தேயிலைச் செடிகள் மிகவும் பழைமையானவையாகி விட்டதும் ஒரு காரணம். இந்திய அரசின் பதினோறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த கம்பெனியின் தோட்டங்களில் 6,000 ஏக்கர்வரை பழைய செடிகளை அகற்றிவிட்டு புதிய தேயிலைச் செடியை மறுபயிர் செய்ய திட்டமிட்டபோதும் 4,000 ஏக்கர் தோட்டம் மட்டுமே புதிதாக மறுபயிர் செய்யப்பட்டுள்ளது. தேயிலைச் செடி வளர்ந்து  நல்ல பயன் தர ஐந்தாண்டு காலம் ஆகலாம். எனவே இந்த மறுபயிரால் லாபத்தில் வரப்போகும் மாறுதல்கள் எல்லாம் மொத்தமாக 2011-ல் ஆரம்பித்து 2014-15க்கு மேல்தான் முழுவதுமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் 2006-ல் ஆரம்பித்து வில்லியம்ஸன் டீ அஸாம், டூம்டூமா டீ, மோரன் டீ, வியட்நாமிலிருக்கும்  பூ பென் டீ கம்பெனி, லண்டனில் இருக்கும் ரெவென்சோரி டீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் என பல தேயிலை உற்பத்தி செய்யும் கம்பெனிகளை வாங்கி தன்னுடைய பொசிஷனை வலுவானதாக செய்து கொண்டே வந்தது மெக்லியோட் ரஸ்ஸல். 2011-லிருந்துதான் இந்த கன்சாலிடேஷன் முயற்சிகள் பலனளிக்கப்போகிறது என்கிறார்கள் டீ இண்டஸ்ட்ரி வல்லுநர்கள். இப்படி தேயிலை உற்பத்தியில் ஒரு மெகா நிறுவனமாக வளர்ந்து இருக்கும் மெக்லியோட் ரஸ்ஸல் 90,000 பேருக்கு வேலையளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

கம்பெனி அலசல்

ஏற்றுமதி வியாபாரம் உண்டா?

• மெக்லியோட் ரஸ்ஸலின் ஏற்றுமதி வியாபாரம் 2005 முதல் 2010-ம் வருடம் வரை 26 சதவிகித அளவில் (சிஏஜிஆர்) வளர்ந்து வந்துள்ளது. 2010-ம் வருடம் 28.8 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஜெர்மனி, அயர்லாந்து, யு.கே. மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

போட்டி எப்படி?

• மெக்லியோட் ரஸ்ஸலுக்கு போட்டியாளர்கள் குட்ரிக் குரூப், ஜெயஸ்ரீ டீ, வாரென் டீ போன்ற கம்பெனிகளாகும். குட்ரிக் குரூப் மற்றும் ஜெயஸ்ரீ டீயை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கும், வாரென் டீயை விட கிட்டத்தட்ட ஐந்தரை மடங்கும் விற்பனை அளவில் பெரியது மெக்லியோட் ரஸ்ஸல்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

• தேயிலை உற்பத்திக்கு வானிலை சீராக இருப்பது மிகவும் அவசியம். வானிலை வேகமாக மாறினாலோ, எக்குத்தப்பாகப் போனாலோ உற்பத்தி பாதிப்பு மிகவும் அதிகமாகி, லாபம் நன்றாகவே குறைய வாய்ப்பிருக்கிறது.  தொழிலாளர்கள் நிறைந்த ஒரு இண்டஸ்ட்ரி என்பதால் ஏறிவரும் விலைவாசிக்கேற்ப கூலியை அதிகரித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுவும் லாபக் குறைவுக்கு வழிவகுக்கும். ஏற்றுமதி வெகுவாக இருப்பதால் அந்நியச் செலாவணியின் மதிப்பு மாறுதலும் லாபத்தைப் பாதிக்கும். இதெல்லாம் ஒருபுறமிருக்க, டீ இண்டஸ்ட்ரியே ஒரு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்க கால சுழற்சியிலேயே (எகனாமிக் சைக்கிள்) போய்க்கொண்டிருக்கும். அதையும் பார்த்தே டீ கம்பெனிகளில் முதலீடு செய்யவேண்டும்.

கம்பெனி அலசல்

நீங்கள் என்ன செய்யலாம்?

• உலகளவில் டீ-யின் ஏல விலையை ஆராய்ந்தால் ஆவரேஜாக அதிகமான விலையை நோக்கியே ஏலங்கள் போய்க் கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஏதாவதொரு காரணத்தால் சிறியதொரு சப்ளை இடைஞ்சல் வந்தால்கூட விலைகள் எகிறிவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மெக்லியோட் ரஸ்ஸலுக்கு லாபம் அதிகரிக்க நல்ல வாய்ப்புள்ளது. இந்திய டீ உற்பத்தியில் 8 சதவிகிதத்தை தன்வசம் வைத்திருக்கும் மெக்லியோட் ரஸ்ஸல் அதுபோன்ற சூழ்நிலையில் நிறையவே லாபம் பார்க்க வாய்ப்புள்ளது. மேலும் தேயிலைத் தொழில் லாங் டேர்ம் பார்வையில் இப்போதிலிருந்து சற்றே ஏறுமுக டிரெண்டை சந்திக்க வாய்ப்பிருப்பதைப்போல் தோன்று கின்றது. 52 வார அதிகத்துக்கு அருகே (27-04-11 அன்றைய விலை: ரூபாய் 276.75) வியாபாரமாகும் இந்த கம்பெனியை  இந்த விலையில் வாங்காமல் சந்தை ஏதாவதொரு காரணத்தால் இறங்கி மெக்லியோட் ரஸ்ஸல் ஷேரின் விலை 250-255 ரூபாய் அளவில் வரும்போது மூன்று வருட ஹோல்டிங் பீரியட் அடிப்படையில் முதலீடு செய்யலாம் என்பதே எங்களுடைய டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism