Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

Published:Updated:
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டந்த இதழில் கண்டிப்பாக ஸ்டாப்லாஸ் லெவல்களை வைத்தே வியாபாரம் செய்யவும் என்று சொல்லியிருந்தோம். நிஃப்டி கடந்த ஐந்து நாட்களுமே  குறைந்தபட்சமாக 6 பாயின்டுகளும் அதிகபட்சமாக 48 பாயின்ட்களுமாக இறங்கியே இந்த வாரம் முழுவதும் இருந்தது.  ஐந்து நாட்களுமே நிஃப்டி ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வந்தது. ஐந்து நாட்களில் தினசரி ஹை-லோவுக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்தபட்சம் 49 பாயின்ட்களும் அதிக பட்சமாக 101 பாயின்ட்களும் இருந்தது. அதிலும் மூன்று நாட்கள் 70 பாயின்ட்களுக்கு மேலேயே இண்டெக்ஸில் இருக்கும் ஸ்டாக்குகளின் வால்யூமும் ஓரளவு நன்றாகவே இருந்தது. வெள்ளிக்கிழமை குளோஸிங் லெவல்களை வைத்துப் பார்த்தால் சந்தை சற்றே இறங்குவதற்கு வாய்ப்பு இருப்பதைபோல் தோன்றுகிறது.
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்

ஆனாலும் சந்தை 45 நிமிட சார்ட்டில் ஒரு முக்கியமான சப்போர்ட்டின் அருகே வந்து குளோஸ் ஆகியிருப்பதால் திடீர் ரிவர்ஸல்களுக்கு வாய்ப்பு நிச்சயமாய் உண்டு. அதிலும் வரும் செவ்வாயன்று வெளிவரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் பாலிசி ரிவ்யூ சந்தைக்கு சாதகமாக இருந்தால் சட்டென மேலே செல்லும் வாய்ப்பு அதிகமாகவே இருப்பதாய் நினைக்கிறோம்.

திங்களன்று கலவையாகவும், செவ்வாயன்று பாலிசி ரிவ்யூவை பார்த்த பின்னருமே சந்தையின் இறக்க ஏற்றம் பெரிதளவு முடிவா கும். அடுத்த மேஜர் சப்போர்ட் தினசரி சார்ட்டின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

தினசரி சார்ட்டை வைத்துப் பார்த்தால் 5640 வரை இந்த இறக்கம் செல்லலாம். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் 5950 வரை செல்லாதவரை உறுதியான ஏற்றம் இருக்கும் என்று நம்பி சந்தையில் இளநிலை டிரேடர்கள் இறங்க வேண்டாம்.

சந்தையின் போக்கை அனுசரித்தே குறைந்த அளவில் வியாபாரம் செய்யவும். மொத்த சந்தையின் சூழ்நிலையைப் பார்ப் பதைத் தவிர்த்து தனிப்பட்ட பங்கு களின் மூவ்களை கண்காணித்து வியாபாரம் செய்ய வேண்டிய தருணம் இது. கவனம்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism