Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

Published:Updated:
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!


கடந்த வாரம் 'சப்போர்ட்’ என்றால் என்ன என்பது பற்றி பார்த்தோம்... இந்த இதழில் 'ரெசிஸ்டன்ஸ்’ குறித்து பார்க்கலாம். சப்போர்ட் காரணமாக இறங்கிய விலையானது திரும்பி மேலே செல்ல ஆரம்பிக்கிறது இல்லையா? அப்படி திரும்பும் விலை ஒரு அளவுக்கு சென்றவுடன், அதற்குமேல் போகாது என்று நினைத்து பலர் விற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி விற்கும்போது விலை மீண்டும் கீழே வருகிறது. பின்னர் 'சப்போர்ட்’ கிடைத்ததும் மீண்டும் மேலே ஏற ஆரம்பிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

து எப்படி இருக்கிறது என்றால், நிறைய கிளைகள் உள்ள ஒரு மரத்தில் ஏறும் மனிதன், வேகமாக ஏறும்போது தலையில் ஒரு கிளை இடித்தால் சற்று தடுமாறிப் போய்விடுவான். இருப்பினும் கொஞ்ச நேரத்தில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலே ஏறிச்செல்ல ஆரம்பிப்பான் இல்லையா?

அப்படி கிளையைப் போல விலை ஓரளவுக்கு மேலே போனவுடன் விற்பனை நிறைய நடந்து அதை வீழ்ச்சியடையச் செய்வதுதான் ரெசிஸ்டன்ஸின் வேலை. கீழே கொடுத்துள்ள நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள்...

##~##
நவம்பர் 2010 இறுதியிலும் டிசம்பர் 2010 ஆரம்பத்திலும் இரண்டு முறை ஒரு லெவலில் சப்போர்ட் எடுத்துள்ளது. ஜனவரி  2011 கடைசியில் அந்த சப்போர்ட் லெவல்களை உடைத்து கீழே இறங்கியது. பின்னர் அந்த சப்போர்ட் லெவல்களே ரெசிஸ்டன்ஸ் லெவல்களாக மாறி, அந்த லெவலை வந்தடைந்த வுடன், இரண்டு முறை கீழ்நோக்கிச் சென்றிருக்கிறது. மார்ச் 2011 இறுதியில் அந்த ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைத்து தாண்டிய பின்னர் நன்றாகவே மேலே சென்றுள்ளது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகின்றதல்லவா?

சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸை பற்றி மொத்த மாகப் புரிந்துகொள்ள அதற்கான காரண காரியங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று 'செல்ஃப் ஃபுல்ஃபில்லிங் புரொபெசி’. இது பாப்புலரான தியரி. அதாவது எதிர்காலத்தில் ஒரு விஷயம் இப்படித்தான் நடக்கும் என்று நமக்கு நாமே ஒரு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, அதற்கேற்ப நடந்து, கடைசியில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே அந்த விஷயத்தை நடக்க வைத்து விடுவது!

ஓர் உதாரணம் மூலம் இதைச் சொன்னால் இன்னும் நன்றாகப் புரியும்... உங்கள் அலுவலகத்தில் ஆபிஸ் பையன் வேலைக்கு புதிதாக அருண், தருண் என இரண்டுபேர் சேருகிறார்கள். அருண் படிக்க வசதியிருந்தும் படிப்பு எள்ளளவும் மண்டையில் ஏறாத மக்கு. தருண் பள்ளிக்குப் போக வழியில்லாததால் படிக்காத புத்திசாலி.  ஆனால், பார்த்த முதல் பார்வையிலேயே உங்களை கவர்ந்துவிடுகிறான் அருண். அதனால் அவன் புத்திசாலியாகவும் சூட்டிகையாகவும் இருப்பான் என்று மனதுக்குள்ளாக முடிவு செய்து விடுகிறீர்கள். ஆனால், தருணை மக்கு பிளாஸ்திரி என்று முடிவு செய்து விடுகிறீர்கள்.

புத்திசாலி என்று நீங்கள் நினைத்து விட்டதால் அருணிடமே பல வேலைகளைக் கொடுக்கிறீர்கள். அவன் தட்டுத் தடுமாறி அந்த வேலைகளை முடித்தாலும்கூட, அவன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் இருப்பதால், வெற்றி பெற்றபின் அவன் தட்டுத் தடுமாறித்தான் செய்தான் என்பது எல்லாம் உங்களுக்கு மறந்துவிடும். அவன் ஒரு சூப்பர் ஆசாமியாகவே எப்போதும் தெரிவான்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

அதேசமயத்தில், தருணிடம் ஒரு வேலையைக் கொடுத்து, அதில் அவன் சிறிதே தடுமாறினாலும், ''நீ வேஸ்ட்டுடா. அருணைப் பார்'' என்பீர்கள். உங்களிடம் ஆரம்பித்த இந்த 'செல்ப் ஃபுல்ஃபில்லிங் புரொபெசி’ ஒரு தொற்றுவியாதிபோல உங்களுடன் வேலை பார்க்கும் அனைவரையும் தொற்றி, அருணை ஒரு சூப்பர் ஆபிஸ் பாயாக மாற்றிவிடும். தருணை மட்டம் தட்டி தட்டி, அவன் உங்கள் ஆபிஸில் ஷைன் பண்ண முடியாமல் போய் வேலை யைவிட்டே போய்விடுவான்.

சரி, இது சந்தையில் எங்கே வருகிறது என்கிறீர்களா? சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸும் இந்த செல்ப் ஃபுல்ஃபில்லிங் புரொபெசி யினால்தான் உண்டாகிறது. இந்த விலையில் இன்ன ஸ்டாக் காஸ்ட்லி. இந்த விலையில் இன்ன ஸ்டாக் சீஃப் என நீங்களாகவே மனதில் ஒரு முடிவை எடுத்து விடுவீர்கள். அதேபோல்தான் சந்தையில் இருக்கும் மற்றவர்களும். அனைவர் மனதிலும் அதிக விலை என்று நினைக்கப்படும் ரேட்தான் ரெசிஸ்டன்ஸாக ஆகிறது. அந்த விலையை தாண்டி ஏற முற்படும்போது ஷேரை விற்க ஆரம்பிக்கிறீர்கள். சீஃப் என்று நினைக்கப்படும் ரேட்தான் சப்போர்ட்டாக ஆகிறது. அந்த விலையைத் தாண்டி இறங்கும் போது ஷேரை வாங்க ஆரம்பிக் கிறீர்கள். இப்படி இந்த விலை வரை இறங்கி வந்தால் ஏற ஆரம்பித்து இந்த லெவல் வரை சென்றடையும் என்று நீங்களாகவே மனதில் நினைத்துக்கொண்டு செயல்பட்டு அந்தந்த விலையை அடைந்து விடச்செய்வதுதான் செல்ப் ஃபுல்ஃபில்லிங் புரொபெசி என்பதாகும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

மற்றுமொறு கோணத்தில் சப்போர்ட்/ரெசிஸ்டன்ஸை விளக் கினால் அது நினைவாற்றலின் எல்லை, வலி, மற்றும் வருத்தம் (மெமரி, பெய்ன், ரெக்ரட்) என்ற மூன்றினால் வருவது என்று சொல்லலாம். நமது நினைவாற்றல் ஒரு ஷேரை ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கவும், அதே ஷேரை ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கவும் வைக்கிறது.

ராகவன் சந்தையைத் தொடர்ச் சியாக கண்காணித்து வரும் ஒரு முதலீட்டாளர். அவர் 100 ரூபாயிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு ஷேரின் விலை 65 ரூபாயில் நின்று, திரும்பவும் ஏற ஆரம்பிப்பதைப் பார்க்கிறார். அந்த சம்பவத்தை தன்னுடைய நினைவில் நிறுத்தி வைத்துக் கொள்கிறார். அடுத்தமுறை 65 ரூபாய்க்கு இறங்கி வரும்போது சட்டென யோசிக் காமல் வாங்க ஆரம்பிக்கிறார். ராகவனைப் போலவே அந்த ஷேரை வாட்ச் பண்ணும் அனைவரும் வாங்கும்போது விலை ஏற ஆரம்பிக்கிறது.

அதேபோல் 50 ரூபாயில் இருந்து ஏறிக்கொண்டிருந்த மற்றொரு ஷேரின் விலை 83 ரூபாய்க்கு வந்த பின் இறங்க ஆரம்பித்ததை தனது ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறார் ராகவன். அடுத்தமுறை அதே ஷேர் 83 ரூபாய்க்கு வந்தவுடன் விற்க ஆரம்பிக்கிறார். அவரைப் போலவே பலரும் விற்க ஆரம்பிக்க, ஷேரின் விலை இறங்க ஆரம்பித்து விடுகிறது.

மேலேசொன்ன உதாரணத்தில் 65 ரூபாய்க்குமேல் விலையை இறக்க முடியாமல் போகும்போது கரடிகள் கஷ்டப்படுவார்கள். சப்போர்ட் லெவலில் கரடிகள் வலியையும், வருத்தத்தையும் அடைவார்கள். இன்னொரு உதாரணத்தில் 83 ரூபாயைத்தாண்டி ஏற்ற முடியாமல் போகும்போது இந்த சூழ்நிலை காளைகளுக்கு உண்டாகும். ரெசிஸ்டன்ஸ் லெவலில் காளைகள் வலியையும் வருத்தத்தையும் அடைவார்கள். சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன் ஸின் வலிமையை (ஸ்ட்ரெங்த்) வைத்தே அது எந்த அளவுக்கு முக்கியமானது என்று முடிவு செய்யலாம். சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸின் வலிமையை  (ஸ்ட்ரெங்த்) எப்படி கண்டு கொள்வது என்று அடுத்தவாரம் பார்ப்போம்.

வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism