Published:Updated:

கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...

கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...

கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...

கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...

Published:Updated:
கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...


காலணிகள் இல்லாமல் கதவு தாண்டி செல்வதற்கே யோசிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை காலணிகள் என்பது நவீனத்தின் அடையாளமாக மட்டுமல்ல, அத்தியாவசிய தேவையாகவும் ஆகிவிட்டது. 'கம்பிக்கு டாட்டா! காலணிக்கு பேட்டா!’ என்று சொல்லுமளவிற்கு மிகவும் பாப்புலரான பாட்டா நிறுவனம்தான் இந்த வாரம் கம்பெனி அலசலில்.

லகளவில் தினசரி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாட்டாவின் தயாரிப்பை வாங்குகிறார்கள். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இருபது நாடுகளில் இருபத்தேழு தொழிற்சாலைகள் என மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட ஒரு குரூப்பின் இந்திய பிரிவுதான் இந்த பாட்டா இந்தியா லிமிடெட்..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிராண்ட் மட்டும் போதுமா?

அட! கம்பெனியும் பழசு. கடை களும் பழசு என்று நினைக்கலாம். சமீபத்தில் இந்த கம்பெனி ஷோரூம்களில் நடந்துள்ள பளிச் மாறுதல்களை கொஞ்சம் கவனியுங் கள்.  பழைய சூழ்நிலையில் இருந்து இப்போது கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாக நல்ல லாபத்திற்கு திரும்பிவிட வாய்ப்புள்ளது என் பதைக் கூறத்தான் இந்த அலசல்.

 இண்டஸ்ட்ரி எப்படி?

கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...

உலகளவில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் காலணி தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. சீனா கிட்டத்தட்ட 15 பில்லியன் காலணிகளையும், இந்தியா கிட்டத்தட்ட 2.1 பில்லியன் காலணிகளையும் தயாரிக்கிறது. லெதர் இண்டஸ்ட்ரி லைசென்ஸிங்கிலிருந்தும் ரிசர்வேஷனிலிருந்தும் விலக்கப் பட்ட, 100 சதவிகித எஃப்.டி.ஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஒரு இண்டஸ்ட்ரி இது.

சரித்திரம் எப்படி?

##~##
செகோஸ்லோவாகியாவில் 1894-ல் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக் கப்பட்ட பாட்டா குழுமத்தின் ஒரு அங்கம்தான் பாட்டா இந்தியா லிமிடெட். இந்தியாவில் 1931-ல் ஆரம்பிக்கப்பட்டு பல பெயர் மாற்றங்களுடன் இன்று வரை செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஐந்து இடங்களில் தொழிற்சாலைகளையும் 6,800 தொழிலாளர்களையும் தன்வசம் வைத்திருக்கிறது இந்த நிறுவனம். சுமார் 1,200 ஷோரூம்கள் மூலம்  1,20,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.இருப்பினும்  2000 -ம் ஆண்டு முதல் 2005 வரை நடந்த கம்பெனியின் சுமாரான செயல்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த கம்பெனியில் முதலீடுகளை செய்ய வேண்டும். ஏனென்றால், பழக்கங்கள் அவ்வளவு சுலபத்தில் மாறிவிடுவதில்லையே! 2000 - 2009 வருடங்களில் ஐந்துமுறை டிவிடெண்ட் கொடுக்கத்தவறிய கம்பெனி இது. காரணம் லாபமின்மையைத் தவிர வேறோன்றுமில்லை.

உருப்படியான விஷயம் ஏதாவது உண்டா?

பிராண்டை தவிர வேறு உருப்படியான விஷயம் என்ன என்று பார்த்தால் இரண்டு விஷயங்கள் தட்டுப்படுகின்றன.  ஒன்று வேறெந்த காலணி தயாரிப்பாளர்களிடமும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மட்டும் 1,200 ஷோரூம்களை தன்வசம் கொண்டிருப்பது. அதிலும் பல இடங்களில் ஷோரூம் இருக்கின்ற இடங்கள் பாட்டாவிற்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றொரு  விஷயம் இந்த கம்பெனியிடம் இருக்கும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சொத்துக்கள்தான். தற்போதுதான் ரியல் எஸ்டேட்டின் ஒரு பகுதியை 50:50 ஜாயின்ட் வென்ச்சரில் டெவலப் செய்ய ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் நடந்த நல்ல விஷயங்கள் என்ன?

2010-ம் ஆண்டில் மட்டும் 108 புதிய ஷோரூம்களை திறந்துள்ளது. ஒவ்வொரு புதிய ஷோரூமும் 3,000 சதுர அடி. புதிய ஷோரூம்கள் உலகம் முழுவதும் உள்ள பாட்டா ஷோரூம்களைப் போலவே  டிசைன் செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு ஷாப்பிங் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கிறது.

கம்பெனி அலசல் - பாட்டா இந்தியா லிமிடெட்...

வியாபாரப் பிரிவுகள் என்னென்ன?

ஹோல்சேல், இண்டஸ்ட்ரியல் சேஃப்டி, இன்ஸ்ட்டிடியூஷனல் சேல்ஸ் மற்றும் பிராண்டிங் டிவிஷன் என நான்குவிதமான ஏரியாவாக இதன் பிஸினஸ் செயல்பாடு இருக்கின்றது.  மிகவும் நஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருந்த ஹோல்சேல் பிரிவு தற்சமயம் லாபத்தில் நடக்கத் தொடங்கியுள்ளது.  இதற்காகவே புதிய பிராண்டுகள் உருவாக்கப்பட்டு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இண்டஸ்ட்ரியல் சேஃப்டி டிவிஷனில் வெப்பம் மற்றும் எண்ணெய் புகாத காலணிகள், லைட் வெயிட் காலணிகள் இதன்  தயாரிப்பில் பிரபலமானது.

இன்ஸ்ட்டிடியூஷனல் சேல்ஸில் பாரா மிலிட்டரி ஃபோர்ஸ், ஏர்லைன்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன், டிபென்ஸ், ஓட்டல், சுரங்கம் என பல தொழில்களுக்கு அவரவர் தேவைக்கு ஏற்றதுபோல காலணிகளை வடிவமைத்து தருகிறது. பிராண்டிங் டிவிஷன் பவர், பப்பிள் கம்மர், ஹஷ் பப்பீஸ், டாக்டர் ஸ்கோல்ஸ் போன்ற பிராண்டுகளை விற்கிறது. பாட்டாவின் தொழிற்சாலைகள் இந்த மாறுதல்களுக்கு ஏற்றது மாதிரி மாற்றியமைக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்காலம் எப்படி?

சில்லறை வர்த்தகத் துறையில் போட்டி ஆரம்பித்திருக்கின்ற வேளையில் வாடிக்கையாளர் கள்  உலகத்தரம் வாய்ந்த பொருட் களையே நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்.  விலையை பற்றிய கவலையும் சற்றே குறைந்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில் ஃபேஷனும் தரமும்தான் காலணி களை வாங்குவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.  இன்றைக்கு 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட காலணி தயாரிப்பு அன் - ஆர்கனைஸ்டு செக்டாரில் செய்யப்பட்டு வருவதால்,  பாட்டா போன்ற நிறுவனங்கள் தங்களை விரிவாக்கம் செய்துகொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பது தெள்ளத்தெளிவு.

இந்த வருடத்திலும் மத்திய மற்றும் சிறிய நகரங்களில் 60 ஷோரூம்கள் வரை திறக்க திட்டம் வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதை தவிர பாட்டா ஆன்லைன் ஷாப்பிங் வசதியும், இலவசமாக வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி கொடுக்கும் திட்டமும் செயல்முறைக்கு முழுவீச்சில் வரவுள்ளது.

எண்பது வருடங்களுக்கு மேலாக பிராண்டில் புலியாகவும், சில ஆண்டுகளுக்கு முன்வரை லாபத்தில் எலியாகவும் இருந்த இந்த கம்பெனி லாபத்திலும்  புலியாவதற்கான முயற்சிகளை எடுத்துவருவது வெளிப்படையாகத் தெரிவதால் இந்த கம்பெனியின் ஷேரை விலை குறைய குறைய நீண்டகால முதலீட்டிற்கு வாங்கிப்போடலாம். கொஞ்சம் அதிகப்படியான ரிஸ்க்கை எடுத்தால் சற்று அதிகமான ரிட்டர்ன் கிடைக்க வாய்ப்புள்ளது போல் தெரிகின்றது என்பதுதான் எங்கள் டீமின் முடிவு.

நாணயம் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism