. ''மி.யூச்சுவல் ஃபண்ட்டா? அதில் பணம் போடணும்னா ஆயிரக்கணக்கில் தேவைப்படுமே! நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது'' என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை! லட்சங்களிலும் கோடிகளிலும் புரள்பவருக்குதான் மியூச்சுவல் ஃபண்ட் என்ற நினைப்பை இனி மூட்டை கட்டி வையுங்கள். மாதம் தோறும் உங்களுக்கு மிச்சமாகும் ஐந்நூறு ரூபாயைக் கூட ஃபண்டில் போட்டு, உங்கள் சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம்....
பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தாலும், கீழே இறங்கிக் கிடந்தாலும், சிறுகச் சிறுக முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ஜெயித்தவர்கள் சொல்லும் பாலபாடம். மாதம் தவறாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதற்கு மிகவும் ஏற்றது மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி. முறை. இதில் முதலீடு செய்யப்படும் பணம் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய தொகையாக வளர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மாதம்

100 கூட போதும்..!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களைப் பெரிதும் மதிக்கின்றன. அடித்தட்டு மக்களும் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு வசதியாக குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை மிகவும் குறைவாக வைத்திருக்கிறார்கள். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய

500-ஐ பெரும்பாலான நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய

250 இருந்தாலே போதும். ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் எனில்,

100 இருந்தாலே போதும்! ஆக மாதாமாதம்

100 சேமிக்கும் எவராலும் ஃபண்டில் சேர்ந்து எளிதாகச் சேமிக்க முடியும்.

சேமிக்க சில ஐடியாக்கள்..!

நல்ல யோசனைதான். ஆனால் பணத்தை எப்படிச் சேமிப்பது என்பதுதானே உங்கள் கேள்வி? கவலையை விடுங்கள்! சிறுகச் சிறுக சேமிக்க சில சூப்பர் ஐடியாக்கள் இதோ...

நண்பர் ஒருவருக்கு ஒரு வினோதப் பழக்கம் உண்டு. தனக்கு வரும்

5 நாணயங்களை செலவு செய்யாமல் சேர்த்து வைப்பார். மாத இறுதியில் சேர்ந்திருக்கும் மொத்த காசையும் எடுத்து முதலீடு செய்வார். நீங்களும் இதைப் போல சேமித்து மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யலாம்.

பிறந்த நாள், தீபாவளி, கல்யாண நாள், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பரிசுத் தொகை அல்லது அதில் ஒரு பகுதியை ஃபண்டில் போடலாம்.

பாக்கெட் மணியின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தி, அந்தச் சேமிப்பை எஸ்.ஐ.பி. முறையில் ஃபண்டில் முதலீடு செய்து வரச் சொல்லலாம். இதன் மூலமாக குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கம் ஏற்படுவதோடு பங்குச் சந்தை, பணச் சந்தை பற்றிய அறிவும் வளரும்.

டிரைவர், சர்வர் போன்ற வேலையில் இருப்பவர்களுக்கு மாதச் சம்பளம் போகக் கிடைக்கும் 'தினப்படி’யைச் சேமித்து எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யலாம்.

சாஃப்ட்வேர், பி.பி.ஓ போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாட்டு படி கிடைக்கும். மேலும் புராஜெக்ட் விஷயமாக வெளியூருக்கு 15 நாள், 30 நாள் என்று செல்ல நேர்ந்தால் தினப்படி, தங்குமிடப்படி கிடைக்கும். இந்த அலவன்ஸ்களில் மீதமிருக்கும் தொகையை ஃபண்ட்களில் முதலீடு செய்து வரலாம்.

தபால் அலுவலகங்களில் மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், அதிலிருந்து கிடைக்கிற மாத வட்டியை ஃபண்டில் முதலீடு செய்யலாம். உங்களுடைய முதலீடு தபால் அலுவலகத் திட்டத்தில் பாதுகாப்பாக இருக்கும். அதே நேரத்தில், வட்டியை ஃபண்டில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

* பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்கள் ரிஸ்க் இல்லாத 'இன்கம் ஃபண்ட்களில் முதலீடு செய்ய லாம். இது தொடர் வைப்பு (ஆர்.டி) போல ஓரளவு பாதுகாப்பான வருமானத்தை ஈட்டித் தரும்.

குறுகிய காலத் தேவைகளுக்காக முதலீடு செய்பவர்களும் இன்கம் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் தொடங்கலாம்.

ஆண்டுக்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுபவர்கள், அந்தத் தொகையை மாதத் தவணையாகப் பிரித்து இன்கம் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். வருட இறுதியில் இந்தப் பணத்தை எடுத்து பிரீமியத்தைச் செலுத்தலாம். சிதறிக் கிடக்கும் சிறுசிறுப் பூக்களைத் தொடுத்து ஒரு பூமாலையைக் கட்டுவது போல் நம்மால் முடிந்தளவு மாதந்தோறும் எஸ்.ஐ.பி. முறையில் சேமித்து எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொள்ள முடியும்.