Published:Updated:

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கவர் ஸ்டோரி

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கவர் ஸ்டோரி

Published:Updated:
தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இன்றைக்கு மிகவும் பாப்புலரான விஷயமாகி விட்டது. ஆனாலும், எந்த ஃபண்ட் நிறுவனத்தை தேர்வு செய்வது? ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனமும் பல நூறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்துகிறது. இதில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது போன்ற குழப்பங்கள் இன்னும்கூட பலருக்கு இருக்கவே செய்கிறது.

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்தப் பிரச்னைக்கு இரண்டு தீர்வுகள் தான் இருக்க முடியும். ஒன்று, நேராக ஒரு முதலீட்டு ஆலோசகரிடம் சென்று அவர் சொல்வதைக் கேட்பது,  அல்லது நீங்களே முடிவெடுப்பது. முதலீட்டு ஆலோசகர் தேவையில்லை, எனக்குத் தேவையான ஃபண்டை நானே தேர்வு செய்து கொள்ள முடியும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த கட்டுரை.

முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான ஃபண்டை தாங்களாகவே தேர்வு செய்து கொள்ள முடியுமா? முடியும் எனில் என்ன செய்ய வேண்டும் என்று 'ஃபண்ட்ஸ் இந்தியா.காம்’ (fundsindia.com) இணைய தளத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம். பெரிய அளவில் யாருடைய உதவியும் இல்லாமல் தங்களுக்குத் தேவையான ஃபண்டை தாங்களே தேர்வு செய்து கொள்வது எப்படி? அதற்கு எந்தெந்த அளவுகோல்களை அடிப்படையாக வைத்துத் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாகவே எடுத்துச் சொன்னார் அவர்.

''மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை பிரதானமாக இருப்பது இரண்டு திட்டங்கள் தான். பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் தான். முதலில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களை எப்படித் தேர்வு செய்வது என்று பார்ப்போம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்!

தரக்குறியீட்டை பாருங்க!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ரேட்டிங் செய்வதற்கென்றே பல நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 'வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் தரக்குறியீடு’ சந்தையின் முக்கிய பிரமுகர்களால் ஏற்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் கொடுத்துள்ள அதிகபட்ச தரக்குறியீடு இருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளை முதலில் வரிசைப்படுத்துங்கள். valueresearchonline.com என்னும் வெப்சைட்டுக்குள் நுழைந்து பார்த்தாலே போதும், ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும் என்ன தரக்குறியீடு கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

வருமானத்தை கவனியுங்க!

##~##
அதிக தரக்குறியீடு பெற்ற திட்டங்களை மட்டும் முதலில் தனியாக எடுத்துக் கொண்டு, அவற்றின் மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு வருமானங்களைப் பார்க்கவும். பொதுவாக அதிக தரக்குறியீடு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக வருமானம் கொடுப்பவையாகவே இருக்கும். சில சமயங்களில்  ஒரே தரக்குறியீடு உள்ள ஃபண்டுகளும் அவற்றின் வருமானமும் சமஅளவில் இருக்கும். அப்போது அந்த நிறுவனம் கையாளும் சொத்து மதிப்பை பார்ப்பது அவசியம்.

சொத்து மதிப்பு என்ற வுடனேயே எந்தத் திட்டம் அதிக சொத்தை கையாளுகிறதோ, அதில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. இரண்டு திட்டங்களின் தரக்குறியீடும் வருமானமும் சமமாக இருக்கும்போது எந்த நிறுவனம் குறைவான சொத்தை கையாளுகிறதோ, அந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதே சரி.  

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?


மிகச் சிறிய ஃபண்ட் வேணாமே!

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சில சமயங்களில் ஒரே விதமான வருமானத்தைக் கொடுக்கக்கூடிய நிறைய ஃபண்டுகள் நமக்கு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில், குறைவான தொகையை கையாளும் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இப்படி சொல்வதற்காக 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் கையாளும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். குறைந்தபட்சம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் கையாளுகிற ஃபண்டைத் தேர்வு செய்வது அவசியம்.

குறைவான தொகையை கையாளும் திட்டங்களில் புதிய முதலீட்டுக்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கும். பல முக்கிய பங்குகளில் இதுவரை முதலீடு செய்யாமல் இருந்திருக்கலாம். ஏற்கெனவே முதலீடு செய்துள்ள பங்குகளிலும் தங்களுடைய முழுமையான கோட்டாவை பயன்படுத்தாமலும் இருக்கலாம். தவிர, குறைவான தொகையை கையாளும் திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய வாய்ப்புண்டு. ஆனால், அதிக தொகையை கையாளும் திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் வருமானத்தை குறையவிடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருப்பார். சிறிய நிறுவனங்கள் பெரிதாக வளர வாய்ப்புண்டு. ஏற்கெனவே பெரிதாக வளர்ந்துவிட்ட நிறுவனங்கள் இன்னும் பெரிதாக வாய்ப்பு குறைவே.

போர்ட்ஃபோலியோ எப்படி?

அடுத்த முக்கிய விஷயம், போர்ட்ஃபோலியோ. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பு அதன் போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது என்று பார்ப்பது அவசியம். சில திட்டங்களின் பெயரிலேயே மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்றிருக்கும். கொஞ்சம் ரிஸ்க் அதிகம் என்றாலும், அதிக வருமானம் தரக்கூடிய மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில்தான் முதலீடு செய்வார் என்று நினைத்து அதன் போர்ட்ஃபோலியோவை போய் பார்த்தால், அங்கு லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்து வைத்திருப்பார்கள். வருமானம் கொஞ்சம் குறைந்தாலும் ரிஸ்க் வேண்டாம் என்று நினைத்தே ஃபண்ட் மேனேஜர்கள் இப்படி செய்திருப்பார்கள். இது நமது நோக்கத்தை நிறைவேற்ற விடாமல் செய்துவிடும். எனவே, போர்ட்ஃபோலியோவை தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

ஃபண்ட் மேனேஜர் புதியவரா?

அடுத்து, ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் அந்த ஃபண்டில் எத்தனை வருடமாக இருக்கிறார் என்று பார்ப்பது முக்கியம். காரணம், நாம் கடந்த ஐந்து வருட வருமானத்தைப் பார்த்து தேர்வு செய்திருப்போம். ஆனால், அந்தத் திட்டத்திற்கு புது மேனேஜர் வந்து ஒரு வருடம்கூட ஆகியிருக்காது. கடந்த ஐந்து வருடங்களாகக் கிடைத்த வருமானத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதற்குத்தான் ஃபண்ட் மேனேஜர்கள் எத்தனை ஆண்டுகளாக அந்த திட்டத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்கச் சொல்கிறேன்.

இதுவரை நான் சொன்னது ஒரு ஃபண்ட் குறித்த பண்டமென்ட்டல் விஷயங்கள். இனி கூடுதலாக, இரு டெக்னிக்கல் அணுகுமுறைகளையும் சொல்கிறேன்.

ஷார்ப் ரேஷியோ (Sharpe Ratio):

ஒரு ஃபண்டில் நாம் முதலீடு செய்வதன் நோக்கம் அதிக வருமானத்தை பெறத்தான். அதே சமயம் அந்த ஃபண்டில் முதலீடு செய்வதில் அதிக ரிஸ்க்கும் இருக்கக்கூடாது. ஷார்ப் ரேஷியோவை பார்ப்பதன் மூலம் ஒரு ஃபண்டில் இருக்கும் ரிஸ்க்கை நாம் அறியலாம். அதாவது, குறைவான ரிஸ்க் உள்ள பங்குகளில் முதலீடு செய்து அதிக வருமானத்தைக் கொடுக்கும் திட்டங்களே நல்ல திட்டங்களாக இருக்க முடியும். ஷார்ப் ரேஷியோ அதிகமாக இருக்கும் ஃபண்டுகள் ரிஸ்க் குறைவான ஃபண்டுகளாகும். ஷார்ப் ரேஷியோ 0.4-க்குமேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

பீட்டா (Beta)

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப ஒரு ஃபண்ட் எப்படி செயல்படுகிறது என்பதைக் குறிப்பிடும் அளவுதான் பீட்டா மதிப்பு. சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஒன்று என்று வைத்துக் கொள்வோம். பங்குச் சந்தை 10% வருமானம் கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட ஃபண்ட் 15% வருமானம் கொடுக்கும் என்று வைத்துக் கொண்டால், (இப்போது பீட்டா 1.5) சந்தை 10% இறங்கினால் இந்த ஃபண்டும் 15% இறங்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களால் வருமானம் அதிகம் மாறாத ஃபண்டுகளாகத் தேர்வு செய்வது முக்கியம். அப்படியானால் பீட்டா மதிப்பு ஒன்றுக்கு கீழே இருந்தால் நல்லது அல்லது ஒன்றுக்கு சற்று மேலே இருக்கலாம்.

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்!

நீண்ட கால நிறுவனங்களே பெஸ்ட்!

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கடன் திட்டங்களைப் பொறுத்தவரை ஃபண்டுகளைவிட நிறுவனங்களே முக்கியம். எந்த நிறுவனம் அதிக ஆண்டுகளாக கடன் திட்டங்களை சிறப்பாக நடத்தி வருகிறதோ, அந்தத் திட்டங்களையே தேர்வு செய்யலாம். காரணம், பங்கு சார்ந்த திட்டங்கள் என்னும்போது செபி மற்றும் ஆம்ஃபியின் விதிமுறைகளின்படியே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடக்க வேண்டும் என்பதால் அதில் பெரிய பிரச்னை எதுவுமிருக்காது. ஆனால், கடன் சார்ந்த திட்டங்களைக் கையாளும்போது நிறுவனங்களுக்கு என்று தனியாக முதலீட்டு கொள்கை இருக்க வேண்டும். நீண்ட காலம் செயல்படும் கம்பெனிகள்தான் கடன் திட்டங்களில் முதலீட்டுக்கான வழிமுறைகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதேபோல எந்த ஃபண்ட் அதிக நிதியை கையாளுகிறதோ, அந்தத் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி நமக்கு தேவை வருமானம்தான். அதனால் அதிக நிதியை கையாளும் திட்டம் மற்றும் அதிக ஆண்டுகள் சந்தையில் இருக்கும் திட்டங்களின் நீண்ட கால வருமானங்களை ஆராய்ந்து பார்த்து எதில் வருமானம் அதிகமோ, அதில் முதலீடு செய்யலாம்.

ரேட்டிங்கை கவனியுங்க!

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கடன் சார்ந்த ஃபண்டுகள், கடன் சார்ந்த திட்டங்களில்தான் முதலீடு செய்திருப்பார்கள். இந்த திட்டங்களின் சராசரி முதிர்வு காலம் எவ்வளவு என்று பார்க்கவும். உதாரணத்துக்கு, குறுகிய கால கடன் ஃபண்டுகளின் சராசரி முதிர்வு காலம் மூன்று வருடங்களுக்குமேல் இருந்தால் அது சரியான திட்டமாக இருக்காது. அதாவது, ஃபண்டின் காலமும், அது முதலீடு செய்திருக்கும் திட்டங்களின் முதிர்வு காலமும் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும்.

அடுத்து, கடன் ஃபண்டுகள் முதலீடு செய்திருக்கும் திட்டங்களின் சராசரி ரேட்டிங் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஏஏ (AA) ரேட்டிங் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

செலவைப் பாருங்க!

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்றாலும், கடன் திட்டமாக இருந்தாலும் சரி, எந்தத் திட்டங்களில் செலவு குறைவாக (ணிஜ்ஜீமீஸீsமீ ஸிணீtவீஷீ) இருக்கிறதோ, அந்த திட்டங்களில்தான் முதலீடு செய்யலாம். பங்கு சார்ந்த திட்டங்களுக்கு 1.5 முதல் 2 சதவிகிதமும், கடன் திட்டங்களுக்கு ஒரு சதவிகிதத்துக்கு அருகில் இருக்குமாறு தேர்வு செய்யவும். காரணம், செலவு குறைவாக இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்யும்போதுதான் வருமானம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

பேலன்ஸ்ட் ஃபண்ட்.

பேலன்ஸ்ட் ஃபண்டுகள் என்பது பங்குகள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் கலந்து முதலீடு செய்வது. இதிலும் பங்கு சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்டுகள் (அதிகபட்சம் 80% வரை பங்குகள்), கடன் சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்டுகள் (அதிகபட்சம் 80% வரை கடன் திட்டங்கள்)  என்ற இரு பிரிவுகள் இருக்கிறது. இவற்றுக்கென தனியாக வரைமுறைகள் வகுப்பது கடினம். இந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்யும்போது பங்கு சார்ந்த ஃபண்டுகளுக்கு பின்பற்றியதைப் போலவே தரக்குறியீடு, வருமானம் போன்ற அம்சங்களைக் கவனிக்க வேண்டும். .

தீர்ந்தது குழப்பம்! சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?


எவை பெஸ்ட் திட்டங்கள்?

மேலே  குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சில   ஃபண்டுகளை இங்கே பரிந்துரை செய்துள்ளேன். அவை இதோ...

பங்கு சார்ந்த திட்டங்கள்:

ஃபிடிலிட்டி ஈக்விட்டி.

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டைனமிக்

ஃபிராங்ளின் டெம்பிள்டன் புளூசிப்

பேலன்ஸ்ட் திட்டங்கள்:

ஹெச்.டி.எஃப்.சி. எம்.ஐ.பி. லாங் டேர்ம் (கடன் சார்ந்தது)

ரிலையன்ஸ் எம்.ஐ.பி. (கடன் சார்ந்தது)

ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் (பங்கு சார்ந்தது)

கடன் திட்டங்கள்:

டெம்பிள்டன் ஷார்ட் டேர்ம் இன்கம்

ஹெச்.டி.எஃப்.சி. ஹைய் இன்ட்ரஸ்ட் ஷார்ட் டேர்ம்

ஜே.எம். மணி மேனேஜர் சூப்பர்

இவை ஒரு சாம்பிள்தான். இதைப் போலவே நீங்களும் நல்ல ஃபண்டுகளை அடையாளம் கண்டு  லாபமடைய வாழ்த்துக்கள்'' என்று  முடித்தார், ஸ்ரீகாந்த் மீனாட்சி.

-வா.கார்த்திகேயன்.
படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism